ராசிகளில் ஒற்றை ராசிகள் இரட்டை ராசிகள் என்று இரு வகை உண்டு ..முதலில் ஜாதகத்தில் லக்கினம் கண்டுபிடித்து அது ஒற்றை ராசி லக்கினமா ? இரட்டை ராசி லக்கினமா என்பதை அறியவேண்டும் . இதில் ஒற்றை ராசிகள் என்று அறியப்படுவது மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் கும்பம் ஆகும் இந்த இராசிகளில் எதாவது ஒன்றில் சனிக்கிரகம் அமர்ந்திருந்தால் அது ஆணுக்குரிய ஜாதகம் என்றும், இரட்டை இராசிகளான ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ஆகிய இராசிகளில் எதாவது ஒன்றில் செவ்வாய் அமர்ந்திருந்தால் அது ஒரு பெண்ணினுடைய ஜாதகம் என்றும் பல ஜோதிட
நூல்கள் கூறுகின்றன
அது போல் ஒரு ஜாதகர் ஜெனித்த சமயத்தில் ஒற்றை இராசியின் பிற்பகுதி நாழிகையும், இரட்டை இராசியில் முற்பகுதி நாழிகையும் சேர்ந்திருந்தால் அது பெண் குழந்தையின் ஜாதகமாக தான் இருக்க வேண்டும் . அது ஏன் அப்படி சொல்கிறார் என்றால் இவை இரண்டின் அடிப்படையில் வருகின்ற ஹோரை சந்திரனுடையதாக இருக்கும்.
அதே போல ஒற்றை இராசியின் முற்பகுதியிலும் இரட்டை இராசியின் பிற்பகுதியிலும் சூரிய ஹோரை இருப்பதனால் அது ஆணுக்குரிய ஜாதகம் என்றும் கூறலாம்
மேலும் பெண் கிரகங்களான சந்திரன், சுக்கிரன், இராகு போன்ற கிரகங்கள் லக்கினத்தில் இருந்தாலும் அல்லது லக்கினத்தை பார்த்தாலும் அந்த குழந்தை பெண்ணாக இருக்க வாய்ப்பு உள்ளது . சூரியன், செவ்வாய், குரு ஆகிய ஆண் கிரகங்கள் சேர்ந்தோ தனித்தனியாகவோ இரட்டை இராசியில் இருந்தாலும் கூட அது பெண் குழந்தையே ஆகும். மேலும் பெண் கிரகங்கள் சேர்ந்தோ தனித்தோ ஒற்றை இராசியில் இருந்தால் அது ஆண் குழந்தையாகும்.
இப்படி பல வழி களில் ஒரு ஜாதகம் ஆணா ? அல்லது பெண்ணா ? என்பதை தெரிந்து கொள்ளலாம் என்பதை முடிவு செய்துவிடலாம். அது போல் ஷட் வர்க்கத்தில் ஆண் கிரகங்களின் பலம் அதிகமாக இருந்தால் ஆண் குழந்தையும் பெண்கிரகங்களின் பலம் கூடுதலாக இருந்தால் பெண் குழந்தையுமாக இருக்கும் posted by www.jothidam-tamil.com
well said sir thanks for info
ReplyDelete