1. பாதகாதிபதி லக்ன திரிகோணத்தில் இருந்து, ஒரு ஜாதகத்தில் திரிகோண அதிபதி பலம் பெற்றிருந்தால் நன்மைகள் நடக்கும் . முன்னோர்கள் செய்த புண்ணிய காரியங்கள் ஜாதகனை காக்கும் என்கிறது ஜோதிட
சாஸ்திரம்
2. பாதகாதிபதி லக்ன தொடர்பு இல்லாமல் இருந்து , லக்னத்துக்கு மறைவு பெற்றிருந்தால் நன்மை செய்யும் . கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு என்பார்கள்
3. பாதகாதிபதி நீச பங்கம் பெற்று இருந்தால் நன்மைகள் உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
4. பாதகாதிபதி எப்பொழுதும் தன் சுய வீட்டிற்க்கு மறைந்திருந்தால் நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
5. அதுபோல் பாதகாதிபதி திரிகோனாதிபதிகள் நட்சத்திரத்தில் இருக்க பலன் உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு என்று பழைய ஜோதிட நூல்கள் சொல்கிறது
6. பாதகாதிபதி வக்கிரம் பெற கண்டிப்பாக ஜாதகருக்கு நன்மைகள் உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
7. பாதகாதிபதியை சனி பார்த்தால் நற்பயன்கள் நடந்தேறும் . கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
8. பாதகாதிபதி ராகு மற்றும் கேதுகளின் சமந்தம் பெற நன்மை உண்டு
9. பாதகாதிபதி பலம் இழந்தால் பாதக ஸ்தானமும் பலம் இழக்கும் அதனால் பாதகாதிபதியால் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது.
10. பாதகாதிபதி திரிகோண அதிபதியுடன் பரிவர்த்தனை பெற்றால் கண்டீப்பாக நல்லது நடக்கும்
11. அதுபோல் பாதகாதிபதி எப்பொழுதும் ராசியின் அதிபதியாக வரும்போது தீமைகள் விளைவிப்பதில்லை
13. பாதகாதிபதி ராசி அதிபதியாக வந்தால் ஜாதகருக்கு தீங்கு விளைவிக்க மாட்டார்
குறிப்பு: குரு பாதகாதிபதி வரும் கன்னி மற்றும் மிதுன லக்ன ஜாதகத்தில், குருவின் பார்வை எப்பொழுதும் குறிப்பிட்ட ஜாதகருக்கு நன்மையே செய்யும் ஏனெனில் பார்வை என்பது ஒரு கிரகத்தின் காரகத்துவ வெளிபாடு என்பதே. அது பாவஆதிபத்திய வெளிபாடு இல்லை என்று கூற்று உள்ளது
Excellent explanation . genius sir.
ReplyDelete