மேஷம் - அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்
சனிபகவான் 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்கிரமாகச் செல்வதால் நாம் எந்த ஒரு வேலையையும் திட்டமிட்டு செய்வது நல்லது .அதுபோல் சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத் திரத்தில் வக்கிரமாகச் செல்வதால், கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் சென்றால் குடும்பத்திற்கு நல்லது சுப செலவுகள் ஏற்படும் .2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றி முக்கிய முடிவுகள் எடுத்து நிறைவேற்றுவீர்கள்
ரிஷபம் - கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்
29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் தடைப்பட்ட வேலைகள் முடியும் கணவன் - மனைவிக்கு இடையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.
சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத் திரத்தில் வக்கரிப்பதால், தலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்து தீரும் ..அனைவரிடமும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது . 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால் குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது
மிதுனம் - மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்
சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:
29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், செலவுகளைக் குறைத்து,சேமிக்கத் தொடங்குவீர்கள் .
சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் உங்கள் தாய் மாமனுக்கோ தாய்க்கோ உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மறையலாம் .பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகக் கொஞ்சம் சேமிக்கத் தொடங்குவீர்கள். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், பிரிந்திருந்த தம்பதி ஒன்றூசேர்வீர்கள்.பழைய நண்பரை மீண்டும் சந்தீப்பீர்கள்
கடகம் - புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்
29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், உடல்நலக்குறைவு, ஏமாற்றங்கள், இழப்புகள் வந்து நீங்கும்.சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரமாவதால் வாகனத்தை ஓட்டும்போது, வாக்குத்தர்க்கம் செய்யும் போது நிதானம் தேவை. 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிர மாகி செல்வதால், பணப்பற்றாக்குறையும் அரசுக் காரியங்களில் இழுபறி நிலையும் உண்டாகும்.ஆனால் போராடி முடிப்பீர்கள்
சிம்மம் - மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்
29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் குடுப்பத்தாருடன் கருத்து மோதல்கள் உண்டாகும். கடன் பிரச்னை தொல்லை இனி இல்லை.உடலில் ஏற்பட்ட
காயங்கள் மறையும் ஆரோக்கியம் மேம்படும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 வரை; 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைவதால் வீண் செலவுகள், அலைச்சல், வேலைகளில் இழுபறி நிலை உண்டாகும் போன்றவை தோன்றி மறையும் . 02.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வ தால் பழைய கடனை தீர்ப்பீர்கள்;தீர்ப்பீர்கள்
கன்னி - உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்
29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், பிள்ளைகளின் வருங்காலம் குறித்து வீணாக பதட்ட படுவீர்கள்.வெளியில் செல்லும் போதோ வீட்டில் இருக்கும் பொழுதோ நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைவதால், குடும்பத்தில் மூத்தவர்களுடன் ஆலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்காதீர்கள் . 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிர மாகி செல்வதால், வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. தாயோ ,தாய்வழி உறவினர்கள் உடல் நலம் பாதிக்கப்படலாம்
துலாம் - சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்
29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமா வதால் பூமி சேர்க்கையுண்டாகும். மனைவிக்கு வேலை கிடைக்கும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால், வாக்கு தர்க்கங்களை தவிர்க்கவும் . 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், நல்லது நடக்கும்.
விருச்சிகம் - விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை
29.4.18 முதல் 11.9.18 வரை, 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், பால்ய நண்பர்களை நீங்கள் மீண்டும் சந்திக்கலாம் . சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால் சித்தர் பீடமுள்ள திருத்தலங்களுக்கு செல்வீர்கள் . 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், அதிகம் உழைக்க வேண்டி வரும். பணம் வரவில் இழுபறி நிலை வந்து மறையும்
தனுசு - மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்
29.4.18 முதல் 11.9.18 வரையிலும், 12.8.19 முதல் 13.9.19 வரையிலும், மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் மற்றும் சுப நிகழ்வுகள் கை கூடி வரும் . சனி பகவான் 10.5.19 முதல் 11.8.19; 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால் அயல்நாட்டில் இருப்பவர்களால் பணம் வருகை கூடும் . 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகச் செல்வதால், நகைகளை கையாள்வதில் கவனம் தேவை.தன்னிச்சையாக முடிவுகள் தற்போது எடுக்கவேண்டாம்
மகரம் - உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்
29.4.18 முதல் 11.9.18 வரையிலும், 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் பிரபலங் களின் அறிமுகம் கிடைக்கும். அயல்நாடு சென்று வர விசா கிடைக்கும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19; 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால், இக்காலக்கட்டத்தில் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது உங்களுக்கு நலம் சேர்க்கும்
கும்பம் - அவிட்டம் 3,4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம்
29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரம் ஆவதால், பழைய கடனை கொடுத்து முடிப்பீர்கள் .சொந்த ஊருக்கு செல்வீர்கள் ..வாடகை வீட்டில் இருப்போர் சொந்த வீட்டிற்கு செல்லலாம் சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 வரை மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைவதால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு பின்னர் சரியாகும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், முடங்கிக் கிடந்த வேலைகள் சீக்கிரம் சீக்கிரமாக முடியும்
மீனம் - பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
29.4.18 முதல் 11.9.18 வரையிலும், 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் உங்களுடைய பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதேநேரம் தங்களின் குடும்ப செலவுகளும் அதிகரிக்கும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள் .சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரையிலும், 27.7.19 முதல் 13.9.19 வரையிலும், 17.7.20 முதல் 16.9.20 வரையிலும் பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால், பெரிய காரியங்களில் தற்போது இறங்கி விடாதீர்கள்.நண்பர்கள் சவகாசம் தற்போது குறைப்பது நல்லது. 02.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், விலையுயர்ந்த ஆபரணங்கள், மற்றும் எலக்ட்ரிகல் சாதனங்கள் வாங்குவீர்கள்.ஒரு நெடுந்தூர பயணம் செய்வீர்கள்
பொது பரிகாரம்
ஸ்ரீலட்சுமி நாராயணரை, சனிக்கிழமைகளில் வணங்குவது
சனீஸ்வரர் ஆலயங்களுக்கு எல்லா சனிக்கிழமையும் சென்று வருவது
எல்லா சனி அன்றும் நவ கிரகங்களை வணங்குவது
ஏகாதசி விரதம் இருப்பது ..
பறவைகளுக்கு வீட்டின் தெற்கில் வைத்து தானியங்கள் வழங்குதல்
ஜோதிடர் : ராகவ்
0 comments:
Post a Comment