ராகு திசை சரி இல்லையென்றால் மன அழுத்தத்தையும் மிக கெட்ட கனவுகளையும் தரும் ..அதை இன்றய நாகரீக உலகத்திலும் பேய் பிசாசு ,,என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள் உண்டு .எடுத்து காட்டுக்கு நாம் தூங்கும் போது நம் கழுத்தை பிடித்து யாரோ நெறிப்பது போன்ற உணர்வு ..பிணவாடை ,
நாம் உறங்கும் பொழுது யாரோ நம்மை பெரிய கட்டிலில் இருந்து தூக்கி எறிவது போன்ற உணர்வு ..நாம் உறங்குகின்ற கட்டிலோடு சேர்ந்து நாம் கறங்குவது போன்ற உணர்வு இவற்றை எல்லாம் ராகு திசை ராகு அபகரங்களிலோ ..அல்லது ராகு திசை சூரிய பூத்தியிலோ ..ராகு திசை சந்திர புத்தியிலோ அதிகம் உணரலாம் ..
பொதுவாக ஏழரை ஆண்டு சனி காலகட்டங்களில் ராகு திசை நடந்தாலோ ..அல்லது ராகுவுடன் சூரியன் சந்திரன் ஏதாவது சம்பந்த பட்டாலும் இது போன்று மேல் சொன்ன விஷயங்கள் நடக்கலாம்..ஒரு ஜாதகத்தில் சந்திரன் சரி இல்லாமல் ..சந்திர திசை காலகட்டங்களில் ராகு சனி சம்பந்த பட்டால் மரண பயத்தை ராகு
காட்டுவார் ..
இது போன்று நேர்ந்தால் அருகில் உள்ள நாகர் கோவிலுக்கு சென்று நாகருக்கு பால் அபிஷேகம் செய்வது நன்று .பறவைகளை துன்புறுத்த கூடாது ..வெறுமனே இருக்கின்ற சர்ப்பதை கொள்ளக்கூடாது ..காட்டில் உள்ள பாம்பின் புற்றுக்களை இடிக்க கூடாது..ராகு திசை ராகு புத்தியில் கர்ம பலம் உண்டென்று பழைய ஜோதிட நூல்கள் கூறுகின்றன ..தகப்பனின் ஆயுள் கெட்டியாக இருந்தால் அந்த தோஷம் சந்ததிகளுக்கு தரலாம் ..குடும்பத்தில் மூன்று பேருக்கு ராகு திசை நடந்தால் விலகி இருப்பது நல்லது
0 comments:
Post a Comment