மனைவி அமையும் திசை ஒரு ஜாதகத்தின் ஏழாம் இடம் மற்றும் அதன் அதிபதியை பொறுத்தே
அமையும்
********** *********** *******
ஏழாம் அதிபதி சூரியன் எனில் மனைவி கிழக்குதிசை
சந்திரன் எனில் மனைவி தென் கிழக்கு திசை நோக்கி
செவ்வாய் எனில் மனைவி தெற்கு திசை நோக்கி அமைவாள்
புதன் எனில்-வட கிழக்கு திசை நோக்கியும்
குரு எனில் வடக்கு நோக்கியும்
சுக்கிரன் எனில் கிழக்கு நோக்கி அமைவது மட்டுமில்லாது உள்ளூரில் அமையவும் வாய்ப்புகள் அதிகம்
சனி எனில் மேற்கு திசை நோக்கியும் .
ராகு எனில் தென் மேற்கு திசை நோக்கியும்
கேது எனில் வட மேற்கு திசையில் இருந்து வருவாள் ஆனால் கேதுவிற்கு 7ம் இடத்தில் நிற்கும் கிரகத்தின் திசையும் ஒத்து வரும்.
குறிப்பு : திசை என்று இங்கு சொல்வது மணமகனின் பிறப்பிடத்தில் இருந்து பெண்ணின் பிறப்பிடமாக
கொள்ளவேண்டும்
மனைவி உறவிலா?, அன்னியத்திலா?
****************** **********************
7ம் அதிபதியோடு லக்னாதிபதியோ 10 ஆம் அதிபதியோ இணைந்திருந்தால் உறவில்.
லக்னாதிபதி யோடு சுக்கிரன் இணைய உறவில் கெட்டி மேளத்தோடு திருமணம் நடக்கும்
4க்குடையவர் 2,7ல் நின்றாலும்,அதன் அதிபதிகளோடு பார்த்தாலும் சேர்ந்தாலும் தாய்வழி உறவில்.
4,11 க்குடையவர் சேர்ந்தாலும் பார்த்தாலும் தாய்வழி உறவில் திருமணம் நடப்பதற்க்கான சாத்தியக்கூறுகள்
அதிகம்
9 குடையவர் 2,7, ல் நின்றாலும்,அதன் அதிபதிகளோடு சேர்ந்தாலும் பார்த்தாலும் உறவில் கெட்டிமேளம் முழங்க அத்தைவழி உறவில் மணம் முடிப்பார் ஜாதகர்
3,7க்குடையவர்கள் இணைவு,பார்வை சகோதரவழி பந்தத்தில் திருமணம் இனிதே அரங்கேறும்
7,5 இணைவு,பார்வை,பரிவர்த்தனை,புதன் 7ம் அதிபதியோடு தொடர்பு மாமன் வழியில் அமையும்.
7 ல், சனி, ராகு,கேது அன்னியத்தில் திருமணம் நடைபெறும்.ஏழில் சனி ,சுக்கிரன் ,குரு இணைவு
ஊரைவிட்டு ஓடி சென்று திருமணம் செய்வார்கள்
0 comments:
Post a Comment