சூரிய தோஷம்
சிவப்பு வஸ்திரம் அணிவித்து, சூரிய மந்திரம் சொல்லி அபிஷேகம் சொல்லவேண்டும் . அதுமட்டுமல்லாமல் வெள்ளருக்கு சுள்ளியால் யாகத் தீ வளர்த்து அதில் கோதுமை, சர்க்கரை பொங்கல் ஆகுதி செய்து தீபாராதனை செய்து வணங்கினால் சூரிய தோஷத்தில் இருந்து விமோச்சனம் கிடைக்கும் என்பது ஐதீகம்
சந்திர தோஷம்
சந்திரனுக்கு வெள்ளை வஸ்திரம் மற்றும் முத்துமாலை அணிவித்து வணங்கலாம் அது இல்லை எனில் வெள்ளை அரளி, வெள்ளை அல்லிப்பூ ஆகியவற்றை அணிவித்து சந்திர மந்திரங்களை கூறி வழிபடுவது நலம் . சில இடங்களில் முருங்கை மரக்குச்சிகளை கொண்டு யாகத்தீ வளர்த்தும் வழிபடுவார்கள் . அதில் பச்சரிசி, பால் சோறு, தயிர்சாதம் ஆகியவற்றை ஆகுதி செய்து வழிபட்டால் சந்திரதோஷம் காணாமல் போகும்
செவ்வாய் தோஷம்
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் தவறாமல் கோவில்களுக்கு சென்று செவ்வாய் கிரகமான அங்காரக பகவானை வழிபட வேண்டும். சிவப்பு வஸ்திரம், பவள மாலை போன்றவைகளை அணிவித்து வழிபட்டால்
செவ்வாய் தோஷம் தீரும்
புதன் தோஷம்
புதன்கிழமைகளில் புதன்பகவானுக்கு பச்சை வஸ்திரம், மரகத மாலை அணிவித்து வணங்கலாம் அதுபோல் வெண்தாமரை மலர் மாலை அணிவித்து புதன் மந்திரங்களை பக்தியோடு சொல்லவேண்டும் . நாயுருவி குச்சிகளால் யாகத்தீ வளர்த்து, பாசிப்பருப்பு பொடி சாதத்தை ஆகுதி செய்து கற்பூர ஆரத்தி காட்டி புதன் மந்திரங்களை உச்சரித்து வழிபட்டால் தோஷம் விலகும்.
குரு தோஷம்
ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் சிவன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும் அங்கு மூலவர் சன்னிதிக்கு வலதுபுறம் உள்ள தட்சிணாமூர்த்தியை வணங்குவது சிறப்பு சேர்க்கும் இல்லையெனில் அருகே உள்ள நவக்கிரகங்கள் கொண்ட திருத்தலத்துக்கு சென்று அதில் உள்ள குருவை மனதில் தியானித்து ஒன்பது முறையும் சுற்றி வரவேண்டும் .அதுபோல் அங்குள்ள தட்சிணாமூர்த்தியை வணங்குவது சிறப்பு
சுக்ர தோஷம்
வெள்ளிக்கிழமைகளில் சுக்ரனுக்கு வெள்ளை வஸ்திரம், வைர மாலை அணிவித்து வணங்கலாம் . இல்லையெனில் வெண்தாமரை மலர் மூலம் அலங்காரம் செய்து வழிபட வேண்டும் என்பது ஐதீகம்
சனி தோஷம்
ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சனி பகவானுக்கு கருப்பு வஸ்திரம், நீலக்கல் மாலை அணிவித்து வழி படலாம். அதுபோல் சனி பகவானுக்கு வன்னிமரக் குச்சிகளால் யாகத்தீ வளர்த்து எள்ளுப்பொடி சாதம், எள் ஆகியவற்றை ஆகுதி செய்து வணங்கி வந்தால் சனி தோஷம் யோகமாக மாறும் என்பது நம்பிக்கை
ராகு தோஷம்
வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் ராகுபகவானுக்கு நீல வஸ்திரம், கோமேதக மாலை அணிவித்து வழிபடலாம்.
கேது தோஷம்
மேற்சொன்ன ராகு தோஷம் போல் ஒரு வாரத்தில் ஏதாவது ஒரு நாள் செய்யலாம் ..கேது தோஷத்திற்கு எளிமையாக செய்யவேண்டும் என்றால் செவ்வரளி பூ அலங்காரம் செய்து தரிசிக்க வேண்டும். தர்ப்பைப் புல்லால் யாகத்தீ வளர்த்து கொள்ளு, கொள்ளுப்பொடி சாதம் ஆகியவற்றால் ஆகுதி செய்து வழிபட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும்.

0 comments:
Post a Comment