உன் நண்பனை காட்டு உன்னை சொல்கிறேன் என்பார்கள் ..அந்த அளவிற்கு ஒருவரின் வாழ்க்கையில் நண்பன் என்பவன் பிரதிபலிக்கிறான் .எப்படி பட்ட நண்பர்கள் நமக்கு அமைவார்கள் என்று ஜாதக ரீதியாக தெரிந்துகொள்ள முடியும் ..
ஒரு ஜாதகத்தில் நண்பனின் ஸ்தானம் என்று சொல்லப்படுவது ஏழாம் வீடு ..இது தான் மனைவி ஸ்தானம் அதுபோல் உங்களுடன் இணைந்து தொழில் நடத்தும் பங்காளர் போன்றவற்றை பற்றி ஏழாம் வீடும் அதன் பாவதிபதிகளையும்வைத்தே தீர்மானிக்கப்படுகிறது
ஏழாம் வீட்டில் குரு அமைந்தால் ..அல்லது ஏழாம் வீட்டில் குருவின் பார்வை விழுந்தாலோ நண்பர்கள் குறைவாக தான் இருப்பார்கள் ..ஆனால் பயபக்தியான உங்களுடன் திருத்தலங்களுக்கு பிரயாணம்
செய்யும் நண்பர்கள் அமைவார்கள் .அதுபோல் ஏழில் குரு அமைந்தால் வயது வித்தியாசம் அதிகம்
உள்ள நண்பர்களின் சேர்க்கை அமையும் .
ஏழாம் வீட்டில் சனி அமைந்தால் மிக மோசமான நண்பர்களின் சேர்க்கையால் வாழ்வில் நல்ல அதிர்ஷ்டங்களை இழப்பீர்கள் .அதுபோல் அசுப திருஷ்டி விழுந்தால் நண்பர்கள் மூலமாக துரோகம்
பொருள் நஷ்ட்டம் போன்றவை கூட ஏற்படலாம்.
ஏழாம் வீட்டில் சனி அமைந்து அதில் செவ்வாய் திருஷ்டி விழுந்தாலோ ..அல்லது செவ்வாய் அமர்ந்து
சனியின் திருஷ்டி விழுந்தாலோ மிக நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்கள் பரம எதிரிகள் ஆவார்கள்
செவ்வாய் தனித்து ஏழில் நின்றால் நீண்ட வருடங்கள் கழித்து நெருங்கிய நண்பனை பார்க்கும் சூழல்
ஏற்படும் .
புதன் ஏழில் அமர்ந்தாலோ அல்லது சம்பந்த பட்டாலோ ..உங்களை குழப்புகின்ற நண்பர்களின் சேர்க்கை
வரும் அதேநேரம் உங்களின் நண்பரின் ஊக்குவிப்பால் மேற்படிப்பை தொடர்வீர்கள் ..அதிகம் படித்த நண்பர்களை சம்பாதிப்பீர்கள் ..
ஏழில் சுக்கிரன் அமர்தல் அல்லது சம்பந்தப்படுத்தல் பெண் தோழிகளை அதிகம் தரும் ..சனி சம்பந்தப்பட்டால்
அது தவறான பந்தங்களுக்கு வழி வகுக்கும் ..சுக்கிரன் ஏழில் அமர்தல் நண்பியை காதலித்து மணக்கலாம் .
சூரியன் ஏழில் சம்பந்தப்பட்டால் தந்தை வழி பந்தத்தில் ஒரு சிறந்த நண்பர் அமையலாம் ..அரசியல் நடவடிக்கையை செய்கின்ற நண்பர்கள் அமையும் ..சந்திரன் ஏழில் சம்பந்தப்பட்டால் தாய் வழி பந்தத்தில் ஒரு சிறந்த நண்பர் அமையலாம்..
jathagam kattam palangal in tamil
tamil jathagam kattam pdf
jathagam kattam porutham in tamil
jathagam kattam palangal in tamil free
jathagam kattam from date of birth in tamil
jathagam kattam number
how to read jathagam kattam in tamil
jathagam kattam in tamil 2017
0 comments:
Post a Comment