முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஜனனமும் மரணமும் தீர்மானிக்கப்படுவது
கடவுளால் மட்டுமே ..ஜோதிடரால் அல்ல ..இங்கு ஜோதிடர் ஒரு கருவி மட்டும் தான் ..நேரம் பார்த்து
குழந்தை பிறக்க வைப்பது தற்கொலைக்கு இணையாகவே சொல்ல படுகிறது காரணம்
மேற்கத்திய நாடுகளில் வேத சாஸ்திரங்களை ஆராய்ந்த சில ஜோதிடர்கள் கூறுவது என்னவென்றால் செயற்கையாக தற்கொலை மூலம் தன்னைத்தானே மாய்த்துக் கொள்பவன், இயற்கையாக அவன் எப்போது இறக்க வேண்டுமென்ற கால நேரம் விதியால் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றதோ அன்றே அந்த உயிரின் அல்லது ஆன்மாவின் மறுபிறப்புக்கான காலம் அல்லது வாழ்க்கை ஆரம்பிப்பதாக கூறுகின்றனர் .
எனவே செயற்கையாக நாம் தீர்மானிக்கிற ஒரு மனிதனின் பிறப்புக்கும் அதனை வைத்து செய்யப்படுகின்ற
ஜாதக கணிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற கருத்து முன் வைக்கப்படுகின்றது
பிறப்பு என்பது அந்த ஜாதகரின் பூர்வஜென்ம வினைகளுக்கான சம்பாவனை. அதனை ஒவ்வொரு கால கட்டங்களிலும் அவரே அனுபவிக்கவேண்டும் என்பது தான் விதி .
அதனை நாம் நல்லநேரம், கெட்டநேரம் மற்றும் கிரகம் பார்த்து பூமியில் பிறக்க வைப்பதன் மூலம் நம்மால் மாற்றியமைத்து விட முடியாது என்பது என் கருத்து
0 comments:
Post a Comment