புதன் நரம்பு மண்டலத்தை ஆளுகின்ற கிரகம். அகலமான நெற்றியை பெற்றவர்களின் ஜாதகத்தில் புதன் 12ம் வீட்டில் அமைவார் ஒற்றைத்தலைவலி போன்ற பிரச்சனை தருவது புதனின் நிலையே ஆகும் . அடிக்கடி கை கால்கள் மரத்துப்போவதற்குக் நரம்பியல் பிரச்சனைகளுக்கான கரணம் போன்றவை புதன்தான்.
லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் புதன் அமையப்பெற்றவர்கள் கடினமான பணிகளைச் செய்யும்போது அடிக்கடி வலது கையை உதறும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள் என்று சில மருத்துவ ஜோதிட நூல்கள் கூறுகின்றது இனி அடுத்ததாக குருவிற்கு வருவோம் உடலில் உள்ள கொழுப்புப் பகுதியைக் கட்டுப்படுத்துகின்ற பணியைச் குரு தான் செய்கிறது. பருமனான உடலமைப்பைப் பெற்றவர்களுக்கு ஜாதகத்தில் குருவின் நிலை வலுவானதாக இருக்க வேண்டும் . தைராய்டு பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு ஜாதகத்தில் குரு கண்டிப்பாக வலு இழந்த நிலையிலேயே காணப்படும் . லக்னம் அல்லது 12ம் வீட்டினில் குரு வலுவிழந் தால் தைராய்டு சுரப்பிகளின் காரணமாக குறிப்பாக பெண்களுக்கு முகம் வீங்கியிருக்கும்.
மேலும் இவர்கள் டான்சில்ஸ் பிரச்னைகளுக்கும் ஆளாவார்கள். ஆறு மற்றும் ஏழாம் வீட்டினில் குரு அமர்ந்தால் பெரிய அகலமான பாதங்களைப் பெற்றிருப்பார்கள். பொதுவாக .குரு ஜாதகத்தில் அமையும் இடத்தின் உடல் பாகம் ஜாதகருக்கு வாழ்வில் மிக முக்கியமானதாகும் . நான்கு அல்லது ஒன்பதாம் வீடுகளில் குரு அமர்ந்தால் மத்திம வயதில் முதுகுவலி பிரச்னை தந்து ஆப்ரேஷன் தரலாம் . ஏனெனில் இவர்கள் அதிக எடையைக் குனிந்து தூக்குபவர்களாக இருப்பார்கள் அல்லது அதிக நேரம் வேலை செய்பவர்களாக இருப்பார்கள் . அடிக்கடி குனிந்து நிமிர வேண்டிய சூழல் உருவாகும்போது முதுகு தண்டு பாதிப்படைவது இயற்க்கை தான்
jathagam science - Medical astrology article by tamil jothidar
Our Expert Astrologer at Astro Thoughts will guide you in all your concernsmarriage,money,time,health,career,family and any critical life decision
ReplyDelete