தேங்காய் என்பது ஒரு மிகப்பெரிய சக்தி என்று நாம் அதை ஏன் கருதுகிறோம் ? தேங்காய், எலுமிச்சைப் பழம், பூசணிக்காய் போன்றவை நம் அன்றாட விழாக்களில் இருக்கட்டும் சடங்குகளாக இருக்கட்டும் பலி கொடுக்கக்கூடிய பொருட்களாக பயன் படுத்த படுகின்றன . எப்பொழுதும் உயிருள்ள பொருட்களை தான்
நாம் பலி கொடுக்க முடியும் . எடுத்து காட்டாக எலுமிச்சை கனியை புதிய வாகனத்தினுடைய சக்கரத்தில் வைத்து பலி கொடுப்பதை கண்டிருப்பீர்கள் . அதேபோல நாம் இந்த பூசணிக்காயையும் பலி கொடுப்போம்.
வேண்டுதல்கள், நம்முடைய எதிர்மறை எண்ணங்கள் இதையெல்லாம் உள்வாங்கக்கூடிய சக்தி உண்டு தேங்காய்க்கு உண்டு ஆதலால் தான் பிரம்மதூபமாக தேங்காயைப் நம் தேசத்தில் பலரும் பார்க்கிறார்கள் . சில நூல்கள் பிரம்மனுடைய அம்சம் என்று தேங்காயைச் சொல்கிறது.
ஏனென்றால் பிரம்மனுக்கு முக்கண், அதாவது மூன்று கண் இருப்பது போல, தேங்காய்க்கும் மூன்று கண்கள் இருக்கிறது. பெரிய தெய்வ தோஷங்கள் பூர்வ புண்ணிய தோஷங்கள் இவை நம்மை விட்டு அகல வேண்டும் என்றால் தேங்காயை உடைத்து கண் இருக்கும் முடியில் நெய்யோ அல்லது நல்லெண்ணெயோ விட்டு அதில் திரி போட்டு ஏற்றுவார்கள் இதனால் பெரிய பெரிய தோஷங்கள் நீங்கும் என்று நம்பிக்கை
அதுபோல் தேங்காயை சபரிமலை போன்ற பெரிய கோவிகளில் உருட்டி வழி படுவார்கள்..நம் எண்ண ஓட்டங்களை உள்வாங்குகின்ற சக்தி தேங்காய்க்கு உண்டு நாம் என்ன நினைத்து உருட்டிக் கொண்டு போய் விடுகிறோமோ அது தான் நிறைவேறும்.
நம்முடைய இந்த நல்ல எண்ண ஓட்டங்களை நாம் அந்த தேங்காய்க்குள் திணிக்கிறோம். ஆனால் அதுபோல் மற்ற பொருட்களின் மீது நாம் திணிக்க முடியாது. ஏனென்றால் எல்லாவற்றிற்கும் அந்தச் சக்தி கிடையாது. தேங்காய்க்கு அந்த அபூர்வ சக்தி உள்ளது. அதன் மூலமாக அதை நாம் செய்யும் போது, நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும். அதனால்தான் தேங்காய் முக்கியப் பரிகார பொருளாக பல நிகழ்ச்சிகளில் இருக்கின்றது இருக்கிறது.- Article by tamil astrologer ragav
0 comments:
Post a Comment