ஜாதகத்தில் சந்திரன் அமையும் இடத்திற்க்கான பலன்கள்
ஜாதகத்தில் லக்கினத்தில் சந்திரன் அமர்ந்தால் .வளர்பிறை சந்திரன் முக தேஜஸும் ..தேய்பிறை சந்திரன் ஜாதகரை பிடிவாத குணமுள்ளவராகவும் வர்ணிக்கிறது ..லக்கினத்தில் சந்திரன் அசுப கிரக சேர்க்கை அமைந்தால் தலை வலி ,தலையில் புண் போன்றவை ஏற்படும்
இரண்டம் வீட்டில் சந்திரன் அமர்ந்தால் ஜாதகர் தனவானாக இருப்பார் .வாக்கு சாதுர்யம் உடையவராகவும் இருப்பார் .சளி தொல்லை இந்த ஜாதகருக்கு சற்று அதிகமாக இருக்கும்
மூன்றாம் வீட்டில் சந்திரன் அமர்ந்தால் இவருக்கு பின் பிறப்பது பெண் ஆகஇருந்தால் வாழ்வில் தவிர்க்க முடியாத சில துன்பங்கள் அனுபவிப்பார்கள் ..குறிப்பாக மூன்றில் சந்திரன் இளைய சகோதரிகளுக்கு
நல்லது இல்லை.
நான்காம் வீட்டில் இருக்கின்ற சந்திரன் தாய்க்கு கெடுதியை விளைவிப்பார் ..காரகன் காரகஸ்தானத்தில் நிற்பது நல்லதில்லை என்பது ஜோதிட விதி ..மாதுர்காரகன் சந்திரன் மாதுர்ஸ்தானம் என்றழைக்கப்படும்
நான்கில் நிற்பது தாய்க்கு கேடு
ஐந்தாம் வீட்டில் சந்திரன் நிற்பது ஜாதகருக்கு பெண்பிள்ளையை தரும் ..அது மட்டுமில்லாமல் பூர்வ வழி மற்றும் குல தெய்வங்களின் ஆசி ஜாதகருக்கு எப்பொழுதும் உண்டு ..
ஆறாம் வீட்டில் சந்திரன் ஜாதகர் மிக பெரிய குழப்பவாதியாகவும் தைரியம் அற்றவராகவும் இருப்பார் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது ..
ஏழாம் வீட்டில் சந்திரன் அமர்ந்தால் அவருக்கு வரும் துணை அன்பானவராக இருப்பார் ஆனால் ஜாதகர் பெண் போகம் உள்ளவராகவும் .பெண்கள் விஷயத்தில் பெயர் கெட்டு போவதற்கான வாய்ப்பும்
உள்ளது
எட்டில் சந்திரன் ஜாதகருக்கு உடல் ரீதியாக பல சிக்கல்களை தரும் தாய்க்கோ அல்லது தாய் மாமனாருக்கோ மன ரீதியாகவோ உடல் ரீதியாகவோ பாதிப்புகளை இந்த அமைப்பு தரலாம் ..சிறு வயதில் இவர்களில் யாரையாவது ஒரு ஆளை இழக்கலாம் அல்லது அவரை பிரிந்து வாழ்கின்ற நிலையை தரும் .
ஒன்பதாவது வீட்டில் நிற்கின்ற சந்திரன் ஜாதகருக்கு அளவு கடந்த பக்தியை தருவார் ..எதிரிகளையும் தன் இரக்க குணத்தால் நண்பர் ஆக்குவார்கள் தந்தைக்கு நல்லதில்லை ..ஜாதகர் பெண் குழந்தைக்கு தகப்பன் ஆவர் .
பத்தில் சந்திரன் ஜாதகரை பொது வாழ்க்கையில் பிரபல படுத்த்தும் ..குரு பார்வையும் இருந்தால் இன்னும் விஷேஷம் .நல்ல மருத்துவர் , வைத்தியம் , கெமிக்கல் வேலைகளில் ஈடு படுவோர்க்கு இந்த அமைப்பு நல்லது
பதினொன்றாம் சர லக்னத்தை சேர்ந்த ஜாதகருக்கு இது பாதக ஸ்தானம் ஆகும் இருந்தாலும் சங்கடம் இல்லை.வியாபாரமே செய்வது இவர்களுக்கு சிறப்பு.இது போன்ற கிரக அமைப்பை பெற்றவர்களில் பெரும்பாலானோர் முதலாளி அந்தஸ்தை பெற்றிருப்பார்கள்.தீர்க்க தரிசன செயல்பாடு.கடல் கடந்து செல்லவும்,அயலூருக்கு போய் ஆதாயம் தேடவும் வாய்ப்புண்டு.ஜாதகருக்கு கால்நடை விருத்தி உண்டு.
பன்னிரண்டாம் இடத்து சந்திரன் ஜாதகர் ஈவு இரக்கம் அற்றவர்களாக இருப்பார்கள் ..ஓட்டை வாய்க்கு முதல் சொந்தக்காரர் .மனோ தைரியம் குறைவாக இருக்கும் ..நாலு பேர் கூடி இருக்கின்ற இடத்தில ஒருத்தரை
மட்டும் எல்லாரும் நக்கல் செய்வதற்கு ஜாதகரின் நடவடிக்க்கை இடம் கொடுக்கும்

தொடரும்