நம் வீட்டின் பூஜை அறையிலோ அல்லது வீட்டின் திண்ணை அருகிலோ தீபம் ஏற்றுவது ஒவ்வொரு இந்துக்களின் வீட்டிலும் நடைமுறையில் உள்ளது அந்த தீப ஒளியை ஒரு பதினைந்து நிமிடம் பார்பதினால்
நம் மன ரீதியாக உடல் ரீதியாக ஒரு தியானம் செய்கின்ற பலனை அடையலாம்
அந்த தீபத்தில் இருந்து வரும் ஒளியாய் நம் மனம் சிதற விடாமல் அதை மனதை ஒருநிலை படுத்தி பார்க்க வேண்டும் .
அப்படி பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும், கண்களுக்கும் இது மிகவும் நல்லது. கிட்ட பார்வை மற்றும்
தூர பார்வை ,கண் எரிச்சல் போன்றவை நாளடைவில் நம்மை விட்டு நீங்கி நம் கண்களுக்கு குளிர்ச்சியும்
மனம் மற்றும் உடலுக்கு புது தெம்பையும் இது கொடுக்கின்றது
நமக்கே தெரியாமல் அதில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும். அந்த சக்தி என்ன மாற்றத்தை தரும் என்பதை கீழே விவரித்துள்ளேன்
பலன்கள்
1.மனக் கவலை காணாமல் போகும்
2.முடிவு எடுக்கும் திறன் மனதிற்கு தானாகவே ஏற்படும்
3.கண்கள் குளிர்ச்சி மற்றும் புத்துணர்ச்சி பெறும்
4.நாம் எப்பொழுதும் இதை செய்து வந்தால் புத்தம் புதிய தெம்புடன் காணப்படுவோம்
5.ஆசைகளை அடக்குகின்ற மனோ பலம் நமக்கு கிடைக்கும்
6.ஒரு புதிய மனிதராய் நீங்கள் உலா வரலாம்
7.ஒற்றைத்தலைவலி இருந்தால் நாளடைவில் அது சரியாகும்
எனவே எல்லோரும் இதை தினமும் குறைந்தது 15 நிமிடம் அதற்கு மேலும் செய்யலாம். தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனும் முகத்திற்கு பொலிவும் கிடைக்கும்
Article by jothisha chakram
0 comments:
Post a Comment