இதற்கு எங்களின் பல பதிவுகளில் பித்ரு தோஷம் எப்படி உருவாகிறது என்பதை பற்றியும் அதற்க்கான பரிகாரங்களையும் எங்கள் இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம்..மேலும் சில எளிய பரிகார முறைகளை
உங்களுக்காக இங்கே பகிர்கிறோம்
பித்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை செய்துவந்தாலும் பித்ரு தோஷத்தால் கெடுபலன்கள்குறையும்.பித்ரு தோஷத்தால் ஏற்பட்ட கெடுபலன்கள் குறையும்
அமாவாசை தோறும் 5 விதமான பழங்களை பசுவுக்குக் கொடுத்து வருவது நல்லது
சுத்தமான நீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து கொண்டே மஹாமிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வரவேண்டும்
பித்ரு தோஷம் தீர வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டு காளி தேவியை தக்ஷிண காளி மந்திரம் ஜெபித்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் அம்மனின் அருளால் பித்ரு தோஷம் நீங்கும்
அமாவாசை அன்று நாட்டுக் கருவேல மரத்தடியில் வாழை இலையில் வைத்து உணவைப் படைத்து வர பித்ருக்கள் மகிழ்ச்சியடைவார்கள் அதுமட்டுமல்லாமல் நம் வாழ்வில் ஏற்பட்டு வந்த இன்னல்கள் விலகும் ..
சிலர் வீட்டிற்குள் சிறு அறையில் பரிமாறி வைத்து சிறிது நேரம் ஜன்னல் கதவுகளை பூட்டி கொண்டு வெளியில் நிற்ப்பார்கள்
உணவு உண்ணும் முன்,முதல் பிடி உணவைப் பித்ருக்களுக்கு என்று எடுத்து வைத்துப் பின்னர் அதைப் பறவைகளுக்கு வைத்து விடவும்.இதை வீட்டின் மூத்த ஆண்மகன் செய்து வர வேண்டும்.அப்படி செய்துவந்தால் அந்த குடுப்பதிற்கு பிடித்திருந்த பிதுர்தோஷம் தீரும் - Article by Jothida chakram
0 comments:
Post a Comment