ஒரு ஜாதகத்தில் ஷட்டவர்கத்தில் ஆண் மற்றும் பெண் ஆகிய இருவகை கிரகங்களும் சமமாக இருந்தால் பிறக்கும் குழந்தை ஆணாகவும் இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் இருக்கும் என்று பழைய ஜோதிட
நூல்கள் கூறுகின்றன .
மேலும் ஜாதகத்தில் சந்திரன் கிரகம் சூரியன் கிரகம் ஆகியவை சம பலத்தோடு இருந்தாலும் அதுபோல் புதன், சனியும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டாலும் இப்படி விபரீதமான பாலுணர்வுள்ள குழந்தை பிறக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம்
ஆணாகவும் இல்லாமல், பெண்ணாகவும் இல்லாமல் குழந்தைகள் பிறப்பதற்கு உடல் மருத்துவ ரீதியிலும், மன மருத்துவ ரீதியிலும் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஜோதிடம் அதற்கான மூல காரணம் இறைவன் வகுத்த விதி அல்லது கர்மா என்றே அடித்து கூறுகிறது.
எனவே அப்படிப்பட்ட கிரகநிலையோடு ஒரு குழந்தை பிறந்தால் அது குழந்தையின் தவறு அல்ல. பெற்றோர்களின் கர்ம பலனாலும் குழந்தையின் முன்ஜென்ம வினையாலும் உருவானதே என்பதை சாஸ்திரம் கூறுகிறது .
மேலும் இப்படிப்பட்ட குழந்தைகளை அல்லது மனிதர்களை வெறுப்பதோ அவமதிப்பதோ துன்புறுத்துவதோ போன்ற செயல்கள் செய்தால் கொடிய கர்மா வினை சூழும் என்று வராகி மிகிரர் போன்ற சாஸ்திர மேதைகள் கூறுகிறார்கள்.
அதுபோல் ஜென்ம மோட்ஷம் கிடைக்க ஆண் ஆக இருந்தாலும் பெண் ஆக இருந்தாலும் மன கட்டுப்பாடு மிகவும் முக்கியம் ..இது போன்ற குழந்தைகளுக்கு இயற்கையாகவே இது அமைகிறது அதுபோல் அவர்களுக்கு ஜென்ம மோட்ஷம் கிடைக்கவும் எளிதில் வழி வகை செய்கிறது - Shemale or thirunangai horoscope tamil
0 comments:
Post a Comment