Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil Marriage Matching Astrology - Tamil jothidam - Tamil Horoscope Matching - Astrology in tamil - Tamil jathagam - jothidam in tamil - thirumana porutham - jathagam porutham - jathagam in tamil - Tamil rasi Palan - ஜோதிடம் தமிழ் - திருமண பொருத்தம் தமிழில் - jathagam porutham in tamil - marriage Matching Tamil Software - Tamil Horoscope in 2017 - tamil matha jothidam - jathagam porutham for marriage - rasi palan in tamil 2017 - Astrology in Tamil 2017, Horoscope in tamil 2017, thirumana Porutham, pathu poruthangal, Mukkiya Poruthangal - marriage matching horoscope in tamil Online, marriage matching in tamil astrology online, Tamil Marriage Match Calculator, Nakshatra Matching for marriage, 10 porutham for marriage in tamil, top 10 astrologers in chennai,famous marriage astrologers ,famous nadi astrologers in tamilnadu,,indian astrologer ,online famous,indian astrology,,indian astrology preiions,famous indian astrologer,best indian astrologer,best indian astrologer in the world,astrologer in tamil, online indian astrologer,best indian astrologer online, tamil astrology predictions, astrological predictions based on date of birth,online astrology by date of birth,astrology reading by birth date jathakam based on date of birth,birth time horoscope, horoscope by date of birth and time, tamil astrology , Astrologer,Numerology,Astrology,Horoscopes,Tamil Astrology, Horoscope in Tamil, Tamil Jothidam,astrology predictions, astrology consultation,Future Astrology,Hindu astrology ,Indian astrology,Jadhagam,Astrologer Career Consultant,best astrologer in tamilnadu,best astrology, famous astrologer in tamilnadu,best,famous,top,good Astrologer,computer tamilnadu astrologer,numerologist,Astrology Services,Marriage matching Astrologer,Astrology experts,Most popular astrologer,Specialist,famous good best Astrologer, marriage matching astrologers, good jyotish in, genuine astrologers, best astrology in, best astrologer india, famous astrologers in, vedic astrologers,tamil jothidam in theni,tamil jothidam in madurai,tamil jothidam in nagercoil,tamil jothidam in kanyakumari,tamil jothidam in chennai,tamil jothidam in madurai,tamil jothidam in trichy,tamil jothidam in vellore,tamil jothidam in kovilpatti,tamil jothidam in chengalpattu,tamil jothidam in tirunelveli,tamil jothidam in ramnad

Tuesday, 28 November 2017

செவ்வாய் தோஷம் என்றால் என்ன ?

ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றொருவற்கு செவ்வாய் தோஷம் இல்லை எனில் அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது என சோதிடம் சாஸ்திரம் சொல்லுகிறது

லக்கனம், சந்திரன், சுக்கிரன் ஆகியவைக்கு  2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருத வேண்டும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன . அப்படி மீறி திருமணம் செய்தால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு செவாய் திசை  நடைபெற்றால் அக்காலத்தில் துணைவர் துணைவியை இழக்க வேண்டிய நிலை வரும் என பழைய ஜோதிட நூல்கள் கணிக்கிறது .

2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் உள்ள எல்லோருக்கும் செவ்வாய் தோஷம் என்று கூறிவிட முடியாது.

செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வாரத்தில் எல்லா செவ்வாய்க்கிழமையும் நவகிரகங்களை ஒன்பது முறை
சுற்றி வருவது நல்லது .பறவைகளை துன்புறுத்த கூடாது ..வீட்டின் தெற்கு பக்கத்தில் வெற்றிலை செடி நடுவதும் பறவைகளுக்கு உணவு தானம் செய்வதும் சிறந்தது

எட்டில் செவ்வாய் ?
பெண்களுக்கு எட்டில் செவ்வாய் மாங்கல்யா தோஷமாகவே கணக்கிட படுகிறது ..அப்படி என்றால் திருமண
பொருத்தம் பார்க்கும் பொழுது அதுபோல் ஆண்களுக்கு ஏழில் செவ்வாய் வேண்டும் அல்லது எட்டிலாவது இருந்தால் சேர்க்கலாம்

செவ்வாய் தோஷம் கணிப்பது எப்படி?

லக்கனம், சந்திரன், சுக்கிரன் ஆகியவைக்கு  2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருத வேண்டும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன

செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா?
செவ்வாய் தோஷம் உள்ள பெண்களை செவ்வாய் தோஷம் உள்ள ஆண்கள் திருமணம் செய்யலாம் .செவ்வாய் தோஷம் அற்ற ஜாதகத்தை தோஷம் உள்ள ஜாதகத்தோடு சேர்க்க கூடாது ..இதேபோல் ரத்தத்தில் ஆர்.ஹெச் பேக்டர் (RH Factor) என்ற தன்மையும் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு ஒரு மாதிரியாகவும், அது இல்லாதவர்களுக்கு வேறு மாதிரி இருக்கும் என்று மருத்துவ நூல்களே கூறுகின்றன

செவ்வாய் தோஷம் திருமணம்

செவ்வாய் தோஷம் பொருத்தம்

செவ்வாய் தோஷம் நிவர்த்தி

Monday, 27 November 2017

எதிர் மறை சக்திகளை விலக்கும் பஞ்ச பூத மாலை | gemology information tamil

இவ்வகை மாலைகள் தற்போது பரவலான உபயோகத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .சிவப்பு சந்தனம் தாமரை மணி , ருத்ராட்ஷம் ஸ்படிகம் மற்றும் துளசி ஆகிய மணிகளின் தொகுப்பாக உள்ள பஞ்ச பூத மாலை பஞ்ச பூதங்களின் துணையை பெற உதவி பெறுகிறது மேலும் இது எதிர்மறை சக்திகளின் விலக்க உதவுவதாகவும் பரவலாக நம்ப படுகிறது

பொதுவாக யோகம் ,யக்ஞம் ,பூஜை மற்றும் கோவில் திருவிழா மற்றும் கடவுள் தரிசனம் போன்றவற்றில் ஈடுபடும் ஒரு சில ஆன்மீக சாதகர்கள் இவ்வகை மாலைகளை அணிவது வழக்கமாக காணப்படுகின்றது

மன உறுதியையும் , ஆன்மீக சக்திகளையும் வழங்கும் சிவப்பு சந்தனம் ,மன ஒருமை பாடு உடலுக்கு குளிர்ச்சி தந்து மன இறுக்கத்தை விலக்கி உள்ளுணர்வை மேற்படுத்தும் ஸ்படிகம் ,மகாலக்ஷ்மியின் அருளை அள்ளித்தரும் தாமரை மணி ,

ரத்த அழுத்தம் மற்றும் ஆகல மரணம் ஆகியவற்றை தவிர்க்க உதவும் பஞ்ச முக  ருத்ராட்ஷம்,உடலின் வெப்பத்தை சரியாக பராமரிப்பதோடு ,மகாவிஷ்ணுவின் அருளையும் அள்ளி தரும் துளசி ஆகிய மணிகளின் கலவையை பஞ்ச பூத மாலை அமைந்திருக்கிறது .எனவே இது ஆன்மீக முன்னேற்றத்திற்கு பயன்படுவதாக ஆன்மீக சாதகர்கள் தெரிவிக்கின்றனர்

gemstones according to rashi and nakshatra
janma nakshatra stones
gemstone for moola nakshatra
birthstone for bharani nakshatra
bharani nakshatra lucky stone
lucky stone for rohini nakshatra
revati nakshatra birth stone
birthstone for thiruvathira nakshatra


Sunday, 26 November 2017

நட்சத்திரங்களும் பெயரின் முதல் எழுத்தும் | natchathiram name starting letters in tamil

27 நட்சத்திரங்களுக்கும் உள்ள பெயர்களின் முதல் எழுத்தை இக்கட்டுரை விளக்குகிறது நட்சத்திரம்

அசுவினி நட்சத்திரம்  என்பது கேது நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்த குழந்தைகளுக்கு  சு, சே, சோ, லா ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தாக வைக்கலாம் .

பரணி நட்சத்திரம்   இதில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் நட்சத்திர அதிபதி ஆவார். லி, லூ, லே, லோ ஆகியவற்றில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக வைக்கலாம் .

கிருத்திகை நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் அ, இ, ஊ, ஏ ஆகியவற்றில் ஒன்றை முதல் எழுத்தாக வைக்கலாம் .

ரோகிணி  நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நட்சத்திர அதிபதி. ஒ, வ, வி, வூ ஆகிய எழுத்துகளில் ஒன்றை பெயரின்முதல் எழுத்தாக வைக்கலாம் .

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில்  பிறந்தவர்களுக்கு செவ்வாய் நட்சத்திர அதிபதி ஆவார். வே, வோ, கா, கி, ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தாக வைக்கலாம் .

திருவாதிரை நட்சத்திரத்தில்   இதில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதி ராகு. இவர்கள் கு, க, ஞா, சா ஆகிய எழுத்துகளில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக வைக்கலாம் .

புனர்பூசம் நட்சத்திரத்தில்  இதில் பிறந்தவர்களுக்கு குரு நட்சத்திர அதிபதி. இதில் பிறந்தவர்கள் கே, கோ, ஹ, ஹி ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தாக வைக்கலாம் .

பூசம்இதில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதி சனி. இவர்கள் ஹீ, ஹே, ஹோ, ட ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தாக வைக்கலாம் .

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதி புதன். இதில் பிறந்தவர்கள் டி, டு, டே, டோ ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தாக வைக்கலாம் .

மகம் நட்சத்திரத்தில்  பிறந்தவர்களுக்கு கேது நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் ம, மி, மு, மே ஆகிய எழுத்துகளில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக வைக்கலாம் .

பூரம் நட்சத்திரத்தில்  பிறந்தவர்களுக்கு சுக்கிரன்  நட்சத்திர அதிபதி.இதில் பிறந்தவர்கள் மோ, ட, டி, டு ஆகிய எழுத்துகளில் ஒன்றை பெயரின்முதல் எழுத்தாக வைக்கலாம் . .

உத்திரம் நட்சத்திரத்தில்  இதில் பிறந்தவர்களுக்கு சூரியன் நட்சத்திர அதிபதி ஆவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் டே, டோ, ப,பி ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தாக வைக்கலாம் .

அஸ்தம் நட்சத்திரத்தில்  இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் பு, ஷ, ட ஆகிய எழுத்துகளில் ஒன்றை முதல் எழுத்தாக வைக்கலாம் .

சித்திரை நட்சத்திரத்தில்  இதில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் பே, போ, ர, ரி ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தாக வைக்கலாம் .

சுவாதி நட்சத்திரத்தில் இதில் பிறந்தவர்களுக்கு ராகு நட்சத்திர அதிபதி ஆவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரு, ரே, ரோ, தா ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.

விசாகம் நட்சத்திரத்தில்   இதில் பிறந்தவர்களுக்கு குரு நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் தீ, து, தே, தோ ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தாக வைக்கலாம் .

அனுஷம் நட்சத்திரத்தில்  பிறந்தவர்களுக்கு சனி நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் ந, நி, நு, நே ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தாக வைக்கலாம் .

கேட்டை நட்சத்திரத்தில்  பிறந்தவர்களுக்கு புதன்  நட்சத்திர அதிபதி.  நோ, ய, யி, யு ஆகியவை உகந்தவையாகும்

மூலம் நட்சத்திரத்தில்  இதில் பிறந்தவர்களுக்கு கேது நட்சத்திர அதிபதி. யே, யோ, ப, பி ஆகியன உகந்த முதலெழுத்துக்கள் என்று ஜோதிட நூல்கள் கூறுகிறது

பூராடம் நட்சத்திரத்தில்  பிறந்தவர்களுக்கு சுக்கிரன் நட்சத்திர அதிபதி. பு, த, ப, ட ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.

உத்திராடம் நட்சத்திரத்தில்  பிறந்தவர்களுக்கு சூரியன் நட்சத்திர அதிபதி. பே, போ, ஜ, ஜி ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.

திருவோணம்: இதில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நட்சத்திர அதிபதி.  கி, கு, கே, கோ ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.

அவிட்டம்: இதில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நட்சத்திர அதிபதி. க, கி, கு, கே ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.

சதயம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு  நட்சத்திர அதிபதி ஆவார். கோ, ஸ, ஸி, ஸு ஆகியன உகந்த முதலெழுத்துக்கள் ஆகும்.

பூரட்டாதி: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குரு  நட்சத்திர அதிபதி. ஸே, ஸோ, த, தி ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி நட்சத்திர அதிபதி. து,ஸ, ச, த ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.

ரேவதி பிறந்தவர்களுக்கு புதன் நட்சத்திர அதிபதி. தே, தோ, ச, சி ஆகியன முதல் எழுத்துக்களாக வைத்து
கொள்ளலாம் 

Saturday, 18 November 2017

ரோகிணி நட்சத்திரத்தின் காரகத்துவங்கள் மற்றும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பரிகாரங்கள் | rohini natchathiram rasi

ரோகிணி நட்சத்திரம் 





















ரோகிணி நச்சத்திரம் குறிக்கும்  உறுப்புகள் : முகம், வாய், நாக்கு, கழுத்து
பார்வை: மேல்நோக்கு
நிறம்: மஞ்சள் நிறத்தை குறிக்கும்
கணம்: மனித கணம் ஆகும்
குணம்: ஸ்திர.குணம்
பறவை: ஆந்தை
மிருகம்: ஆண் நாகத்தை குறிக்கிறது
மரம்: பாலுள்ள நாவல் மரம்
மலர்: தாமரை மலர்
நாடி: வாம பார்சுவ நாடி
ஆகுதி : நவதானியங்கள்
பஞ்சபூதம் : பூமி
நைவேத்தியம் : பால் சாதம் ஆகும்
தெய்வம்: ஸ்ரீ கிருஷ்ணபகவனின் நட்சத்திரம்

அதிர்ஷ்டம் தருபவை:

அதிர்ஷ்டம் தரும் எண்கள்  : 2, 7, 8
அதிர்ஷ்டம் தரும்  நிறங்கள் : வெள்ளை, வெளிர் நீலம்
ரோகிணி நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட திசை: மேற்கு
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்
அதிர்ஷ்ட ரத்தினம் : முத்து ஆகும்
அதிர்ஷ்ட உலோகம்: வெள்ளி

ரோகிணி நட்சத்திரக்காரர்கள் நான்கு பாதங்களில் பிறந்தவர்கள் செய்யவேண்டிய பரிகாரம் கீழே குறிப்பிட 
பட்டுள்ளது 

ரோகிணி நட்சத்திரம் முதல் பாதம், பரிகாரம்:

செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள திருமலை வையாவூர், ஸ்ரீஅலர்மேல் மங்கை சமேத ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாளை நவமி திதியில் சென்று வணங்கி வருதல் நலம் தரும்

ரோகிணி நட்சத்திரம் 2 - ம் பாதம், பரிகாரம்:

சின்னக் காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோவிலில்  வீற்றிருக்கும் ஸ்ரீ வரதராஜப் பெருமாளை சனிக்கிழமை தோறும் வணங்கி வரவேண்டும்

ரோகிணி நட்சத்திரம் 3-ம் பாதம் , பரிகாரம்:

சென்னை நங்கநல்லூரில் உள்ள திருக்கோவிலில் அருள் தரும்  ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வணங்க்க வேண்டும் .

ரோகிணி நட்சத்திரம்  4-ம் பாதம், பரிகாரம்:

மன்னார்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வாசுதேவனையும் ஸ்ரீ ராஜகோபாலனையும் வணங்க வேண்டும்

rishaba rasi karthigai nakshatra characteristics in tamil
rishaba rasi rohini nakshatra 2016 in tamil
rohini nakshatra female names in tamil
rohini nakshatra female marriage age
rohini nakshatra marriage prediction
rishaba rasi rohini nakshatra 2017
rishaba rasi krittika nakshatra characteristics
rishaba rasi general characteristics in tamil

Friday, 17 November 2017

சந்திராஷ்டமம் அன்று சுப நிகழ்ச்சிகள் செய்யலாமா ? |chandrashtama or santhirastamam day

முதலில் சந்திராஷ்டமம் என்றால் என்ன என்பதை பார்ப்போம் 

சந்திரன் + அஷ்டமம்(எட்டு) = சந்திராஷ்டமம்
பொருள்: சந்திரன் நின்ற ராசியில் இருந்து எட்டாம் இடத்தில் இருப்பாதாகும்..ஒவ்வொரு மதமும் எல்லா ஜாதகருக்கும் சந்திராஷ்டமம் வரும் .

சந்திராஷ்டமம் என்றால் சுப நிகழ்ச்சிகள் ஆகாது என்று கூறுவார்கள் ..ஆனால் என்னை பொறுத்தவரை அந்த 
கருத்து சிறிது முரணானது ஆகும் .சந்திராஷ்டமம் காலம் பொதுவாக சுப சடங்குகள் வைக்கமாட்டார்கள் .
திருமணத்திற்கு முகூர்த்தம் குறிக்கும் போது ..ஆண் மற்றும் பெண் இவர்களில் யாராவது ஒருவருக்கு சந்திராஷ்டமம் என்றால் அன்று முகூர்த்தம் வைக்க மாட்டார்கள் அது சரி தான் .அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்..மற்றும் பூப்புனித நீராட்டு விழா , வீட் டிற்கு தறி தட்டுதல்  போன்ற சடங்குகள் 
தவிர்க்க வேண்டும் ..அதே நேரம் யுத்தம் செய்தல் ,தேர்வு எழுதுதல் போன்றவற்றிக்கு சந்திராஷ்டமம் 
உத்தமம் என்பது அதிகம் பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை ..அரச காலகட்டங்களில் அவர்களின் 
குடும்ப ஜோதிடர்கள் யுத்த பயிற்சிக்கும் , போர் அறிவித்தல் மற்றும் போர் தொடங்குவதற்கு அரசனின் 
சந்திரஸ்டமா நாளையே குறிப்பார்கள் 

தீர்வுகள்:
இக்காலத்தில் நாம் பொறுமையுடன் இருக்க வேண்டும். மனஅமைதிக்கு வேண்டுமென்றால் சந்திரனின் அதிதேவதையான பார்வதியை வணங்குவதும் சிவா புராணம் வாசிப்பதும் நலம் .

ம யோகா - தியானம் - பிராணாயாமம் போன்ற முறைகளை செய்யவேண்டும்  “ 

சந்திரனின் காரகத்துவம்

வளர்பிறை காட்டிலும் தேய்பிறையில் சந்திர மறைவு அதிக பலம் உள்ளதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது . சந்திரனை மனநிலைக்கு உரியவன் (மனோகாரகன்) என்றும் போக்குவரத்துகளுக்கு காரகன் என்றும் நட்சத்திர சிந்தாமணி, குமார சாமியம் (கோசாரபடலம்), கோசார தீபிகை, உத்திரகாலமிருதம் மற்றும் பல ஜோதிட நூல்கள் வர்ணிக்கின்றன  

சந்திரன் நம் ராசிக்கு மறைந்து நிற்கும் போது  மனதில் தெளிவிண்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக கோபப்படுதல், பொறுமை இன்மையால் எரிச்சல், அடுத்தவரிடத்தில் தேவையற்ற கோபம், இல்லறத்தில் சண்டை போன்ற உணர்ச்சி சார்ந்த பிழறல்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம்-   Article by Indian vedic astrologer ragav verma

Thursday, 16 November 2017

பாலாரிஷ்ட தோஷங்கள் மற்றும் நிவர்த்தி பரிகாரம் | balarishta dosha in tamil

பாலாரிஷ்ட தோஷங்கள் 

பாலாரிஷ்டத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால் முதலில் பார்க்கவேண்டியது சந்திரனை தான்
பாலாரிஷ்டத்தில் சந்திரனின் நிலை மிகவும் முக்கியம்  சந்திரனின் பலம் மற்றும் பலவீனம் , சுப மற்றும் அசுப தன்மைகள் ஒரு குழந்தையின் நோய் நொடிகளை தீர்மானிக்கிறது .

சந்திரனின் அசுப தன்மைக்கு ஏற்றவாரு குழந்தைக்கு ஏற்படும் தீராத நோய் மற்றும் அற்ப ஆயுள் போன்றவை ஏற்படுகிறது சந்திரனை அடுத்து  பார்க்கவேண்டுமென்றால் குழந்தையின் லக்னத்தின் பலம்
மிக முக்கியம் ஏனென்றால் ஒரு  குழத்தையின் ஆரோக்கியம் மற்றும் ஆயுளை  சந்திரனுக்கு
சந்திரராசிக்கு அடுத்தபடியாக லக்கினமே தீர்மானிக்கிறது .

லக்னம் மற்றும் லக்னாதிபதிஆறு ,எட்டு ,பனிரெண்டு  அதிபதிகளுடன் மற்றும் பாதகாதிபதி, அசுப கிரஹ தொடர்பு இருந்து  அவர்களின் தசா புத்தி குழந்தை பருவத்தில் ஏற்ப்பட்டால் குழந்தைக்கு ஆயுள் பாதிப்பு
உண்டு ..அதுபோல் ஆயுள் தோஷம் குழந்தைக்கு இருந்தால் அந்த திசை புக்தி தீரும் வரை சில ஜோதிடர்கள்
குழந்தைக்கு ஜாதகம் எழுத மாட்டார்கள்

இதற்கு ஆயுஷ்ய ஹோமம் செய்வதன் மூலம் நிவர்த்தி ஏற்படலாம் என்று சாஸ்திர நூல்கள் சொல்லுகின்றது

ஒரு குழந்தைக்கு பிறந்த முதல் வருட ஜென்ம நக்‌ஷத்திரம் முதல் ஒவ்வொரு வருடமும் ஜென்ம நக்‌ஷத்திர நாளில் 'ஆயுஷ்ய சூக்தம்" என்னும் மந்திரத்தைக் கொண்டு ஆயிரத்தெட்டு தடவை நல்ல நெய்யைக் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும்.இது  'மிருத்யூ" பயமின்றி குழந்தை தீர்க்காயுளாக வளர வேண்டுமென்பதற்காக செய்யப்படும் ஹோமமாகும் ஆகும் .

இதனால் 'ஆயுஷ்ய ஹோமம்" என்று இது பெயர் பெற்றது. குழந்தையின் ஆயுள் விருத்திக்கு  சர்வேஸ்வரனை வேண்டிச் செய்யும் ஹோமம் ஆகும் இது .

அத்துடன் கலசத்தால் கும்பம் செய்து , வருணனையும், குழந்தையின் நக்ஷத்திர தேவதையையும் ஆவாஹனம் செய்து "நட்சத்திர சூக்தம் " எனும் 27 நக்ஷத்திரங்களை போற்றும் மந்திரங்களைச் செபித்து அக்கலச தீர்த்தத்தை குழந்தைக்கு ஸ்நானம் செய்வித்து தீர்தத்தை சுற்றி உள்ள உறவுகளுக்கும் கொடுக்க வேண்டும் .

இந்த முறைகள் கண்டிப்பாக வேதம் கற்ற பிராமணர்களை வைத்து தான் செய்யவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் .

balagraha dosha- balarishta dosha nivaran- balarishta dosha calculator free
how to check balarishta dosha-balarishta dosha remedies in telugu
sashtashtaga dosham in tamil-balarishta dosha vedic astrology-balarishta ayurvedic medicine

Wednesday, 15 November 2017

நவக்கிரக தோ‌ஷங்களை நீக்கும் பரிகாரம் | grega dosham josiyam online

சூரிய தோ‌ஷம்

சிவப்பு வஸ்திரம்  அணிவித்து, சூரிய மந்திரம் சொல்லி அபிஷேகம் சொல்லவேண்டும் . அதுமட்டுமல்லாமல் வெள்ளருக்கு சுள்ளியால் யாகத் தீ வளர்த்து அதில் கோதுமை, சர்க்கரை பொங்கல் ஆகுதி செய்து தீபாராதனை செய்து வணங்கினால் சூரிய தோஷத்தில் இருந்து விமோச்சனம் கிடைக்கும் என்பது ஐதீகம்

சந்திர தோ‌ஷம்

சந்திரனுக்கு  வெள்ளை வஸ்திரம் மற்றும்  முத்துமாலை அணிவித்து வணங்கலாம் அது இல்லை எனில் வெள்ளை அரளி, வெள்ளை அல்லிப்பூ ஆகியவற்றை அணிவித்து சந்திர மந்திரங்களை கூறி வழிபடுவது நலம் . சில இடங்களில் முருங்கை மரக்குச்சிகளை கொண்டு யாகத்தீ வளர்த்தும் வழிபடுவார்கள் . அதில் பச்சரிசி, பால் சோறு, தயிர்சாதம் ஆகியவற்றை ஆகுதி செய்து வழிபட்டால் சந்திரதோ‌ஷம் காணாமல் போகும்

செவ்வாய் தோ‌ஷம்

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் தவறாமல் கோவில்களுக்கு சென்று செவ்வாய் கிரகமான அங்காரக பகவானை வழிபட வேண்டும். சிவப்பு வஸ்திரம், பவள மாலை போன்றவைகளை அணிவித்து வழிபட்டால்
செவ்வாய் தோஷம் தீரும்

புதன் தோ‌ஷம்

புதன்கிழமைகளில் புதன்பகவானுக்கு பச்சை வஸ்திரம், மரகத மாலை அணிவித்து வணங்கலாம் அதுபோல்  வெண்தாமரை மலர் மாலை அணிவித்து புதன் மந்திரங்களை பக்தியோடு சொல்லவேண்டும் . நாயுருவி குச்சிகளால் யாகத்தீ வளர்த்து, பாசிப்பருப்பு பொடி சாதத்தை ஆகுதி செய்து கற்பூர ஆரத்தி காட்டி புதன் மந்திரங்களை உச்சரித்து வழிபட்டால் தோ‌ஷம் விலகும்.

குரு தோ‌ஷம்

ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் சிவன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்  அங்கு மூலவர் சன்னிதிக்கு வலதுபுறம் உள்ள தட்சிணாமூர்த்தியை வணங்குவது சிறப்பு சேர்க்கும் இல்லையெனில் அருகே உள்ள நவக்கிரகங்கள் கொண்ட திருத்தலத்துக்கு சென்று அதில் உள்ள குருவை மனதில் தியானித்து ஒன்பது முறையும் சுற்றி வரவேண்டும் .அதுபோல் அங்குள்ள தட்சிணாமூர்த்தியை வணங்குவது சிறப்பு

சுக்ர தோ‌ஷம்

வெள்ளிக்கிழமைகளில் சுக்ரனுக்கு வெள்ளை வஸ்திரம், வைர மாலை அணிவித்து வணங்கலாம் . இல்லையெனில் வெண்தாமரை மலர் மூலம்  அலங்காரம் செய்து வழிபட வேண்டும் என்பது ஐதீகம்

சனி தோ‌ஷம்

ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சனி பகவானுக்கு கருப்பு வஸ்திரம், நீலக்கல் மாலை அணிவித்து வழி படலாம். அதுபோல் சனி பகவானுக்கு  வன்னிமரக் குச்சிகளால் யாகத்தீ வளர்த்து எள்ளுப்பொடி சாதம், எள் ஆகியவற்றை ஆகுதி செய்து வணங்கி வந்தால் சனி தோஷம் யோகமாக மாறும் என்பது நம்பிக்கை

ராகு தோ‌ஷம்

வாரத்தில் ஏதாவது ஒரு  நாளில்  ராகுபகவானுக்கு நீல வஸ்திரம், கோமேதக மாலை அணிவித்து வழிபடலாம்.

கேது தோ‌ஷம்

மேற்சொன்ன ராகு தோஷம் போல் ஒரு வாரத்தில் ஏதாவது ஒரு நாள் செய்யலாம் ..கேது தோஷத்திற்கு எளிமையாக செய்யவேண்டும் என்றால்  செவ்வரளி பூ அலங்காரம் செய்து தரிசிக்க வேண்டும். தர்ப்பைப் புல்லால் யாகத்தீ வளர்த்து கொள்ளு, கொள்ளுப்பொடி சாதம் ஆகியவற்றால் ஆகுதி செய்து வழிபட்டால் தோ‌ஷம் நிவர்த்தி ஆகும்.



சிசேரியனுக்கு நேரம் குறித்து கொடுப்பது சரியா ? | birth time astrology predictions





















முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஜனனமும் மரணமும் தீர்மானிக்கப்படுவது
கடவுளால் மட்டுமே ..ஜோதிடரால் அல்ல ..இங்கு ஜோதிடர் ஒரு கருவி மட்டும் தான் ..நேரம் பார்த்து
குழந்தை பிறக்க வைப்பது தற்கொலைக்கு இணையாகவே சொல்ல படுகிறது காரணம்

மேற்கத்திய நாடுகளில் வேத சாஸ்திரங்களை ஆராய்ந்த சில ஜோதிடர்கள் கூறுவது என்னவென்றால் செயற்­கை­யாக தற்­கொலை மூலம் தன்­னைத்­தானே மாய்த்துக் கொள்­பவன், இயற்­கை­யாக அவன் எப்­போது இறக்க வேண்­டு­மென்ற கால நேரம் விதியால் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றதோ அன்றே அந்த உயிரின் அல்­லது ஆன்­மாவின் மறு­பி­றப்­புக்­கான காலம் அல்­லது வாழ்க்கை ஆரம்­பிப்­ப­தாக கூறுகின்றனர் .

எனவே செயற்­கை­யாக நாம் தீர்­மா­னிக்­கிற ஒரு மனி­தனின் பிறப்­புக்கும் அதனை வைத்து செய்யப்படுகின்ற
ஜாதக கணிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற கருத்து முன் வைக்கப்படுகின்றது

பிறப்பு என்­பது அந்த ஜாதகரின்  பூர்­வ­ஜென்ம வினை­க­ளுக்­கான சம்­பா­வனை. அதனை ஒவ்­வொரு கால கட்­டங்­க­ளிலும் அவரே அனுபவிக்கவேண்டும் என்பது தான் விதி .

அதனை நாம் நல்­ல­நேரம், கெட்டநேரம் மற்றும் கிரகம்  பார்த்து பூமியில் பிறக்க வைப்­பதன் மூலம் நம்மால் மாற்­றி­ய­மைத்து விட முடி­யாது என்பது என் கருத்து 

Sunday, 12 November 2017

பாவங்களை போக்கும் பரணி தீபம் | mesha rasi bharani nakshatra in tamil

மனதால் கூட பாவம் செய்யக்கூடாது பிறருக்கு தீங்கும் செய்ய கூடாது என்று நம் முனோர்கள் சொல்லிவைத்தனர் ஆனால் பாவங்கள் அதிகரித்து வரும் யுகம் தான் கலி யுகம் .

நாம் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக தீபங்கள் ஏற்றி தினமும் வழிபாடு செய்ய ஆலயங்கள் நோக்கி
தினமும் அடி எடுத்து வைக்கின்றனர்

எனவே தெரியாமல் செய்யும் பாவங்கள் அகல திருக்கார்த்திகைக்கு முந்தின நாளான பரணி நட்சத்திரமன்று
வெள்ளி கிழமை இல்லம் தோறும் விளக்கேற்றி இறைவன் சன்நீதியில் விளக்கேற்றி வழிபட வேண்டும் .சிட்டி
விளக்குகளை வீட்டின் வாசல் படியிலும் ..உள்ளே உள்ள வாசல் படிகளிலும் படிக்கு மூன்று வீதம் ஏற்றி
வைப்பது மரபு

வீட்டில் முருகன் முன்னிலையில் நல்லெண்ணெயிலும் ,இலுப்பெண்ணெயிலும் விளக்கேற்றி வழிபடுவது
நல்லது அப்போதுதான் அஷ்ட்டலட்சுமி நம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் ,ஐஸ்வரியம் பெருகும் என்று
ஐதீகம் சொல்லுகிறது 

கவனிக்க படவேண்டிய முகூர்த்தம் | tamil muhurtham fixing time and dates

திருமணத்திற்கு முகூர்த்தம் குறிப்பதென்பது தாலி கட்டும் நேரம் குறிப்பது மட்டுமல்ல .திருமண சுப முகூர்த்த நாள் குறிக்கும் பொழுது நான்கு முக்கிய நிகழ்ச்சிக்கு நாள் குறிக்கவேண்டும்
அவையாவன

1) முகூர்த்தக்கால் நாட்ட  
2)மாப்பிள்ளை அழைப்பிற்கு நேரம் 
3)பெண் அழைப்பிற்கான நேரம் 
4)திருப்பூட்டுதல் என்னும் மங்கள நாண் சூட்டும் நேரம் 
5)சாந்தி முகூர்த்த நேரம் 

இதில் பெண் அழைப்பிற்கான நேரம் குறிக்கும் பொழுது வெள்ளிக்கிழமை பிறந்த வீட்டில் இருந்துபெண்ணை
அழைத்து விட யோசிப்பர் .லட்ஷமி கடாட்ஷகம் என்பது நம் வீட்டிலேயே தங்க வேண்டும் என்று யோசிப்பர்
அதே சமயம் மண்டபத்தில் இருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் .குறிப்பாக லட்ஷமி என்ற
அடிப்படையில் பெயர் அமைந்த பெண்களுக்கு வெள்ளி கிழமை பகல் வேலையில் பெண் அழைப்பு நடத்தலாம் .பெண் அழைப்பு என்ற சடங்கு தான் புகுந்த வீட்டில் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது

நல்ல சுப யோரை பார்த்து சாந்தி முகூர்த்தம் நடத்தினால் ஆண் வாரிசுகள் பிறக்கும் .அதே நேரம் குல தெய்வம் அல்லது இஷ்ட்ட தெய்வத்திற்கு வழிபாடு முடிந்து அதன் பின்னர் சாந்தி முகூர்த்தம் செய்தால்
பிறக்கும் குழந்தைகள் பிறர் போற்றும் அளவிற்கு வாழ்க்கை அமையும்

செவ்வாய் தோஷம் போக்கும் செந்தில் நாதன்| Sevvai Chevvai Dosham- god murugan parikaram






















ஒவ்வொரு மாதமும் கார்த்திகை வந்தாலும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையை மட்டுமே திரு கார்த்திகை என்று அழைக்கிறோம் .அந்த நாளில் கார்த்திகேயனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டு
செவ்வாய் தோஷம் நீங்க வழிவகை செய்துகொள்ளலாம்

அதுபோல் புரட்டாசி மாதம் வரும் நவராத்திரி விழாவில் சக்தி வழிபாட்டை ஒன்பது நாட்கள் கடை பிடித்த பிறகு
அடுத்து வரும் கார்த்திகை மாதத்தில் முருக பெருமான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்

அதுபோல் இடையில் வரும் ஐப்பசி கந்த சஷ்டி விழாவை கண்டு மகிழ்ந்து விரத மிருக்க வேண்டும் .அவ்வாறு செய்யும் போது தோஷம் விலகி சந்தோசம் வந்து சேரும்

எனவே திருக்கார்த்திகை தினம் முருகனை வழிபட்டால் திருமண தடை நீங்கும் என்பதை மறந்துவிட கூடாது 

Saturday, 11 November 2017

குரு திசை சரி இல்லை என்றால் ருத்ராட்ஷம் அணிவது சிறந்தது | guru dasa astrology

















குரு திசை சரி இல்லை என்றால் ருத்ராட்ஷம் அணிவது சிறந்தது ..ஆனால் மனம் மற்றும் உடல் சுத்தமாக
ஆலயம் போன்று வைக்க வேண்டும்

குரு திசை நடப்பில் ருத்ராட்ஷம் அணியும் முறை 

ருத்ராட்சம் அணிவதற்க்கென்று சில விதிமுறைகள் உள்ளது ருத்ராட்சம் ஏனோ தானவாக அணிந்தால்
அதனால் எந்த பிரதிபலனும் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ ஏற்ப்பட போவதில்லை

ருத்ராட்ஷம் வாங்கும் பொழுது பெரியவர்களின் துணையுடன் வாங்க வேண்டும் .பிறகு அதை சுத்தமான
தண்ணீரில் அல்லது எலுமிச்சை பழச்சாறு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் .பிறகு சுத்தமான விபூதியை
ஒரு நாள் முழுவதும் போட்டு வைத்து அடுத்த நாள் சிவாலயத்தில் உள்ள ஈஸ்வரனின் பாதங்களில் வைத்து
எடுத்து குரு அல்லது பெரியவர்களின் கரங்களில் அணிந்து கொள்வது முறை .

அது மட்டுமல்லாமல் ருத்ராட்ஷ மணிகள் புருஷ அம்சம் கொண்டது ..எனவே ஆண்களுக்கு மட்டுமே
இந்த குரு ப்ரீத்தி பரிகாரம் முறை பொருந்தும் என்று கூறுவார்கள் ஆனால் பெண்களும் பல
இடங்களில் அணிவதை பார்த்திருப்போம் ..

ஜாபால உபநிஷமானது இதை பொதுவான ருத்ராட்ஷய தாரண விதி என்றே கூறுகிறது ..அதனால் சிவ
வழிபாடு செய்பவராக இருந்தாலும் சரி அதுபோல் குரு திசை நடப்பவராக இருந்தாலும் சரி யார் வேண்டுமானாலும் இது அணியலாம்

rahu thisai palangal in tamil
guru dasa guru bhukti predictions
guru dasa for rishaba rasi
guru dasa rahu bhukti effects in tamil
puthan thisai palangal
kumbha lagnathil guru eruka palan
dasa puthi palangal in tamil
dasa bhukti palangal in tamil

Friday, 10 November 2017

தோஷம் நீங்க - ஏற்ற வேண்டிய தீபங்கள் மற்றும் சன்னிதி வலம் வருதல் || jothida pariharam

ஏற்ற வேண்டிய தீபங்கள்

1.    ராகு தோஷம்            - 21 தீபங்கள்
2.    சனி தோஷம்            -  9 தீபங்கள்
3.    குரு தோஷம்            - 33 தீபங்கள்
4.    துர்க்கைக்கு               -  9 தீபங்கள்
5.   ஈஸ்வரனுக்கு            - 11 தீபங்கள்
6.    திருமண தோஷம்   - 21 தீபங்கள்
7.    புத்திர தோஷம்        - 51 தீபங்கள்
8.    சர்ப்ப தோஷம்         - 48 தீபங்கள்
9.    காலசர்ப்ப தோஷம்- 21 தீபங்கள்
10.  களத்திர தோஷம்    -108 தீபங்கள்

வலம் வருதல்

1.    விநாயகர்                        -      1 அல்லது 3 முறை
2.    கதிரவன் (சூரியன்)      -      2 முறை
3.    சிவபெருமான்               -      3, 5, 7 முறை  (ஒற்றைப்படை)
4.    முருகன்                           -      3 முறை
5.    தட்சினா மூர்த்தி         -      3 முறை
6.    சோமாஸ் சுந்தர்          -      3 முறை
7.    அம்பாள்                          -      4, 6, 8 முறை  (இரட்டைப்படை)
8.    விஷ்ணு                          -      4 முறை
9.    இலக்குமி                       -      4 முறை
10.  அரசமரம்                        -      7 முறை
11.  அனுமான்                      -      11 அல்லது  16 முறை

12.  நவக்கிரகம்                  -      நவகிரகங்கள் நம்மை சுற்றுகின்றன அதனால் நாம் அவர்களை சுற்ற தேவையில்லை

13  பிராத்தனை                    -  108  முறை

* மூலவர் மற்றும் அம்மன் போன்ற திருவுருவங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது உட்பிரகாரத்தில் வலம் வரக்கூடாது.

* அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, சோமவாரம், சதுர்த்தி போன்ற நாட்களில் வில்வ இலை பறிக்கக்கூடாது. இதற்கு முந்தைய நாள் மாலையிலேயே இதைப் பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* மேலே துண்டு போட்டுக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.
...
* கொடி மரம், நந்தி, கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.

* விளக்கில்லாதபோது இருட்டில் வணங்கக்கூடாது.

* தகாத வார்த்தை மற்றும் எதிர்மறை சொற்களை பேசக்கூடாது.

* கோவிலுக்குள் தூங்கிவிடக்கூடாது. கோவிலுக்குச் சென்று வீடு திரும்பியதும், கால்களைக் கழுவக்கூடாது.

வணங்கும் விதி

பிரம்மா , விஷ்னு , சிவன் இம்மூவரை வணங்கும் போது , சிரசின் மேல் 12 அங்குலம் உயர்த்தி கைகூப்பி வணங்க வேண்டும்.
மற்ற தெய்வங்களை சிரசின் மேல் கைகூப்பி வணங்கினால் போதும்.
குருவை வணங்கும் போது , நெற்றியில் கைகூப்பி வணங்க வேண்டும்.
அரசரையும் , தகப்பனாரையும் வணங்கும் போது வாய்க்கு நேராக கைகூப்பி வணங்கவேண்டும்.
... பிராமணரை வணங்கும் போது மார்பில் கைகூப்பி வணங்க வேண்டும்.
தன்னுடைய தாயை வணங்கும் போது வயிற்றில் கைவைத்து வணங்க வேண்டும்.
மாதா, பிதா, குரு தெய்வங்களை வணங்கும் போது ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.பூமியில் நெடுஞசாண் கிடையாக வணங்க வேண்டும். ஆனால் பெண்கள் , மாதா , பிதா , குரு , தெய்வம் மற்றும் கணவனை வணங்கும் போது பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்களுடைய ஸ்தனங்கள் பூமியில் படக்கூடாது..

செய்யக்கூடாதவை இந்து ஆன்மீக தகவல் | Jathaka palan |

1.கோவிலில் தூங்க கூடாது ..

2.தலையில் துணி ,தொப்பி அணியகூடாது ...

3.கொடிமரம் ,நந்தி,பலிபீடம் ,இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது ..

4.விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது )வணங்க கூடாது ..

5.அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரகூடாது ..

6.குளிக்காமல் கோவில் போககூடாது ...

7.கோவிலில் நந்தி மற்றும் எந்த முர்த்திகளையும் தொடகூடாது ..

8.கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டகூடாது..

9.மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது ...

10.கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது..

11.படிகளில் உட்கார கூடாது .

12.சிவன் பெருமான் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும் ,பெருமாள் கோவில்களில் அமர கூடாது .

13.வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வம்களுக்கு தர கூடாது .

14.மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது .

15.கிரணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்க கூடாது .

16.கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது .

17.புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது

18.கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.

19.தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.

20. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.

21.தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது

22.எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது..
கோவில் நூலில் இருந்து ..

Thursday, 9 November 2017

நாக ஆலயங்கள் | naga poojai| sarpa dosham|temples

இந்த பதிப்பு தமிழகத்தில் உள்ள நாகா தளங்களை பற்றியது .தமிழகத்தில் பொதுவாகவே நாகா தளங்கள்
ஏராளம் உள்ளன அதில் சில முக்கியமான திருத்தளங்களை பற்றி இப்பொழுது பார்ப்போம் ..

சர்ப்ப விநாயகர் கோவில்
திருநாகேஸ்வரம்
திருப்பாம்புரம்
கீழப்பெரும்பள்ளம்
நாகர்கோவில்
நைனார் கோவில்
ஆதிகேசன் பூஜை செய்த தளமான பேரையூர்
சங்கரன் கோவில்
திருவெற்றியூர்
திருவேலங்காடு
திருச்சங்கோடு போன்ற இடங்களில் எல்லாம் ஆலயங்கள் இருக்கின்றது

அதுபோல் ராகுவிற்கு தெய்வமாக விளங்கும் துர்க்கை வழிபாட்டையும் மேற்கொள்ளலாம் .

பட்டீஸ்வராம் துர்க்கை
கதிரமங்கலம் வனதுர்க்கை
மகிஷாசுரமர்த்தினி அவதாரமாக விளங்கும் புதுக்கோட்டை மாவட்டம் பி .அளகாபுரி ஸ்ரீ பொன்னழகி
அம்மன் ஆலயம் மற்றும் வராகி அம்மன் வழிபாடுகளையும் மேற்கொள்ளலாம் .வாய்ப்பிருக்கும் பொழுது
இந்த ஆலயங்களுக்கு சென்று வழிபாட்டு வாருங்கள் ..தெய்வ அருள் பெற்று வாழ்க்கை ஒளிரட்டும்

how to remove naga dosham- kala sarpa dosha effects- sarpa dosha and marriage-naga dosha remedies in telugu
how to overcome naga dosham-sarpa dosha symptoms-kala sarpa dosha marriage-sarpa dosha nivarana mantra in kannada

Wednesday, 8 November 2017

செவ்வாய் தோஷத்திற்கு பைரவர் வழிபாடு | Sevvai or chevvai dosham tamil















பொதுவாக செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு இந்த பைரவர் வழிபாடு மிகவும் சிறந்தது ஆகும் ..ஆனால்
இந்த வழிபாடு செய்யவும் காலமும் நேரமும் பொருந்தி வரவேண்டும் என்றால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் இந்த வழிபாட்டின் சிறப்பை

செவ்வாய் தோஷத்திற்கு அஷ்டமி பைரவரை வழி படுவது சிறப்பு ..அதேநேரம் இந்த அஷ்டமி தினம் செவ்வாய் கிழமை அன்று வருவதாக இருந்தால் இன்னும் சிறப்பு ..அப்படி பட்ட நாளன்று பைரவரை வணங்கினால் கடன் தொல்லை தீரும் ,திருமணத்திற்கு உண்டான தடங்கல் மாறும் ,மன அமைதியோடு குடும்பத்தில் மகிழ்ச்சியும் பொங்கும் ,பண புழக்கம் அதிகரிக்கும் தடை பட்ட சுபகாரியங்கள் இனிதே நடக்கும்

மேலும் அந்த சுபதினத்தன்று செவ்வாடை சாத்தி சிவப்பு அரளிப்பூ மாலை சூட்டி ,வெல்லம் கலந்த பாயசம் உளுந்து வடை ,பால் தேன் வடை நிவேதினம் செய்து ,வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் சகல யோகங்களும் வந்து சேரும் என்பது நம்பிக்கை

இதே போல் வெள்ளி கிழமையில் வரும் தேய்பிறை அஷ்டமியும் பைரவருக்கு மிகவும் உகந்த நாள் .அன்றய தினம் பைரவரை வணங்குவதால் லட்சுமி கடாட்சம் பெருகும்

பைரவர் உடலும் நவ கிரகங்களும் - human body and nava greka jathakam





















ராகு-கேது எனப்படும் பாம்புகளை பூணூலாக தரித்திருப்பவர் பைரவர் .மேலும் சந்திரனை சிரசில் வைத்தும் ,சூலம் ,மழு ,பாசம் ,தண்டம் ஏந்தியும் காட்சி தருபவர் கால பைரவர் .

காலத்தின் வடிவமான காலத்திற்கு அதிபதியான கால பைரவரின் திரு உருவத்தில் பனிரெண்டு ராசிகளும் .அவற்றிற்குரிய ராசிகளும் அடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது

இந்த சிறப்பு மிக்க வடிவத்தை அதியமான் நெடுமான் அஞ்சி என்னும் மன்னன் ,தர்ம புரி மாவட்டம் அதியமான்
கோட்டை மல்லி கார்ஜுனர் கோவில் வளாகத்தில் நிர்மாணித்துள்ளனர் .

தலை -மேஷ ராசி ,வாய் -ரிஷப ராசி ,கை -மிதுன ராசி ,மார்பு -கடகம் ,வயிறு -சிம்மம் ,இடை -கன்னி ,புட்டம் -துலா ராசி ,லிங்கம் -விருச்சிகம் ,தொடை -தனுசு ராசி ,லிங்கம் -விருச்சிகம் ,தொடை -தனுசு ,முழந்தாள் -மகரம்
காலின் கீழ் பகுதி -கும்பம் ,பரதம் -மீன ராசி என்று சாஸ்திர ஜோதிட நூல்கள் கூறுகின்றன - article by astrostage live astrology tamil

Monday, 6 November 2017

விதியை மதியால் வெல்ல முடியுமா ? _ Tamil astrologer raghav verma article

"முயற்சித்து பார் எதுவும் முடியும்"
"விதியை மதியால் வெல்லலாம் "
என்று நம் மனதை தேற்றி நம்மை நாமே ஏமாற்றுவதில் நாம் நிகரற்ற முட்டாளாகிறோம் ..
படிக்கும் காலத்தில் கூ முட்டை என்று பெயரெடுத்தவர் ...பல தொழிலை செய்து ஏமாந்தவர்கள்
பின் வெற்றியாளர்களாக ,அறிஞ்சர்களாக ,கலைஞ்சர்களாக ,சாதனையாளர்களாக வலம் வந்த
கதை நீங்கள் கேட்டதில்லையா ?

சுவாமி விவேகானந்தரின் வார்த்தை ஓன்று உண்டு "நீ ஒன்றை அடைய வேண்டும்
என்று நினைத்தால் இந்த பிரபஞ்சத்தில் எந்த சக்தியாலும் அதை தடுக்க முடியாது" என்று
என்னை கேட்டால் அண்மை காலத்தில் விதியை ,கர்ம்மாவை... இதை விட தெளிவாக
சுருக்கமாக சொன்னவர்கள் எவரும் இல்லை ..அதே நேரத்தை இதன் எதிர்பதத்தை
கணக்கில் எடுங்கள் "இவ்வுலகத்தில் நீ ஒன்றை அடையக்கூடாது என்றிருந்தால் அதை
கொடுக்க இவ்வுலகத்தில் எந்த சக்தியாலும் முடியாது ..
பகவத் கீதையில் கர்மமா மற்றும் சொகர்மாவை பற்றி பல இடங்களில் வருகிறது
கர்மமா என்றால் உங்களுக்கு கிடைத்த வேலையை நீங்கள் செய்வது ..சொகர்மா என்றால்
நமக்கு பிடித்த வேலையை நாம் செய்வது ...இப்படி நீங்கள் எந்த வேலையை செய்தால் வெற்றி
பெற முடியும் ...
அதை விட்டு விட்டு உங்களுக்கு சம்பந்தமே இல்லாத தொழிலில் உங்கள் மனம் ஐக்கியப்படாத
தொழிலில் முயற்சி என்ற பெயரில் காலத்தையும் நேரத்தையும் வீணடிக்க கூடாது
உங்கள் ஆன்மாவோடு சம்பந்த பட்ட தொழில் எது என்று ஜாதக ரீதியாக ஆராய்ந்து
பயணித்தால் வாழ்வில் வெற்றியும் மகிழ்ச்சியும் நிச்சயம் ...

பிதுர்தோஷம் மிகவும் கொடியது- pithru dosham in tamil

நாம் தவறே செய்யாத போது .தவறை பற்றிய சிந்தனையே வராத போது துன்பங்களும் துயரங்களும் ஏன் வருகிறது ?  என்று யோசிக்கும் போதுதான் சோர்ந்து விடுகிறோம் ..
இந்த கண்ணிற்கு தெரியாத காரணம் எங்கிருந்து வருகிறது ..இதற்க்கெல்லாம் மூலகாரணமாக இருப்பது
பிதுர்தோஷம் தான் என்பது அனுபவம் நம் கண்ணிற்கு புலப்படுத்தும்

பிதுர்தோஷம் மிகவும் கொடியது..
நம் முன்னோர்கள் தேச வணக்கம் ,முன்னோர்கள் வணக்கம் ,தெய்வ வணக்கம்
இந்த மூன்றயும் மிக முக்கிய தர்மங்களாக கூறினார்கள் ..இன்று நம்மில் பெரும்பாலானோர்
முன்னோர்வணக்கம் என்று சொல்லப்படுகின்ற பிதுர்க்கர்மங்களை மறந்தே போய் விட்டோம்
பிதுர்களுக்கு செய்யப்படும் பக்தி நம் தலைமுறையை காப்பாற்றும் என்பது உலக நியதி..முன்னோர்களுக்கு சரியான வழிபாட்டை செய்யாமல் துன்பம் அனுபவிப்பவர்கள் இந்த மண்ணில் ஏராளம் ...மாதத்தில் ஒரு முறை பிதுர்களுக்கு செய்யவேண்டிய வழிபாடுகளை செய்ய வேண்டும் ..அதுவில்லை என்றால் வருடத்திற்கு
ஒருமுறையாவது ஆடி அம்மாவாசை தினங்களில் பிதுர் வழிபாடு செய்வது நல்லது

pithru dosham temple in tamilnadu-
pithru dosham pariharam in rameswaram-
dosha pariharam tamil
puthira dosham in tamil-
pithru dosham horoscope-
puthira pakkiyam in tamil-
pitra dosha pariharam in rameshwaram
pithru dosham pariharam in telugu

காதல் திருமணம்- love marriage astrology tamil

காதல் திருமணம் மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கான கிரக அமைப்பு

செவ்வாயும் ,சுக்கிரனும் சேர்ந்து இருந்தாலோ , குருவும் சுக்கிரனும் சேர்ந்து இருந்தாலோ மகிழ்ச்சியான திருணமண வாழ்கை .
மூன்றாம் அதிபதி ஏழில் இருந்தால் காதல் திருமணம் ..வீட்டை விட்டு வெளியேறும் நிலை .அதுபோல் 7ம் அதிபதி 3ல் இருந்தாலும் காதல் செய்து வீட்டை விட்டு ஓடும் நிலை ஏற்படும்
குரு ,சுக்கிரன் சேர்ந்திருந்தால் காதல் திருமணம் 
சந்திரன் ராகு சேர்ந்திருந்தால் காதல் திருமணம்
ஆண் ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்த இடத்தில பெண் ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்தால் நல்ல
பொருத்தம் ..
அதுபோல் பெண் ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்த இடத்தில ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்தால் நல்ல பொருத்தம்

kadhal jodi porutham in tamil-
love calculator in tamil language- 
love marriage astrology by date of birth
jathaka porutham table-
free name porutham for marriage-only name matching for marriage in tamil-jathaka porutham by date of birth
name porutham for partners

Sunday, 5 November 2017

கண் திருஷ்டி போக சிறந்த பரிகாரம் |குழந்தைகள் படிக்க பரிகாரம் | children study remedies in tamil

கண் திருஷ்டி போக சிறந்த பரிகாரம்

1) ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும்குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும்
கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை (கண்திருஷ்டி)விரட்டும் ஆற்றல் உண்டு.

2)வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள்.இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி
தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம்உண்டு என்பது நம்பிக்கை ..அதனால் தான் இன்றும் திருமணம் போன்ற பல சுப நிகழ்ச்சிக்கு வாழையை முதலில் காட்டுகிறார்கள்

3) கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளைதிசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும்
கண்ணாடியை வரவேற்பறையில் அல்லதுவீட்டின் உள்வாசலில் வைக்கலாம். மீன்தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்புமீன்களை வளர்க்கலாம். கண் திருஷ்டி கணபதிபடம் வைக்கலாம்

4) வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள்அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி
ஆகியவற்றை வளர்க்கலாம். ஆகாச கருடன்என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதைவாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்துகருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின்
வாசலில் தொங்க விடலாம்.

5) உப்புக்குளியல்: வாரம் ஒருமுறை கல்உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து
வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி,சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்தகிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில்இவ்வாறு குளிக்கலா

6) எலுமிச்சம்பழம்: வியாபாரத் தலங்களில்திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து
ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும்,மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத்தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொருசெவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும்.பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த
பழத்தை மூன்று முறை கடையை சுற்றிதெருவில் வீசிவிடவும்.

7) திதிகள்: அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி,நவமி போன்ற நாட்களில் காலை, மாலைஇருவேளையும் சாம்பிராணி பொடியுடன்,கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள்ஆகியவற்றை கலந்து வீடு, கடை
அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்டதிருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்

8) முடக்கற்றான், பச்சை கற்பூரம், கஸ்தூரிமஞ்சள், ஜவ்வாது, ஆகியவைகளைக் கூட்டி
அரைத்து அந்தப் பொடியை பசு கோமியத்தில்கரைத்து வீட்டிலோ, வியாபார ஸ்தலத்திலோ,
தெளிக்க தீய சத்திகள்,கண் திருஷ்டி,நீங்கிசெல்வ செழிப்பு பெறலாம்.

குழந்தைகள் படிக்க பரிகாரம் 

நன்றாக படித்துக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு திடீர் என்று படிப்பில் கவனம் குறைந்தாலோ அல்லது வீட்டில் கடன் தொல்லை ஏற்பட்டாலோ விநாயகரின்ஆலயத்தில் அவர்களின் பெயரில் அர்ச்சனை
செய்து, தேங்காய் எண்ணையையும், தன்குலத்தை காக்கும் குலதெய்வத்திற்க
ு பிடித்தமான விளக்கெண்னையும் ஒன்றாககலந்து, அர்ச்சனை செய்த தேங்காயில் ஊற்றி
தீபம் ஏற்றினால் பிரச்சனைகள் விலகும்.நம்முடைய முன்னேற்றம் தேங்காமல்
விருத்தியாகும்.

கடல் நீர்: 

வளர்பிறையில் வரும் செவ்வாய்,சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச்
சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில்மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம்,
வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்தபரிகாரம். கடல் தண்ணிரில் குளித்தால் உடலில்
இருக்கும் அந்த ஏழு சக்கரங்களும் பலம்பெறும

Saturday, 4 November 2017

ஜாதகம் பொருத்தம் | Jathaga porutham

ஜாதகம் பொருத்தம் ஒரு பெண்ணிற்கு பார்க்கும் பொழுது ..ஒரு ஆண்மகனின் ஜாதகத்தில் களத்திர தோஷம்
உள்ளதா என்பதை கீழ்கண்ட கட்ட அமைப்புகளை வைத்து துல்லியமாக ஜோதிடரை கொண்டு பார்ப்பது
நல்லது

எட்டுக்குடையவன் ஏழாமிடத்தில் இருக்கக் கூடாது.

ஏழுக்குடையவன் எட்டாமிடத்தில் இருக்கக் கூடாது.

ஏழாமிடத்ததிபதி ஐந்தாமிடத்திலோ அல்லது ஐந்தாமிடத்ததிபதி

ஏழாமிடத்திலோ இருக்கக் கூடாது.

சுக்கிரனுக்குப் பாவகிரகங்களின் சம்பந்தம் இருக்கக் கூடாது.

சுக்கிரனுக்கு நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய இடங்களில் பாவக்கிரகங்கள் இருத்தல் கூடாது.

ஏழாமிடத்ததிபதி கடைசி நவாம்சத்தில் இருக்கக் கூடாது.

இவற்றுடன் சேர்த்து நட்சத்திர பொருத்தம் ..பாவசாம்யம் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும் . இவைகளையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் வெறும் நட்சத்திரப் பொருத்தம் பார்த்தோம், செவ்வாய் தோஷத்துக்குப் பரிகாரம் செய்தோம், பத்துக்குப் பத்துப் பொருத்தமும் சரியாக உள்ளது என்றெல்லாம் சொல்லி திருமணம் செய்து வைத்தால் திருமண வாழ்க்கை தோல்வியில்
 தான் முடியும் 

Friday, 3 November 2017

ஸ்படிக லிங்க வழிபாடு- spatika lingam| Spadika lingam tamil



ஸ்படிக லிங்க தத்துவம்:

யோகிகள், தங்கள் சிரசிலுள்ள சகஸ்ரார கமலத்தில் இதில் சகஸ்ரார கமலம்  என்பது ஆயிரம் இதழ் தாமரை போன்றது. இதில் , சிவனை ஜோதி வடிவாக வைத்து தியானம் செய்வார்கள்.அப்போது, சந்திரமண்டலத்தில் இருந்து அமிர்தம் கொட்டுமென்றும் அதில் அவர்கள் பரமானந்த நிலையில் திளைப்பார்கள் என்றும் புராணங்கள் சொல்கிறது 

இதன் காரணமாக, உலக வடிவான ஜோதிர்லிங்கம் குளிரும்.
அது குளிர்ந்தால் உலகமே குளிரும் என்றும் சொல்லப்படுகிறது 
உலகம் குளிர்வது என்றால் மழை பொழிவது ..நாடு செழிப்பாவது அதாவது, மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள்என்று பொருள் கொள்ளலாம் 

ஆனால் சாமானிய மனிதர்களுக்கு இது போன்ற யோகம் சாத்தியமல்ல.
நாம் செய்யும் யோகா எல்லாம் உடல்நலத்துக்காக மட்டுமே பயன்படும் 
லிங்கம் குளிர்ச்சியாக இருக்க வேண்டுமே என்பதற்காகத்தான் வடக்கேயுள்ள ஜோதிர்லிங்கத் தலங்களில் பக்தர்களே அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

ஸ்படிக லிங்க வழிபாடு ஜாக்கிரதையா இருங்க!பூஜையறையில், கண்ணாடிபோல் இருக்கும் ஸ்படிக லிங்கம் வைத்து வழிபடுவோர் ஏராளமாக இருக்கிறார்கள்.இதை வைத்து வழிபடும் போது நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் , உங்கள் மனதில்என்ன தோன்ற வேண்டும் தெரியுமா?ஸ்படிகலிங்கத்திற்கு நிறம் கிடையாது.ஆனால், அதன் பின்னால் ஒரு செவ்வரளியை வைத்தால் சிவப்பாகத் தோன்றும். வில்வத்தை வைத்தால் பச்சையாக இருக்கும்.அதாவது, எதை வைத்துள்ளோமோ, அந்த நிறத்தை அப்படியே உள்வாங்கி நம்மிடம் காட்டும்.

அதே போல், நாம் என்ன எண்ணத்துடன் அந்த லிங்கத்தை வணங்குகிறோமோ, அதற்குரிய பலனே நமக்கு கிடைக்கும்.
நம் எதிரிக்கு கூட கஷ்டம் வர வேண்டும் என அந்த லிங்கத்திடம் கேட்கக்கூடாது.அவ்வாறு கேட்டால், அது நம்மையே வந்தடையும்.
எனவே, ஸ்படிக லிங்க வழிபாட்டை விளையாட்டாக நினைத்து விடக்கூடாது 

யாருக்கும் தீங்கு விளைவிக்க வேண்டும் என்ற எண்ணமில்லாமல் ..முழு பக்தியுடன் ஸ்படிக லிங்கத்தை வைத்து வணங்கினால் எண்ணியவை கைகூடும் என்பது நிச்சயம் 

ஐப்பசி மாத பௌர்ணமியை பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் | aanmeega thagaval tamil


அன்னம் என்பதற்கு உட்கொள்வது, உட்கொள்ளப்படுவது என்று பொருள் சொல்லப்படுகிறது . தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் என்பது நாம் அறிந்ததே . உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிர்களுக்கும் உணவு என்பது மிகவும் இன்றியமையாததொன்று . அதை தனக்குரியதாக மட்டுமே வைத்துக்கொள்ளும் எவராக இருந்தாலும், அவர்களை விட்டு இறைவன் விலகியே நிற்பன் என்று வேதசாஸ்திரம் கூறுகிறது . அந்த வேத உண்மையை பறைசாற்றும் விதமாகவே இன்றும் பல கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. 






அன்னம் என்பதற்கு உட்கொள்வது, உட்கொள்ளப்படுவது என்று பொருள் சொல்லப்படுகிறது . தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் என்பது நாம் அறிந்ததே . உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிர்களுக்கும் உணவு என்பது மிகவும் இன்றியமையாததொன்று . அதை தனக்குரியதாக மட்டுமே வைத்துக்கொள்ளும் எவராக இருந்தாலும், அவர்களை விட்டு இறைவன் விலகியே நிற்பன் என்று வேதசாஸ்திரம் கூறுகிறது . அந்த வேத உண்மையை பறைசாற்றும் விதமாகவே இன்றும் பல கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இறைவன் திருமேனியில் வைக்கப்பட்ட அன்னமானது  பிரசாதமாக பக்தர்களும், நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது .

தட்சன் என்பவனுக்கு 27 பெண் பிள்ளைகள் உண்டு . அவர்கள் அனைவரையும் சந்திரன் மணம் முடித்துக் கொண்டான். ஆனால் அவர்களில் ரோகிணியிடம் மட்டுமே அவன் அதிக காதலுடன் இருந்ததாக புராண கதைகள் சொல்கின்றது . இதுபற்றி மற்ற பெண்கள் தன் தந்தையிடம் புகார் செய்ய . திரு மணம் செய்து கொடுக்கும்போது, அனைத்து பெண்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று கூறியிருந்த வார்த்தை சந்திரன் மீறிவிட்டதாக தட்சன் கருதுகிறான் , எனவே தட்சன் சந்திரனுக்கு சாபம் கொடுக்கின்றான் . இதனால் சந்திரன் கலை இழந்து தேயத் தொடங்குகிறார் . அதன்பிறகு சாபத்தில் இருந்து மீள, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான் சந்திரன். ஈசனின் அருளால் தனது முழு ஆற்றலையும் முழுமையாக சந்திரன் பெற்ற தினமே ஐப்பசி பவுர்ணமியாகும் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகிறது 

சந்திரன் பெற்றது போலவே, நாமும் முழு ஆற்றலையும் அடையும் நோக்குடன் தான் ஐப்பசி பவுர்ணமி நாளில், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபடுகிறார்கள் 

சந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பவுர்ணமியாகும். இது அறிவியல் ரீதியாகவும் உலகில் நிரூபிக்கப்பட்டது . அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்கிறோம் என்பதை 
நாம் அறியவேண்டும் 

சந்திரனின் சாபம் தீர்ந்ததற்காகவா நாம், ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறோம். அது மட்டுமே காரணம் அல்ல.. இந்த நிகழ்வுக்கு ஆன்மிக ரீதியான அறிவார்ந்த தத்துவம் ஒன்று குறிப்பிடப்படுகிறது வேத புத்தகங்களில் 

சிவலிங்கம் என்பது ஆகாயம். ஆவுடையார் என்பது பூமி என்பதை அறிக  இந்த ஆகாய லிங்கத்துக்கு கடலில் இருந்து தண்ணீரை எடுத்துக் கொண்டு போய் மேகங்கள் மழையாய் பொழிந்து அபிஷேகம் செய்கின்றன. நட்சத்திரங்கள் ஆகாய லிங்கத்துக்கு மாலையாகவும், திசைகளே ஆடையாகவும் இருக்கின்றன. ‘தரை உற்ற சக்தி’ என்ற திருமந்திரப் பாடலின் விளக்கம் இது.

இந்தத் தகவலைச் சொன்ன திரு மூலருக்கும் கூட ஐப்பசி மாதம் தான் குருபூஜை வருகிறது என்பது நாம் யாவரும் அறியவேண்டிய . அதனால்தான் போலும் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் செய்கிறோம். ஆண்டவன் என்னும் ஆகாயத்தின், ஒரே கூரையின் கீழ்தான் நாம் அனைவரும் இருக்கிறோம். அதனால் ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து, அதை எந்த விதமான பேதமும் பார்க்காமல் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பது இதன் தத்துவார்த்தமாக இருக்கிறது. இதுபற்றி கந்தபுராணத்திலும், திருமூலரின் திருமந்திரத்திலும் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது 

அன்றைய தினம் மாலையில் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, நன்கு துடைத்து விட்டு, இறைவனின் திருமேனியை மூடும் அளவுக்கு அன்னத்தை சாத்துவார்கள். பிறகு இறைவனுக்கு தீபாராதனைச் காட்டுவார்கள் . தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்படுகிறது . இறைவனின் திருமேனியில் உள்ள அன்ன அலங்காரத்தைக் களைந்து, அதில் சிறிதளவு அன்னத்தை எடுத்து லிங்கம்போல் செய்து பூஜிப்பார்கள். அதை எடுத்துக் கொண்டுபோய், ஊரில் உள்ள குளம், ஏரி, நதி போன்ற நீர்நிலைகளில் விடுவார்கள். இதனால் ஊரில் விளைச்சல் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது. பலருக்கு செல்வச் செழிப்பில் இருந்தாலும், உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் சாப்பிட முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது. இதை ‘அன்ன த்வேஷம்’ என்பார்கள். இப்படிப்பட்டவர்கள், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை, எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும்.

ஒருவன் எவ்வளவு பெரிய, பெரிய தான- தர்மங்களைச் செய்தாலும் கூட, அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்குச் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது என்பது நமது முன்னோர்களின் வாக்காகும். அது எவ்விதத்திலும் பொய்யில்லை என்பதே இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகமும், அதை அனைவருக்கும் கொடுக்கும் முறையும் இதில் இருந்து நாம் உணர்ந்து கொள்ளலாம் .- Tamil aanmiga or aanmeega thagavalkal 

Thursday, 2 November 2017

பாக்கியாதி பதி பாக்கியஸ்தானம் தருவது என்ன ? | 9th house vedic astrology

இங்கு ஜோதிடத்தை நம்புகின்ற பலரும் பாக்கியாதி பதி என்றால் வீடு வாகனம் என்று தான் நினைக்கின்றார்கள் .ஆனால் உண்மையை சொல்லப்போனால் பாக்கியாதி பதி சொல்லுவது போன ஜென்மத்தில் நீங்களும் உங்கள் முன்னோர்களும் செய்த பாவ புண்ணியங்களையும் இந்த 
ஜென்மத்தில் ஜாதகரின் மகிழ்ச்சியும் தான் 

ஒரு ஜாதகர் எத்தனை பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் அவரின் மகிழ்ச்சி மட்டுமே அவரின் பாக்கியத்தை குறிக்கிறது..அது போல் ஒரு ஜாதகத்தில் பாக்கியாதி பதி குறிப்பது ஒரு ஜாதகரின் மகிழ்ச்சி ,கவலை ,பக்குவம் ஆகியவை தான்..வீட்டில் பறவைகள் மிருகங்கள் எடுத்து காட்டுக்கு மாடு கோழி போன்றவை வளர வேண்டும் என்றால் பாக்கியாதி பதி பலமாக அந்த ஜாதகத்தில் இருக்க வேண்டும்..

ஒரு ஜாதகத்தில் பாக்கியாதிபதியின் திசை சரி இல்லை என்றால் அது பலம் குறைந்துள்ளது என்றே பொருளாகும்..ஒரு ஜாதகத்தில் குரு பலத்துடன் பாக்கியஸ்தானத்தில் நின்றால் வேறொன்றும் பார்க்க 
தேவை இல்லை என்றே கூறுவார் குருவிற்கும் பாக்யத்திற்கும் அத்தனை சம்பந்தம் உண்டு ..ஆண் ஜாதகத்திற்கு ஒன்பதாம் பாவம் என்பது எவ்வளவு முக்கியமோ அது போல் பெண் ஜாதகத்திற்கு ஐந்தும் 
ஒன்பதும் முக்கியம் பெண் ஜாதகத்திற்கு 5ம் 9ம் பாவங்கள் கெட்டு போனால் பாக்கியம் மட்டுமல்ல சகல சௌபாக்கியங்களும் கெட்டு போகும் என்று பழைய ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

அதுமட்டுமல்ல ஒரு ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் என்று சொல்ல படுகின்ற 9ம்  வீடு 9 ம் பாவம் நேர்மை, நம்பிக்கை, விசுவாசம், தெய்வ நம்பிக்கை, கருணை, மனிதாபிமானம், ஆராய்ச்சி திறன், உள்ளுணர்வு, உபாசனை, மத நம்பிக்கை, தான தருமம், தியாக சிந்தனை, உயர்கல்வி போன்றவைகள் ஒருவரை மற்றவரிடமிருந்து பெரிய அளவில் (தனித்தன்மை) வேறுபடுத்திக் காட்டும்.

9 ம் பாவம் லக்னத்திற்கு முன் திரிகோணம் என்பதால் உறவுமுறையில் தந்தையையும், தந்தையின் மூதாதையர்களையும் குறிக்கும்.

பெருந்தன்மை, முன் யோசனை, நீண்ட தூரப்பயணம், தீர்த்த யாத்திரை, கடற்பயணம், விமான பயணம், வெளிநாடு, அன்னிய நபர்கள், உயர்கல்வி, பல்கலைக் கழகங்கள், இயற்கை, தெய்வ அனுக்கிரகம், கோவில், சர்ச், மசூதி, குல தெய்வம், வணங்கக்கூடிய நபர்கள், குரு, வெளிநாட்டுச் செய்திகள், நீண்ட தூர செய்திகள், வானொலி, தொலைக்காட்சி, கம்பியில்லா தந்தி, ஆவியுலக தொடர்புகள், உலக அனுபவங்கள், 

சட்டம் – ஒழுங்கு, நீதித்துறை, நீதி நெறி, சட்டப்பூர்வமாக நடுவராக இருந்து தீர்ப்பளித்தல் (நீதிபதி), ஏற்றுமதி, இறக்குமதி, சர்வ தேச வர்த்தகம், பரம்பரை சொத்து, பண முடக்கம், தொழில் நஷ்டம் மேலும் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களால் கிடைக்கும் நன்மை, தீமைகள் போன்றவை 9ம் பாவத்தின் காரகங்களாகும். 

ராகு திசை | Tamil online astrology | online jathagam

ராகு திசை சரி இல்லையென்றால் மன அழுத்தத்தையும் மிக கெட்ட கனவுகளையும் தரும் ..அதை இன்றய நாகரீக உலகத்திலும் பேய் பிசாசு ,,என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள் உண்டு .எடுத்து காட்டுக்கு நாம் தூங்கும் போது நம் கழுத்தை பிடித்து யாரோ நெறிப்பது போன்ற உணர்வு ..பிணவாடை ,

நாம் உறங்கும் பொழுது யாரோ நம்மை பெரிய கட்டிலில் இருந்து தூக்கி எறிவது போன்ற உணர்வு ..நாம் உறங்குகின்ற கட்டிலோடு சேர்ந்து நாம் கறங்குவது போன்ற உணர்வு இவற்றை எல்லாம் ராகு திசை ராகு அபகரங்களிலோ ..அல்லது ராகு திசை சூரிய பூத்தியிலோ ..ராகு திசை சந்திர புத்தியிலோ அதிகம் உணரலாம் ..

பொதுவாக ஏழரை ஆண்டு சனி காலகட்டங்களில் ராகு திசை நடந்தாலோ ..அல்லது ராகுவுடன் சூரியன் சந்திரன் ஏதாவது சம்பந்த பட்டாலும் இது போன்று மேல் சொன்ன விஷயங்கள் நடக்கலாம்..ஒரு ஜாதகத்தில் சந்திரன் சரி இல்லாமல் ..சந்திர திசை காலகட்டங்களில் ராகு சனி சம்பந்த பட்டால் மரண பயத்தை ராகு 
காட்டுவார் ..

இது போன்று நேர்ந்தால் அருகில் உள்ள நாகர் கோவிலுக்கு சென்று நாகருக்கு பால் அபிஷேகம் செய்வது நன்று .பறவைகளை துன்புறுத்த கூடாது ..வெறுமனே இருக்கின்ற சர்ப்பதை கொள்ளக்கூடாது ..காட்டில் உள்ள பாம்பின் புற்றுக்களை இடிக்க கூடாது..ராகு திசை ராகு புத்தியில் கர்ம பலம் உண்டென்று பழைய ஜோதிட நூல்கள் கூறுகின்றன ..தகப்பனின் ஆயுள் கெட்டியாக இருந்தால் அந்த தோஷம் சந்ததிகளுக்கு தரலாம் ..குடும்பத்தில் மூன்று பேருக்கு ராகு திசை நடந்தால் விலகி இருப்பது நல்லது  

 
jothidam karka tamil pdf,jothidam karka pdf,jothidam karpom,jothidam padam,tamil jothidam lessons pdf-jothidam karka in tamil youtube,jothidam parpathu eppadi,tamil jothidam blogspot- thirumana porutham - jathagam porutham - jathagam in tamil - Tamil rasi Palan - ஜோதிடம் தமிழ் - திருமண பொருத்தம் தமிழில் - jathagam porutham in tamil - marriage Matching Tamil Software - Tamil Horoscope in 2017 - tamil matha jothidam - jathagam porutham for marriage - rasi palan in tamil 2017 - Astrology in Tamil 2017, Horoscope in tamil 2017, thirumana Porutham, pathu poruthangal, Mukkiya Poruthangal - marriage matching horoscope in tamil Online, marriage matching in tamil astrology online, Tamil Marriage Match Calculator, Nakshatra Matching for marriage, 10 porutham for- marriage tamil jothidam online-tamil jothidam 2017-best jothidam in tamil language-tamil jothidam free software download-jothidam tamil books dinakaran jothidam-tamil jothidam marriage-dinamani jothidamin tamil

Copyright @ 2017 Vidwans web creations.