இங்கு ஜோதிடத்தை நம்புகின்ற பலரும் பாக்கியாதி பதி என்றால் வீடு வாகனம் என்று தான் நினைக்கின்றார்கள் .ஆனால் உண்மையை சொல்லப்போனால் பாக்கியாதி பதி சொல்லுவது போன ஜென்மத்தில் நீங்களும் உங்கள் முன்னோர்களும் செய்த பாவ புண்ணியங்களையும் இந்த
ஜென்மத்தில் ஜாதகரின் மகிழ்ச்சியும் தான்
ஒரு ஜாதகர் எத்தனை பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் அவரின் மகிழ்ச்சி மட்டுமே அவரின் பாக்கியத்தை குறிக்கிறது..அது போல் ஒரு ஜாதகத்தில் பாக்கியாதி பதி குறிப்பது ஒரு ஜாதகரின் மகிழ்ச்சி ,கவலை ,பக்குவம் ஆகியவை தான்..வீட்டில் பறவைகள் மிருகங்கள் எடுத்து காட்டுக்கு மாடு கோழி போன்றவை வளர வேண்டும் என்றால் பாக்கியாதி பதி பலமாக அந்த ஜாதகத்தில் இருக்க வேண்டும்..
ஒரு ஜாதகத்தில் பாக்கியாதிபதியின் திசை சரி இல்லை என்றால் அது பலம் குறைந்துள்ளது என்றே பொருளாகும்..ஒரு ஜாதகத்தில் குரு பலத்துடன் பாக்கியஸ்தானத்தில் நின்றால் வேறொன்றும் பார்க்க
தேவை இல்லை என்றே கூறுவார் குருவிற்கும் பாக்யத்திற்கும் அத்தனை சம்பந்தம் உண்டு ..ஆண் ஜாதகத்திற்கு ஒன்பதாம் பாவம் என்பது எவ்வளவு முக்கியமோ அது போல் பெண் ஜாதகத்திற்கு ஐந்தும்
ஒன்பதும் முக்கியம் பெண் ஜாதகத்திற்கு 5ம் 9ம் பாவங்கள் கெட்டு போனால் பாக்கியம் மட்டுமல்ல சகல சௌபாக்கியங்களும் கெட்டு போகும் என்று பழைய ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
அதுமட்டுமல்ல ஒரு ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் என்று சொல்ல படுகின்ற 9ம் வீடு 9 ம் பாவம் நேர்மை, நம்பிக்கை, விசுவாசம், தெய்வ நம்பிக்கை, கருணை, மனிதாபிமானம், ஆராய்ச்சி திறன், உள்ளுணர்வு, உபாசனை, மத நம்பிக்கை, தான தருமம், தியாக சிந்தனை, உயர்கல்வி போன்றவைகள் ஒருவரை மற்றவரிடமிருந்து பெரிய அளவில் (தனித்தன்மை) வேறுபடுத்திக் காட்டும்.
9 ம் பாவம் லக்னத்திற்கு முன் திரிகோணம் என்பதால் உறவுமுறையில் தந்தையையும், தந்தையின் மூதாதையர்களையும் குறிக்கும்.
பெருந்தன்மை, முன் யோசனை, நீண்ட தூரப்பயணம், தீர்த்த யாத்திரை, கடற்பயணம், விமான பயணம், வெளிநாடு, அன்னிய நபர்கள், உயர்கல்வி, பல்கலைக் கழகங்கள், இயற்கை, தெய்வ அனுக்கிரகம், கோவில், சர்ச், மசூதி, குல தெய்வம், வணங்கக்கூடிய நபர்கள், குரு, வெளிநாட்டுச் செய்திகள், நீண்ட தூர செய்திகள், வானொலி, தொலைக்காட்சி, கம்பியில்லா தந்தி, ஆவியுலக தொடர்புகள், உலக அனுபவங்கள்,
சட்டம் – ஒழுங்கு, நீதித்துறை, நீதி நெறி, சட்டப்பூர்வமாக நடுவராக இருந்து தீர்ப்பளித்தல் (நீதிபதி), ஏற்றுமதி, இறக்குமதி, சர்வ தேச வர்த்தகம், பரம்பரை சொத்து, பண முடக்கம், தொழில் நஷ்டம் மேலும் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களால் கிடைக்கும் நன்மை, தீமைகள் போன்றவை 9ம் பாவத்தின் காரகங்களாகும்.
Thanks for sharing this amazing piece of content. Using our Rasi Calculator you can find out your Rasi and Nakshatra easily.
ReplyDeleteThiruamana Porutham In Tamil
Thanks for writing this blog, You may also like the Taurus Feast: 6 Steps to Wealth , Vedic Astrology
ReplyDelete