முதலில் சந்திராஷ்டமம் என்றால் என்ன என்பதை பார்ப்போம்
சந்திரன் + அஷ்டமம்(எட்டு) = சந்திராஷ்டமம்
பொருள்: சந்திரன் நின்ற ராசியில் இருந்து எட்டாம் இடத்தில் இருப்பாதாகும்..ஒவ்வொரு மதமும் எல்லா ஜாதகருக்கும் சந்திராஷ்டமம் வரும் .
சந்திராஷ்டமம் என்றால் சுப நிகழ்ச்சிகள் ஆகாது என்று கூறுவார்கள் ..ஆனால் என்னை பொறுத்தவரை அந்த
கருத்து சிறிது முரணானது ஆகும் .சந்திராஷ்டமம் காலம் பொதுவாக சுப சடங்குகள் வைக்கமாட்டார்கள் .
திருமணத்திற்கு முகூர்த்தம் குறிக்கும் போது ..ஆண் மற்றும் பெண் இவர்களில் யாராவது ஒருவருக்கு சந்திராஷ்டமம் என்றால் அன்று முகூர்த்தம் வைக்க மாட்டார்கள் அது சரி தான் .அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்..மற்றும் பூப்புனித நீராட்டு விழா , வீட் டிற்கு தறி தட்டுதல் போன்ற சடங்குகள்
தவிர்க்க வேண்டும் ..அதே நேரம் யுத்தம் செய்தல் ,தேர்வு எழுதுதல் போன்றவற்றிக்கு சந்திராஷ்டமம்
உத்தமம் என்பது அதிகம் பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை ..அரச காலகட்டங்களில் அவர்களின்
குடும்ப ஜோதிடர்கள் யுத்த பயிற்சிக்கும் , போர் அறிவித்தல் மற்றும் போர் தொடங்குவதற்கு அரசனின்
சந்திரஸ்டமா நாளையே குறிப்பார்கள்
தீர்வுகள்:
இக்காலத்தில் நாம் பொறுமையுடன் இருக்க வேண்டும். மனஅமைதிக்கு வேண்டுமென்றால் சந்திரனின் அதிதேவதையான பார்வதியை வணங்குவதும் சிவா புராணம் வாசிப்பதும் நலம் .
ம யோகா - தியானம் - பிராணாயாமம் போன்ற முறைகளை செய்யவேண்டும் “
சந்திரனின் காரகத்துவம்
வளர்பிறை காட்டிலும் தேய்பிறையில் சந்திர மறைவு அதிக பலம் உள்ளதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது . சந்திரனை மனநிலைக்கு உரியவன் (மனோகாரகன்) என்றும் போக்குவரத்துகளுக்கு காரகன் என்றும் நட்சத்திர சிந்தாமணி, குமார சாமியம் (கோசாரபடலம்), கோசார தீபிகை, உத்திரகாலமிருதம் மற்றும் பல ஜோதிட நூல்கள் வர்ணிக்கின்றன
சந்திரன் நம் ராசிக்கு மறைந்து நிற்கும் போது மனதில் தெளிவிண்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக கோபப்படுதல், பொறுமை இன்மையால் எரிச்சல், அடுத்தவரிடத்தில் தேவையற்ற கோபம், இல்லறத்தில் சண்டை போன்ற உணர்ச்சி சார்ந்த பிழறல்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம்- Article by Indian vedic astrologer ragav verma
0 comments:
Post a Comment