ஸ்படிக லிங்க தத்துவம்:
யோகிகள், தங்கள் சிரசிலுள்ள சகஸ்ரார கமலத்தில் இதில் சகஸ்ரார கமலம் என்பது ஆயிரம் இதழ் தாமரை போன்றது. இதில் , சிவனை ஜோதி வடிவாக வைத்து தியானம் செய்வார்கள்.அப்போது, சந்திரமண்டலத்தில் இருந்து அமிர்தம் கொட்டுமென்றும் அதில் அவர்கள் பரமானந்த நிலையில் திளைப்பார்கள் என்றும் புராணங்கள் சொல்கிறது
இதன் காரணமாக, உலக வடிவான ஜோதிர்லிங்கம் குளிரும்.
அது குளிர்ந்தால் உலகமே குளிரும் என்றும் சொல்லப்படுகிறது
உலகம் குளிர்வது என்றால் மழை பொழிவது ..நாடு செழிப்பாவது அதாவது, மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள்என்று பொருள் கொள்ளலாம்
ஆனால் சாமானிய மனிதர்களுக்கு இது போன்ற யோகம் சாத்தியமல்ல.
நாம் செய்யும் யோகா எல்லாம் உடல்நலத்துக்காக மட்டுமே பயன்படும்
லிங்கம் குளிர்ச்சியாக இருக்க வேண்டுமே என்பதற்காகத்தான் வடக்கேயுள்ள ஜோதிர்லிங்கத் தலங்களில் பக்தர்களே அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
ஸ்படிக லிங்க வழிபாடு ஜாக்கிரதையா இருங்க!பூஜையறையில், கண்ணாடிபோல் இருக்கும் ஸ்படிக லிங்கம் வைத்து வழிபடுவோர் ஏராளமாக இருக்கிறார்கள்.இதை வைத்து வழிபடும் போது நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் , உங்கள் மனதில்என்ன தோன்ற வேண்டும் தெரியுமா?ஸ்படிகலிங்கத்திற்கு நிறம் கிடையாது.ஆனால், அதன் பின்னால் ஒரு செவ்வரளியை வைத்தால் சிவப்பாகத் தோன்றும். வில்வத்தை வைத்தால் பச்சையாக இருக்கும்.அதாவது, எதை வைத்துள்ளோமோ, அந்த நிறத்தை அப்படியே உள்வாங்கி நம்மிடம் காட்டும்.
அதே போல், நாம் என்ன எண்ணத்துடன் அந்த லிங்கத்தை வணங்குகிறோமோ, அதற்குரிய பலனே நமக்கு கிடைக்கும்.
நம் எதிரிக்கு கூட கஷ்டம் வர வேண்டும் என அந்த லிங்கத்திடம் கேட்கக்கூடாது.அவ்வாறு கேட்டால், அது நம்மையே வந்தடையும்.
எனவே, ஸ்படிக லிங்க வழிபாட்டை விளையாட்டாக நினைத்து விடக்கூடாது
யாருக்கும் தீங்கு விளைவிக்க வேண்டும் என்ற எண்ணமில்லாமல் ..முழு பக்தியுடன் ஸ்படிக லிங்கத்தை வைத்து வணங்கினால் எண்ணியவை கைகூடும் என்பது நிச்சயம்
0 comments:
Post a Comment