ஒரே நேரத்தில் முப்பது முக்கோடி தெய்வங்களை பூஜிக்கின்ற ஒரு வழிபாடே ஸ்ரீகௌரி வழிபாடு என்று பழய ஆன்மீக புராணங்கள் சொல்கிறது . நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக கௌரி தேவி 108 வடிவங்களில் அவதரித்ததாகவும் புராணங்கள் சிறப்பித்துச் சொல்கின்றன. ஆனால், 108 வடிவங்களில் கௌரியை வழிபடுவது சிரமம் என்பதால் , கௌரியின் பதினாறு வடிவங்களை ஒருமனே பூஜிக்கும் நோக்கில் கௌரி வழிபாட்டை நம் முன்னோர்கள் வழிபடச்சொன்னார்கள் .
கௌரியின் பதினாறு வடிவங்களில் ஸ்வர்ணகௌரி விஷேஷம் .இந்த சொர்ண கௌரியை விரதம் இருந்து வழிபடும் மரபு இந்தியாவில் உள்ள இன்னும் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றன .
சொர்ண கௌரிக்கு விரதம் ஜாதக ரீதியாக தரும் பலன்களை கீழே விவரித்துள்ளோம்
ஸ்வர்ண கௌரி விரதம் அனுஷ்டிக்கும் முறை:
விரதத்திற்கு முன் வீட்டின் முன் பக்கம் மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். தேவியின் முகத்தை ஒரு கலசத்தில்ப்ரதிஷ்ட்டை செய்து அதை நன்கு அலங்கரிப்பார்கள் . தேவியின் பிரதிமை இல்லாதவர்கள் என்றால் சிவசக்தியின் படத்தை வைத்தும் பூஜிக்கலாம்.
காலை முதல் மாலை வரை விரதம் இருந்து சூரிய அஸ்தமனத்திற்கு பின் இறைவியை பூஜிக்க வேண்டும் . அம்பிகையின் வலப்புறம் நெய் தீபமும், இடப்புறம் நல்லெண்ணை தீபமும் ஏற்ற வேண்டும். முதலில் விநாயகரைத் துதித்து, பின்னர் அம்பிகைக்கு ஷோடசோபசார பூஜை செய்ய வேண்டும். பின் மலர்களால் தேவியை அர்ச்சித்து, தேவி அஷ்டோத்ர நாமாவளியை கூறி இறைவியை வணங்க வேண்டும். பின் அம்பிகைக்கு நைவேத்தியம் படைத்து, நோன்பு சரட்டினை கைகளில் கட்டிக் கொள்ள வேண்டும்.
தீபாராதனைமுடிந்த பின் இரண்டு நெய்தீபங்களைத் தண்ணீர் நிரப்பிய தாம்பாளத்தில் வைத்து தீபாராதனை செய்யவேண்டும். பிறகு சுமங்கலி பெண்களுக்கு உணவளித்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் அளிக்க வேண்டும்.
அதோடு நிறுத்தி விடாமல் வீட்டின் பக்கத்தில் உமையவளுடன் இருக்கும் சிவபெருமானை வழிபட வேண்டும் . இரவு வேளையில் தூங்க செல்லும் முன் முடிந்த அளவில் பிரசாதம் மட்டுமே உண்ணுவது நல்லது
இந்த பூஜையினால் ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் நீசமாகவோ ,பகையாகவோ,அல்லது பலமின்றி காணப்பட்டால் அவர்களின் இல் வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவிப்பார்கள் அத்தகைய பெண்கள் இந்த விரதத்தை முறையாக செய்து , அம்மனின் அருளால் இனிய இல்லற வாழ்க்கை அமையப் பெறுவார்கள்
இந்த விரதம் இருப்பவர்கள் சகல சௌபாக்கியங்களும் பெற்று, அனைத்து இன்பங்களையும் அடைவார்கள்
என்பது நம்பிக்கை (ஜோதிடத்தில் சுக்கிரன் பரிகாரம் பூஜை .)
sukran neecham in tamil- sukra dasa puthi palangal in tamil- sukran neecham means-sukra thisai for meena- pariharam for sukran neecham- sukra thisai palangal-sukra dasa for kataka rasi in tamil
sukran benefits- pariharam for sukran neecham-sukran neecham means-sukran neecham in tamil-sukran god mantra in tamil-sukra dasa pariharam in tamil- sukran in tamil astrology-srirangam temple+sukran- shukra dosha pariharam in tamil
0 comments:
Post a Comment