சூரியன்
சூரியன் கண்னிற்கு நோயும் தலை வலியையும் , காய்ச்சலையும் தருகிறது அதுமட்டுமில்லாமல் , பசியின்மை, வயிற்றுப்போக்கு, இதய நோய், பித்தம், தாகம், வெய்யில் வெப்பத்தாக்கு நோய். போன்றவற்றை
தருகிறது
சந்திரன்
சந்திரன் பொதுவாக ஒரு ஜாதகத்தில் பாலியல் நோய்கள், தோல் நோய்கள் மற்றும் குளிர் இருமல், கபம், சின்னம்மை அல்லது தட்டம்மை, சோம்பல், மண்ணீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், மன நோய், வலிப்பு நோய், டைபாய்டு, சைனஸ், கண் நோய்கள், வீக்கம், இரத்தம் அசுத்தங்கள், பகட்டு,
வயிறு வலி, பைத்தியம், குளிர் கபசுரம்.போன்றவற்றை தருகிறது .,சந்திரன் பலமிழந்தால் தோல் வியாதி
தவிர்க்க முடியாததொன்றாகும்
செவ்வாய் (குஜன்)
குஜன் என்று அழைக்கப்படுகின்ற செவ்வாய் ஒரு மனிதனுக்கு விபத்துகள், வெட்டுக் காயங்கள், விந்து இழப்பு, நாய்க்கடி, இரத்த குறைபாடு, இரத்த இழப்பு, இரத்த அழுத்தம், இதய நோய், மலச்சிக்கல், இரத்த சோகை, பித்த நீர், தாகம் போன்றவற்றை தரும் ..இரத்த சம்பந்தமான நோய்களுக்கு முதல் காரணம் செவ்வாய் தோஷம் பெற்றிருப்பது
புதன்
வயிற்று கோளாறு, தொழுநோய், குழந்தையின்மை, குடல் கோளாறு, தோல் நோய்கள், மன நிலை தடுமாற்றம், படை, சொறி, சிரங்கு, தொண்டைப் புண், டான்சில்கள்,
ஊமை, வழுக்கை, வட்டப் படை, வெண் குஷ்டம்.
வியாழன் (குரு)
இது முக்கியமாக பெண்களுக்கு பார்க்க வேண்டும் குடலிறக்கம், மூச்சுக்குழாய் அழற்சி, ஈரல் நோய்கள், மஞ்சள் காமாலை..பெண்களுக்கு கர்ப்ப பாத்திரத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது ஜாதகத்தில் குருவின் இருப்பு தான்
சுக்கிரன்
நீசம் பெற்ற சுக்கிரன் சுப கிரக திருஷ்டி இல்லை என்றால் தூக்கம் இன்மை ஆண்மை கோளாறு போன்றவையும் ..அது மட்டுமில்லாமல் பலம் இழந்து நிற்கும் சுக்கிரனால் ஜாதகருக்கு பாலியல் நோய்கள், கருப்பை கோளாறுகள், கண் நோய்கள், சளி மற்றும் சுவாசம், நீரிழிவு, இரத்த சோகை, தோல் நோய், கருப்பை நோய்கள், கருக்கலைப்பு.போன்றவை தரலாம்
சனி
சோம்பல், வாயு தொல்லைகள், வாத நோய், கீல்வாதம், குறைபாடுள்ள பேச்சு, பல் வியாதி, அஜீரணம், புண், ஆஸ்துமா.போன்றவை ஏற்படலாம்..
ராகு
கண்புரை வரலாம் பல் வியாதிகள் தரும் அம்மை, தொழுநோய், தற்கொலை செய்து கொள்வது உடல் வலி மற்றும் திக்குவாய், மண்ணீரல் வியாதிகள், வாத நோய், திடீர் மரணம், தற்கொலை அல்லது கொலை , பாலியல் முறை கேடு, ஓரினச்சேர்க்கை, லெஸ்பியன், மிருகங்களுடன் பகை, பாம்பு கடி, பைத்தியம்.போன்றவை தரும் சுப கிரக பார்வை பட்டால் விமோசனம் உண்டு .
கேது
கேதுவின் பலா பலன்கள் ஏறக்குறைய ராகுவை போன்று தான் ,திடீர் மரணம், கொலை, பசி, தோல் வெடிப்புகள்,பாம்புக்கடி, வைரஸ் காய்ச்சல், கட்டி. போன்றவை
மேற்குறிய பலன்கள் யாவும் சுப கிரக பார்வையோ அல்லது குறிப்பிட்ட கிரகம் பலம் பெற்றோ காணப்பட்டால் நோய்களின் பாதிப்பு குறையும் அல்லது நோய் அவர்களை சீண்டாது - Article by tamil astrologer ragav