ஜாதகத்தில் இருக்கின்ற நாக தோஷத்தை பற்றி நாம் அறிவோம் ..ஆனால் இந்த சர்ப்ப தோஷம் நம் முன் வினை பயனால் தான் ஏற்படுகின்றது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ..
இந்த நாக தோஷம் வேத ஜோதிட முறைப்படி ஒருவரின் ஜாதகத்தில் நிற்கின்ற ஸ்தானம் செய்த தீவினைகளின் தன்மைகளுக்கு ஏற்றார் போல் மாறும் ..
ஒரு ஜாதகத்தில் 1-5-9 போன்ற இடங்களில் சனி ,ராகு, கேது ,போன்றவை இருப்பது நாக தோஷம் என்று அறியப்படுகிறது .ஒருவரின் முந்தய பிறவியில் ஆண் நாகமும் பெண் நாகமும் ஒன்றாக இணைத்திருக்கும் நிலையில் அதை துன்புறுத்தி இருந்தால் இந்த பிறவியில் அவருக்கு ஜாதகத்தில் லக்னத்திற்க்கு ஏழாம் இடத்தில ராகு கேது அமைந்து அவர்களின் திருமண வாழ்வில் சில இன்னல்களை உருவாக்கும் .
அதுபோல் ஒரு பாம்பு தன்னுடைய இரையை தேடி போகும் பொழுது அதை துன்புறுத்தினால் அவர்களுக்கு இந்த ஜென்மத்தில் தொழில் ஸ்தானமான 10 இடத்தில ராகு அல்லது கேது அமைந்து அவர்களின் தொழிலை கெடுக்கும் பஞ்சத்தை உருவாக்கும் .
மேலும் பாம்பு முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் காலத்தில் அல்லது பாம்பு தன் குட்டிகளுடன் ஒன்றாக இருக்கும் நேரத்திலோ அதை துன்புறுத்தி இருந்தால் இந்த பிறவியில் அவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஐந்தாம் இடத்தில அமர்ந்து கடுமையான புத்திர தோஷத்தை விளைவிக்கும் ..
இதெல்லாம் பழைய ஜோதிட நூல்கள் கூறுகின்றன
0 comments:
Post a Comment