இம்முறையில் கரையும் காகத்தின் தன்மை ,பார்ப்பவர்களிடம் இருந்து அது உள்ள திசை கோணம் அப்போதைய நேரம் .அது நடந்து கொள்ளும் விதம் இவை எல்லாம் கவனிக்க பட வேண்டும் என்று
சகுனத்தை பற்றி விளக்குகின்ற பழைய நூல்கள் கூறுகின்றன
வலப்புறம் கரைந்தால் நன்மை , பின்புறம் என்றால் வெற்றி , தலை முடியில் அடித்தால் தீமை ஆனால் அதையே கோவிலின் உள் புறத்தில் வைத்து அடித்தால் நன்மை , இறக்கைகளை அடித்து காகம் கூவுவதை காண்பது விபத்திற்க்கான அறிகுறி , பட்டுப்போன மரத்தின் மேல் இருந்து கூவினால் பஞ்சம் , மாளிகை மேல் அமர்ந்து கூவுவது மிகவும் நன்மை
முட்ச்செடி மேல் இருந்து கத்தினால் எதிரிகளால் தொல்லை , கதவை பார்த்து கரைந்தால் விரைவில் அபாயம்
அசுத்தங்களை உண்டால் நன்மை , உடைகளை பற்றி இழுத்தால் புத்தாடை கிடைக்கும் ..
தலையின் உச் சியின் மேல் கரைந்த படி பறந்து சென்றால் பேய் நடமாட்டம் என்று பொருள்
0 comments:
Post a Comment