வீட்டில் விளக்கேற்றுவது என்பது நம்முடைய சம்பிரதாயத்திற்காக நாம் செய்யும் ஒரு விஷயம் இல்லை.
விளக்கேற்றுவதற்கு பின் ஆன்மிக ரீதியாக பல அற்புதமான விஷயங்கள் அடங்கி உள்ளது.
அதேபோல் விளக்கில் பல விதம் இருந்தாலும், ஒவ்வொரு விதமான விளக்கை ஏற்றுவதால் நாம் ஒவ்வொரு விதமான பலனை அடைய முடியும்.
இந்த பகுதியில் எந்த விளக்கில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
வெள்ளி விளக்கு :
வெள்ளி விளக்கை கொண்டு வீட்டில் தீபம் ஏற்றினால் திருமகளின் பரிபூரண அருள் கிடைக்கும். இதனால் வீட்டில் செல்வம் சேரும்.
வெண்கல விளக்கு :
வெண்கல விளக்கை கொண்டு தீபம் ஏற்றுவதால் நோய்கள் விலகி ஆரோக்கியம் சீராகும்.
மண்ணால் செய்யப்பட்ட விளக்கு :
மண்ணால் செய்யப்பட்ட விளக்கு கொண்டு தீபம் ஏற்றுவதால் வீட்டில் உள்ள பீடை விலகி சந்தோஷம் பெருகும்.
இரும்பு விளக்கு :
இரும்பு விளக்கால் தீபம் ஏற்றுவதால் சனி பகவானால் உண்டான தோஷங்கள் விலகும்.
பஞ்ச லோக விளக்கு :
பஞ்ச லோக விளக்கை கொண்டு தீபம் ஏற்றுவதால் துர்சக்திகள் விலகி தெய்வ சக்திகள் குடி கொள்ளும்.
0 comments:
Post a Comment