நிச்சயமாக ஒருவரது ஜாதகத்தில் காணப்படுகின்ற தோஷங்களுக்கும், அவரது உடல்நிலைக்கும் ஒரு ஆழமான தொடர்பு இருக்கும் . நாம் ஜோதிட சாஸ்திரத்தில் அடிக்கடி கேள்விப்படுகின்ற செவ்வாய் தோஷம், களத்ர தோஷம், புத்ர தோஷம், சர்ப்ப தோஷம் போன்றவற்றிற்கும் மனிதனின் உடல்நிலைக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு. இந்த தோஷங்களைத் தருகின்ற கிரகங்களின் தசாபுக்தி காலங்களில் அவை குறிப்பிடும் பாகங்களில் மனிதனின் உடல்நிலை பாதிக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம் . ஜெனிடிக்ஸ் துறையில்கூட மருத்துவ ஜோதிடர்கள் பல ஆய்வுகளை செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்
எடுத்து காட்டுக்கு ஒரே பரம்பரையைச் சேர்ந்த உருவ ஒற்றுமையை உடைய வம்சாவளியினரின் ஜாதக கட்டத்தில் குறிப்பிட்ட ராசிகளில் ஒரே மாதிரியான கிரக அமைப்பு இருக்கும். ஜாதகத்தில் ஒவ்வொரு கிரகமும் அமர்ந்திருக்கும் ராசியின் தன்மையைக் கொண்டு அவர்களது உடல் அமைப்பைப் பற்றிக்கூட அறிய முடியும். மனிதர்களின் உடலமைப்பு என்று சொல்வதை விட ‘பாடி லாங்க்வேஜ்’ என்ற, உடல் அசைவுகளை நிர்ணயிக்கும் பணியில் ஒரு மனிதனின் ஜாதகத்தில் சூரியன் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது . உதாரணத்திற்கு லக்னத்திலோ அல்லது 12ம் வீட்டிலோ அமர்ந்திருக்கும் சூரியன் முகத்தில் குறிப்பாக கண்களால் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தன்மையை உண்டாக்கும்.
2ம் வீடு அல்லது 11ம் வீட்டினில் சூரியன் இருக்கப் பிறந்தவர்கள் உணர்ச்சிவசப்படும்போது கைகளை நன்றாக வீசியும், இப்படி அப்படி ஆட்டியும் பேசுவார்கள். அதே போல ஆறு அல்லது நடனத்தில் சிறந்து விளங்குபவர்கள் ஜாதகத்தை எடுத்து பார்த்தால் ஏழாம் வீட்டில் நிச்சயம் சூரியன் சம்பந்தம் இருக்கும் . அதுபோன்று விளையாட்டு துறைகளில் இருப்பவர்கள் ஜாதகத்தில் சூர்யன் ஐந்தில் ஆதிக்கம் செலுத்துவார்
மேற்கத்திய ஜோதிட முறையில் சூரியன் அமர்ந்திருக்கும் ராசி அவரவரின் ஜென்ம ராசியாகக் கணக்கில் கொள்ளப்படுகிறது.
அடுத்ததாக கிரகங்களில் சந்திரனின் அமைவிடம் மிக முக்கியமானது. மனித உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் கிரகம் தான் இந்த சந்திரன். இந்தியர்கள் எதையும் உணர்வுபூர்வமாக அணுகுபவர்கள் என்பதால் இந்திய ஜோதிடத்தில் சந்திரன் அமர்ந்திருக்கும் ராசியே அவரவரின் ஜென்ம ராசியாக நிர்ணயிக்கப்படுகிறது.அசைவுகளை கட்டுப்படுத்துவதால் மேற்கத்திய நாடுகளில் சூரியன் இருப்பதை ஜென்ம ராசி ஆக்கினார்கள் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 2 அல்லது 11ம் இடத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவர்கள் எதிரில் உள்ளவரைத் தொட்டுப்பேசும் பழக்கத்தை உடையவர்களாக இருப்பார்கள்..மனம் பலம்
குறைந்து காணப்படுவார்கள்
லக்னத்திலும், 12ம் வீட்டிலும் சந்திரன் அமையப் பெற்றவர்கள் அடிக்கடி பல் மருத்துவரை நாடிச் செல்வார்கள். காஸ்மெட்டிக் பொருட்களால் அடிக்கடி பக்க விளைவினை சந்திக்கும் உடலமைப்பைப் பெற்றவர்களின் ஜாதகத்தில் சந்திரனின் நிலை நீசமாகவோ அல்லது வலுக்குன்றியோ இருக்கும் என்பதை
மறுப்பதற்கில்லை .
சந்திரனின் முக்கியமான வேலை என்ன வென்றால் ரத்தம், உமிழ்நீர் சுரத்தல் உள்பட உடலில் உள்ள திரவப்பொருட்களைக் கட்டுப்படுத்துவதே ஆகும் .
அடுத்த பதிவில் செவ்வாயை பார்க்கலாம்
medical astrology signs- vedic medical astrology- astrology body parts- medical astrology remedies
medical astrology predictions- medical astrology chart free
medical astrology pdf- planets and body parts astrology
0 comments:
Post a Comment