Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil jothidam,Astrology in tamil,Astrology tamil, Tamil astrologer,tamil jothidam,Horoscope matching tamil,Tamil horoscope,Tamil Marriage Matching Astrology - Tamil jothidam - Tamil Horoscope Matching - Astrology in tamil - Tamil jathagam - jothidam in tamil - thirumana porutham - jathagam porutham - jathagam in tamil - Tamil rasi Palan - ஜோதிடம் தமிழ் - திருமண பொருத்தம் தமிழில் - jathagam porutham in tamil - marriage Matching Tamil Software - Tamil Horoscope in 2017 - tamil matha jothidam - jathagam porutham for marriage - rasi palan in tamil 2017 - Astrology in Tamil 2017, Horoscope in tamil 2017, thirumana Porutham, pathu poruthangal, Mukkiya Poruthangal - marriage matching horoscope in tamil Online, marriage matching in tamil astrology online, Tamil Marriage Match Calculator, Nakshatra Matching for marriage, 10 porutham for marriage in tamil, top 10 astrologers in chennai,famous marriage astrologers ,famous nadi astrologers in tamilnadu,,indian astrologer ,online famous,indian astrology,,indian astrology preiions,famous indian astrologer,best indian astrologer,best indian astrologer in the world,astrologer in tamil, online indian astrologer,best indian astrologer online, tamil astrology predictions, astrological predictions based on date of birth,online astrology by date of birth,astrology reading by birth date jathakam based on date of birth,birth time horoscope, horoscope by date of birth and time, tamil astrology , Astrologer,Numerology,Astrology,Horoscopes,Tamil Astrology, Horoscope in Tamil, Tamil Jothidam,astrology predictions, astrology consultation,Future Astrology,Hindu astrology ,Indian astrology,Jadhagam,Astrologer Career Consultant,best astrologer in tamilnadu,best astrology, famous astrologer in tamilnadu,best,famous,top,good Astrologer,computer tamilnadu astrologer,numerologist,Astrology Services,Marriage matching Astrologer,Astrology experts,Most popular astrologer,Specialist,famous good best Astrologer, marriage matching astrologers, good jyotish in, genuine astrologers, best astrology in, best astrologer india, famous astrologers in, vedic astrologers,tamil jothidam in theni,tamil jothidam in madurai,tamil jothidam in nagercoil,tamil jothidam in kanyakumari,tamil jothidam in chennai,tamil jothidam in madurai,tamil jothidam in trichy,tamil jothidam in vellore,tamil jothidam in kovilpatti,tamil jothidam in chengalpattu,tamil jothidam in tirunelveli,tamil jothidam in ramnad

Saturday, 31 March 2018

கலப்பு எண்ணெய் தீபம் - தீமையும் #நன்மையும் | Ennai deepam tamil

ஐந்து எண்ணெய். மூன்று எண்ணெய் கூட்டி விளக்கேற்றினால் நல்லது என்று வரும் செய்திகளை நம்பி அப்படியே தவறு செய்யும் அப்பாவி மக்கள் கவனத்திற்கு அறிக,
         
எப்பொழுதுமே ஒரு எண்ணெய்யுடன் இன்னொரு எண்ணெய் சேர்ந்து எரியக்கூடாது

அதர்வன  மாந்திரிகத்தில் அசுப நிகழ்வுகளை தன் விரோதிக்கு ஏற்படுத்த தந்திரமாக கையாண்ட முறைதான் கூட்டு எண்ணெய் தீப வழிபாடாகும் . அதே போல் தன் குறைதீரவும். கடுமையான பிரச்சினைகள் விலகவும் பல எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றும் வழக்கமும் இருந்தது, இந்த வழக்கம்தான் இன்று தவறாக கையாளப்படுகிறது,

விளக்கமாக அறிவீராக,

பௌர்ணமி கழித்து வரும் அஷ்டமி தேய்பிறை அஷ்டமி என்று அனைவருக்கும் தெரிந்ததுதான், இந்த அஷ்டமி கார்த்திகை மாதத்தில் வரும் போது பஞ்ச எண்ணெய் தீபம் கால பைரவருக்கு ஏற்ற வேண்டும்,

இதற்கு பஞ்ச (5) தீபம் என்று பெயர், 5 வகை எண்ணெய் கொண்டு ஏற்றப்பட வேண்டும், 5 தனி தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய். இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெய். அடுத்ததில் பசு நெய். அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும், ஒரு அகலில் ஏற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது, (ஒவ்வொரு எண்ணெய் கொண்டு எரியும் தீபத்தின் சக்தி வெவ்வேறாகும், ஒன்று இன்னுமொன்றோடு சேரக்கூடபாது சக்தி மோதல் உண்டாகும்) இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீரா பிரச்சினையும் தீரும்,

இந்த முறை பிரச்சினைகளுக்கான தீர்வு மட்டுமே, பில்லி சூன்யம். வம்பு. வழக்கு. தீரா நோய் இவைகள் அடங்கும் .

அடுத்து ஒவ்வொரு செவ்வாய்கிழமை காலையும். மாலையும் ஸ்ரீ கால பைரவரை அஷ்டலட்சுமியும் வழிபடுவார்கள், அந்த நேரத்தில் கடன் தீரவும். செல்வம் பெருகவும் நாமும் இரு அகலில் நெய்தீபம் ஒன்றிலும். நல்லெண்ணெய்  ஒன்றிலும் ஊற்றி சிவப்பு திரி போட்டு தனித்தனியே ஏற்றினால் கஷ்டங்கள் தீரும்,

நவகிரக தோஷம் விலக அரசடி விநாயகருக்கு சதுர்த்தி திதி அல்லது ஞாயிற்றுக்கிழமை மூன்று அகலில் ஒவ்வொன்றின்  வீதம் தேங்காய் எண்ணெய். நல்லெண்ணெய். பசு நெய் இவைகளை தனித்தனியே ஏற்றி வழிபட கிரக தோஷம் விலகும் .

அடுத்து சித்திரை. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்கிழமையில் ராகுகால வேளையில் சிவாலயத்தில் உள்ள அன்னை துர்க்கைக்கு 9 அகலில் 9 வகை எண்ணெய் தனித்தனியே ஊற்றி 9 வகை கலர் திரி ஒவ்வொன்றிலும் ஒரு கலர் திரி வீதம் போட்டு தீபம் ஏற்றி அன்னையை வழிபட தீரா பிரச்சினையும் தீரும்,

இவ்வாறு பல செயல்களுக்கும் இந்த பல வகை எண்ணெய் தீபம் ஏற்றும் முறை உண்டு, ஆனால் இன்று இந்த நல்முறை அறியாததால் தவறு நடக்கிறது,

 எண்ணெய் கூட்டி தீபம் ஏற்றுங்கள் என அக்காலத்தில் சொன்னது தவறாக செய்தி பரவிவிட்டது, 5 எண்ணெய்ûயும் ஒன்றாக கலந்து தீபம் ஏற்றுவது என தவறாக புரிந்து பாதகத்தை அறியாமலேயே பெருகிறார்கள்,

(அறியாமல் செய்தால் தவறில்லை என்ற மன ஆறுதல் பேச்சு இதில் செல்லாது, விஷம் என்று அறியாமல் நாம் எடுத்து குடித்தால் அது உடலில் பரவாமல் இருக்காது, அதை போலத்தான் தெய்வ சபையும், தெரிந்தோ தெரியாமலோ செய்தாலும் குற்றம் குற்றம்தான், அதனால்தான் ஆன்மிகத்தை பொருத்தவரை தெரியாததை புதிதாக செய்யக்கூடாது என்பார்கள்,) ஆக தீபத்திற்கான எண்ணெய் கலப்படமாகாமல் ஏற்றுவதே சிறந்தது .

எதிரியை உறவாடி கெடுக்கும் முறை ஒன்று உண்டு .இது அதர்வன முறையில் நிறையவே உண்டு, சூழ்ச்சி. தந்திரம் இவைகளை எதிரி அறியாமல் செயல்படுத்துவதாகும் மூலிகை. யந்திரம். எண்ணெய். மந்திரம் இவைகளில் ஒன்றுக்கொன்று எதிர்ப்பு எதுவென்று அறிந்து அதை சேர்த்து தன் விரோதிக்கு நல்லது என கொடுத்து பயன்படுத்துவார்கள்,

அது என்னவென்று தெரியாமலேயே பயன்படுத்தும் அப்பாவிகள் அதன் விளைவை சந்திக்க வேண்டியதாகிறது . அக்காலத்தில் இதே முறையில் உறவாடி கெடுத்தவர்கள் ஏராளம், அந்த முறையில் ஒன்றுதான் இந்த கூட்டு எண்ணெய் முறை பயன்படுத்தப்பட்டதாகும் .

 இந்த முறையை அறிந்தவர்கள் அதன் பலனை அறியாமல்
செய்திகளை வெளியிட்டு மக்களும் அதை பின்பற்றி துன்பப்படுகிறார்கள், அப்படி என்னதான் துன்பம் என்று சந்தேகம் உண்டாகிறதல்லவா ? அதையும் அறியுங்கள்

(ள்ப்ர்ஜ் ல்ர்ண்ற்ண்ர்ய்) ஸ்லோ பாய்சன் என்ற கேள்விப்பட்டிருப்பீர்கள் அது மனிதன் அறியாமலேயே கொஞ்ச கொஞ்சமாய் கொல்வதாகும், அதே போல் இந்த எண்ணெய்களை ஒன்றாக கலக்கி தீபம் ஏற்றினால் அதன் விளைவு இதனால்தான் உண்டானது என சந்தேகப்படா வண்ணம் நடக்கும்.

அந்த செயல் என்னென்ன என்று அறியுங்கள், குழந்தைகளுக்கு முறை தவறிய திருமணம் நடக்கும். இது கலப்பு கல்யாணமாகவும் இருக்கும்,

காதல் திருமணமாகவும் இருக்கும். பெண்ணுக்கு வயது கூடி ஆணுக்கு குறைந்தும் நடக்கும், திருமணத்தில் நம்பி மோசம் போகும் சம்பவங்கள் நடக்கம். இதில் எது வேண்டுமானாலும் நடக்கும், அடுத்து குடும்பத்தில் நம் விருப்பத்தோடு உறவுகள் விலகல் உண்டாகும், கலகங்கள் உண்டாகும், திடீர் என பொருள் களவு போதல் உண்டாகும். திடீர் அறுவை சிகிச்சை கொடுக்கும், இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்,

அதிலும் குறிப்பாக மேற்கண்ட நிகழ்வுகள் யாவுமே நமக்கு நல்ல நேரம் காலம் என்று எப்போது ஜோதிடம் காட்டுகிறதோ அப்போதுதான் நடக்கும், வழிமுறை தெரியாமல் அகப்பட்டுக் கொண்ட மக்கள் பின்னாளில் துன்பப்படும்போது இதனால்தான் நமக்கு நடக்கிறது என்று அறியாமல் விழிப்பார்கள்,

ஜோதிடத்தில் நன்றாக இந்த ஆண்டு இருக்கும் என்றார்களே ஆனால் இந்த ஆண்டுதானே கஷ்டப்படுகிறேன் அவ்வாறெனில் ஜோதிடம் தெய்வம் பொய்யா என கேள்வியும் கேட்பார்கள்

இவ்வாறு கேட்பவர் குடும்பம் இப்படி ஏதாவது ஒரு தவறை செய்து அகப்பட்டுக் கொண்டவர்களாக இருப்பார்கள் . எத்தனையோ வழிமுறையில் தவறுகள் நடந்தாலும் அதில் இந்த கலப்பு எண்ணெய்யாலும் தவறு நடப்பதால் சுட்டி காட்டினோம் .

 கலப்பாக எண்ணெய் கூட்டி ஏற்றும் போது அப்போதைக்கு செயல் நடந்தார் போல் இருக்கும் அது மட்டும் தான் நமக்கு தெரியும் ஆனால் அதன் எதிர்மறை பலன் மேலே கூறியிருந்தார்போல் நடக்கும் .

10 ஆண்டுகள் யாம் இதற்காக எடுத்துக் கொண்ட ஆய்வில் சுயமாகவே அறிந்தே கூறியுள்ளேன், அதே நேரத்தில் இக்கருத்தை ஆய்வு செய்தேனே தவிர இதை அக்காலத்திலேயே தெளிவாக கூறிச் சென்றுள்ளார்கள், நமக்கு முறையாக தெளிவாக கூற இன்று யாரும் இல்லாததால் நல்லது கெட்டது அறிய முடியாமல் போகிறது, மீண்டும் அக்காலம் போல் ஆய்வு செய்து தெரிந்து கொள்ள வேண்டியதாகிறது .

ஒரு ரகசியத்தை அறிக

அக்காலத்தில் காளி அம்மன் அருளை பெறவும் கடினமான பிரச்சனைக்கு உடனே தீர்வு காணவும் 5 எண்ணெய் கூட்டி புது அகலில் தீபம் தனி அறையில் ஏற்றி அங்கு அண்ணம் தண்ணீர் எதுவுமின்றி மௌனமாய் மூன்று தினம் விரதமிருந்து தீப வெளிச்சத்தை தவிர பிற வெளிச்சமும் காணாமல் அம்மனை மனதிலே பூஜித்திருந்தால் அம்மன் கோரிக்கையை நிறைவேற்றி கொடுப்பாள் விரைவில் தீர்வுகிடைக்கும் . இந்த முறையை இன்றைக்கும் கடைபிடிக்கலாம் . வேறு மார்கத்தில் 5 எண்ணெய் கூட்டி திபம் ஏற்றினால் பஞ்சமே உண்டாகும் .

செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை அல்லது பார்வை | Chevvai and sukkiran |


இந்த சேர்க்கை என்பது காம உணர்வை தூண்டும் ஹார்மோன் சுரப்பிகளுக்குடையது இந்த கிரக சேர்க்கை இருப்பின் ஜாதகரோ அவர்களின் வீட்டில் ஒருவரோ கட்டாயம் காதல் திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம்
ஜாதகருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட துறைகளில் ஈடுபாடு கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது கலை துறையில் ஈடுபாடு இருக்கலாம் ..இது போன்ற கிரக சேர்க்கை இருப்பின் ஓரே துறையில் தங்கள் முழு கவனத்தையும் செலுத்தினால் ஜாதகருக்கு நல்ல பெயரும் புழலும் கிடைக்கும்.
இனி மருத்துவ ரீதியாக பார்த்தால் இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் குடி பழக்கமோ அல்லது புகை பழக்கமோ இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது ..இரத்த அழுத்த சம்பந்தமான நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் ..
இரத்தம் அழுத்தம் இருந்து அதனுடன் குடி பழக்கமும் இருந்தால் அது கிட்னியையும் பாதிக்கலாம் ஏனென்றால் கிட்னியை குறிக்கின்ற கிரகம் சுக்கிரன்..
இதற்க்கு இனி என்ன பரிகாரம் என்று கேட்கவேண்டாம் புகை மற்றும் குடி பழக்கம் இருந்தால் இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் விட்டுவிடுவதே மிக சிறந்த பரிகாரம் .சுப திருஷ்டி ..குரு பார்வை போன்ற விதி விலக்குகள் இதற்கும் உண்டு



Friday, 30 March 2018

அபிஜித் முகூர்த்தம் சுப காரியங்களுக்கு எடுத்து கொள்ளலாமா ? | Abijith nakshatram




















சூரியன் உச்சி வானில் இருக்கும் நேரமே அபிஜித் முகூர்த்தம் என்பார்கள் முகூர்த்தம் சரியாக அமையவில்லை என்றால் தாராளமாக அபிஜித் முகூர்த்தம் எடுத்து கொள்ளலாம் என்ற கூற்று நிலவி வருகிறது ..
அது தவறான கூற்று பால் காய்ச்சுதல் ,திருமண பொருத்தம் மற்றும் சில விஷேஷ நிகழ்ச்சிகளை அதுக்கென்று உள்ள வாஸ்து நாள் ..சுப முகூர்த்த நாளை பார்த்தே சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்
சில தவிர்க்க முடியாத காரணங்களால் இன்று செய்து தான் ஆக வேண்டும் என்ற விஷயங்கள் குறிப்பாக வேலைக்கு விண்ணப்பித்தால் ..சிலருக்கு காசை கை மாற வேண்டிய அவசர சூழ் நிலை இதுபோன்றவற்றை வேறு வழி இல்லாத பட்சத்தில் நீங்கள் அபிஜித் முகூர்த்தம் பயன் படுத்தலாம்
இந்த நேரம் பஞ்சாங்கம்படி ராகு காலம், துர்முஹூர்த்தம், வர்ஜ்யம், அனுகூலமற்ற ஹோரை போன்றவை இருந்தாலும் இவற்றின் தன்மை எதுவும் இந்த சமயத்தில் இருக்காது என்கிறார்கள் .
சில நாட்காட்டி மற்றும் பஞ்சாங்கத்தில் அபிஜித் காலம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்..பிரம்ம முகூர்த்தம்,உதய காலம்,அஸ்தம காலம் போன்ற நேரங்களுக்கு எப்படி தோஷமில்லையோ அதேபோல் இந்த அபிஜித் காலத்திற்கு எந்தவிதமான தோஷமும் இல்லை என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றது ..
நாம் பிரம்ம முகூர்த்தம்,உதய காலம்,அஸ்தம காலம் போன்றவற்றில் கண்ணை மூடி கொண்டு சுபநிகழ்ச்சிகளோ ,முகூர்த்தமோ வைப்பதில்லை ..அதுபோல் அபிஜித் காலத்தையும் கண்ணை மூடிக்கொண்டு முகூர்த்தங்கள் குறிக்க கூடாது

Thursday, 29 March 2018

நட்சத்திரம் எதுவென்று கூட தெரியாமல் வாழ்ந்தால் அடிப்படை ஆன்மீக உணர்வே அற்று விழும்

உணர்வு என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது நம்
பாரத தேச கலாச்சாரத்தில் ..அந்த உணர்வில்லாத மனிதனை பிணமென்று வர்ணிக்கிறது
சாஸ்திரங்கள் .
ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலைக்கு செல்லும்பொழுது கூட காலையில் நாம் அலுவலகத்திற்குள் 
செல்கின்ற நேரம் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கின்றது ..உங்கள் மேல் அதிகாரி யார் கேட்டாலும்
நீங்கள் டான் என்று நீங்கள் அந்த நேரத்தை சொல்லவேண்டும் ..அது இன்னும் நம் பள்ளி
கல்லூரி காலம் முதலே நம்மை கடை பிடிக்க வைத்து பழக்குகிறார்கள்
அப்படி என்றால் இந்த பூமியில் நாம் அவதரித்த அந்த நேரம் எவ்வளவு முக்கியமான ஓன்று
அந்நேரம் பிரபஞ்சத்தின் நிலை அறிதல் என்பது எத்தனை ஆழமான ஒரு உணர்வு..இப்போது
உங்களை ஜோதிடத்தை நம்பவோ ..கண்டிப்பாக ஜாதகம் எழுதி தான் ஆக வேண்டுமென்றோ
சொல்லவில்லை ..
குறைந்தது குழந்தை பிறந்த தேதியில் உள்ள அந்நேரத்தை குறித்து வைத்துக்கொள்வது
அது மட்டுமின்றி ..நாளை அவர்கள் வளரும் பொழுது அவர்களின் நேரத்தையும்..நட்சத்திரத்தையும்
அவர்கள் மனதில் பதியவைய்யுங்கள் ..
இந்த பாரத தேசத்தில் பிறந்தவர்கள் எல்லாரும் ஜோதிடத்தையும் ஜாதகத்தையும் நம்ப
வேண்டுமென்று சொல்லவில்லை ..ஆனால் குறைந்த பட்சம் பிறந்த நட்சத்திரம் எதுவென்று
கூட தெரியாமல் வாழ்ந்தால் அடிப்படை ஆன்மீக உணர்வே அற்று விழும்

சந்திர திசையில் ஏழரை நாட்டு சனி | Chandra Thisai Ezharai nattu sani












சந்திர திசையில் ஏழரை நாட்டு சனி காலமாகட்டும் அல்லது சந்திர திசை அஷ்ட்டம சனியாகட்டும் ஜோதிடத்தை நம்பத்தவர்களை கூட நம்ப வைக்கும்
காலம் ..
கண்டிப்பாக இந்த திசை நடப்பு ஜாதகருக்கு மரணத்தை தராது ஆனால் மரண பயத்தை காட்டி தரும் ..நீரின் மூலம் கண்டம் .தாயின் உடல் நிலை பாதிப்பு ..வண்டி வாகன விபத்து ..பெண்களின் மூலம் பெயர் கெடுதல் .அவமானங்கள் போன்றவை இதில் பலமாகும்
அதுபோல் சந்திர திசை முடியும் தருவாயிலும் ஒரு சில இடையூர்களை தரும் ..சந்திர திசையில் ஏழரை நாட்டு சனி வெந்த புண்ணில் வேல் பாய்வதை போன்ற துன்பத்தை தரும் ..
ஜாதகத்தில் தேய் பிறை சந்திரனாக இருந்தாலும் வளர் பிறை சந்திரனாக இருந்தாலும் ..சந்திரன் ஏது ராசியில் நின்றாலும் அதனுடன் ஏழரை நாட்டு சனி நடந்தால் மேல் சொன்ன விஷயங்கள் நடக்கும்
சனீஸ்வர பகவான் பரிஹாரம்
குறிப்பாக சில சிவன்கோவில்களில் சனி பகவானுக்கென்று தனி சந்நிதி உண்டு அங்கு சென்று வணங்கலாம் அல்லது அல்லது திருநள்ளாறு சென்று வருவது விசேஷம் தோஷ நிவர்த்தி உண்டு ..

Wednesday, 28 March 2018

உத்திரத்து தாலி உறையிலா? | tamil marriage matching














எதுகை-மோனையில் சொல்லப்படுகின்ற பல பழ மொழிகள் இன்று பலரின் வாழ்க்கையை பாழாக்கி
வருகிறது .உத்திரம் நட்சத்திரத்தை மோசமான நட்சத்திரமாக சிலர் சொல்வது உண்டு..ஆனால்
மனித வாழ்க்கையில் தசை நடப்பும் ..கிரக நிலையும் தான் அவன் விதிகளில் மிக முக்கிய 
பங்கு வகிக்கிறது
இதனால் பல உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களின் வாழ்க்கை பாழாகிறது. உத்திரத்தில் பிறந்த பெண்களை திரு மணம் செய்யும் ஆணுக்கு விபரீதம் ஏற்படும் என்பதற்கு ஜோதிட ரீதியாகவோ
வாழ்வியல் முறையிலோ எந்த ஆதாரமும் இருப்பதாக தெரியவில்லை
மேலும் உத்திரத்து தாலி உறையில் என்று சொல்லப்படுவதால் மனதை போட்டு குழப்பிக்கொள்ள தேவை
இல்லை..அதுபோல் வரன் பார்க்கும் பொழுது உத்திரம் நட்சத்திரத்தை ஒதுக்க வேண்டிய அவசியவும் இல்லை
எனவே உத்திரத்தில் பிறந்து பெண்களைத் தகுந்த மணப்பொருத்தத்தின் பேரில் தாராளமாக மணம் முடிக்கலாம்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களையும் சிலர் ஒதுக்கி வைக்கின்றனர். ஞானசம்பந்தரின் கோளாறு பதிகம் படித்தால் எந்த நட்சத்திர தோஷத்தையும் நிவர்த்தி செய்து கொள்ள வழி முறைகள் உள்ளது ..உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் குலதெய்வத்தையோ , பழனி முருகனையே ,திருமாலையோ
வணங்குவது சிறந்தது
உத்திரம் நட்சத்திரத்திற்கு பொருந்த கூடிய நட்சத்திரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
உத்திரம் 1ம் பாதம் : அஸ்வனி – பரணி – ரோகிணி – திருவாதிரை – பூசம் – மகம் – பூரம் - சுவாதி – அனுஷம் – திருவோணம் – சதயம் – உத்திரட்டாதி
உத்திரம் 2,3&4 : அஸ்வனி – பரணி – ரோகிணி – திருவாதிரை – பூசம் – மகம் –பூரம் - அஸ்தம் – அனுஷம் – மூலம் பூராடம் – சதயம் – உத்திரட்டாதி

10 porutham for marriage in tamil
only name matching for marriage in tamil
love marriage jathaka porutham
dinakaran thirumana porutham in tamil
natchathira porutham
marriage matching calculator
nakshatra matching for marriage
10 thirumana porutham meaning in tamil

சூரியனின் அனுகிரகத்தை பெற | Suriya kregam pariharam

















ஒரு ஜாதகத்தில் சூரியன் பலமாக இருந்து அதனுடன் குருவின் சேர்க்கையோ பார்வையோ விழுந்தால் ..அது
அந்த ஜாதகருக்கு நல்ல மன தைரியத்தையும் உடல் வாகுவையும் தரும் ..இப்பேற்பட்ட ஜாதகர் அவ்வளவு
எளிதில் சோர்வுற மாட்டார் ..அதிகம் சஞ்சாரம் செய்ய விரும்புவார்
இவர்களுக்கு அடிக்கடி தலைவலி வராது மார்பிலோ அல்லது இதயத்திலோ நோய் கண்டிப்பாக வராது 
மிக தெளிவாக முடிவெடுப்பார் ..தலையில் அடிபாடாது ..முதுகு தண்டு மற்றும் எலும்பு போன்றவற்றில்
நோய் வராது ..
ஆனால் மாறாக ஒரு ஜாதகத்தில் சூரியன் மறைந்தாலோ ..கெட்டுபோனாலோ மேற்சொன்னவை ஜாதகரை
பதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் ..எடுத்து காட்டு ஜாதகருக்கு தலை வலி அடிக்கடி வரும் ..இதயநோய்
வருவதற்கான வாய்ப்பையும் தரும்
சூரியனின் அனுகிரகத்தை பெற
மேலும் இதன் சிறப்புகளாவன சூரியன் அக்கினிக்குரியவர், சூரியனின் நிறம் இளம் சிவப்பு அதாவது ஆரஞ்சு நிறம், கிழக்கு திசைக்குரியவர். பகல் நேரத்தை ஆள்பவர், கோதுமைப் பிரியர். எருக்கு சமித்து மூலம் திருப்பதிப்படுபவர், செந்தாமரையை மலர வைப்பவர், மாணிக்க கல்லுக்குரியவர், செம்பு உலோகத்தைப் பிரதிப்பலிப்பவர். செம்பட்டு உடையால் அலங்கரிக் கப்படுகிறார். சிவப்பு நீலப் பொருட்களால் நலம் அளிப்பவர். சத்தியர், வீர புருஷர், ஞாயிற்றுக் கிழமைக்குரியவர்.
சூரிய பகவான் ருத்ரனை அதிதேவதையாக் கொண்டவர். சூரியனின் அனுகிரகத்தைப் பெற வேண்டுமானால் மேலே இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பொருட்களைக் கொண்டு சிரத்தையுடனும், முழு ஈடுபாடும், நம்பிக்கையும் கொண்டு ஆராதிக்க வேண்டும். மேலும்
மேலும் சூரியனுடைய அதிதேவதை என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறும் ருத்ரனையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்தால் சூரிய பலனை பெறலாம்.

Tuesday, 27 March 2018

செவ்வாய் காரகத்துவம் பெற்றவர்கள் செய்கின்ற அல்லது செய்யவேண்டிய தொழில் | Chevvai Thozhil sthanam


















செவ்வாய் காரகத்துவம் பெற்றவர்கள் செய்கின்ற அல்லது செய்யவேண்டிய  தொழில்

ரியல் எஸ்டேட் துறை இவர்களுக்கு சிறந்த ஓன்று

எங்கெங்கெல்லாம் நெருப்பின் துணை கொண்டு வேலை நடக்கின்றதோ அங்கு இவர்களுக்கு முக்கியமான
பங்கு உள்ளது உதாரணம் ..செங்கல் சூளை,கொள்ளு பட்டறை ,மின் வாரியங்கள்
இவர்களில் பெரும்பாலோர்க்கு சமையல் வேலை செய்ய தெரியும் ..உணவகங்களில் வேலை வாய்ப்புகள்
அமையலாம்

குயவர்கள் ஆகலாம் ..சிலர் சிற்பிகள் ஆவார்கள் ..ஓவியம் வரையும் திறமை சிலருக்கு இருக்கலாம்
காவல்துறை  இராணுவ வீரராகவோ இவர்கள் பணியில் அமர்த்த படலாம்

சிலம்பம் மற்றும் குத்து சண்டை விளையாட்டு போன்ற வீரர்களாகவோ

பவள வியாபாரம்

மாய ஜலம் ,ஏவல் பில்லி சூனியம் போன்ற தொழில்கள் செய்பவர்களாகவோ இருக்க வாய்ப்புண்டு
விவசாயத்திற்கு ஏற்ற நிலங்களை பாட்டத்திற்கு விடுவதாலும் ..துவரை பயிரிடுவதாலும் நன்மை
பெறலாம்

செவ்வாய் கிரகம் ரத்தத்திற்கும், விபத்திற்கும் உரியது. ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய், சனி பார்வை பெற்றிருந்தாலும், செவ்வாய்+சனி சேர்க்கை பெற்றிருந்தாலும் அவருக்கு அடிக்கடி சிறு விபத்துகள் ஏற்படும்

செவ்வாய் காரகத்துவம் சரி இல்லை என்றால் பரிஹாரம்

செவ்வாய் தோஷக் காரர்கள் முருகப் பெருமானையும், வளம் தரும் வயிரவக் கடவுளையும் விடாது வழிபட வேண்டும். காலையில் முருகனையும், இரவில் வயிரவனையும் வழிபடுவது சாலச் சிறந்தது.  முருகன் கோலங்கள் பலவாக இருந்தாலும் தண்டபாணியாக விளங்கும் கோலம் செவ்வாய்க்குச் சிறப்பு.
வயிரவ வடிவங்கள் வெகுவாக இருந்தாலும் க்ஷத்ரபாலர் என்ற அவதூத வடிவம் சிறப்பானது. முருகனையும் க்ஷத்ர பாலனையும் அன்றாடம் தோத்திரங்களாலும் அர்ச்ச னைகளாலும் வழிபாடு செய்ய வேண்டும்
ஜோதிடர் : ராகவ்
வாட்சப் :    9940989853

Monday, 26 March 2018

ஸ்ரீகிருஷ்ணன் எட்டு வகையாக உருவகப்படுத்தி வணங்கப்படுகிறார்.
















1. சந்தான கோபால கிருஷ்ணன்: யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.
2. பாலகிருஷ்ணன்: தவழும் கோலம். ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னதிகளிலும் பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம்.
3. காளிய கிருஷ்ணன்: காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன்.
4. கோவர்த்தனதாரி: கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.
5. ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்): வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.
6. முரளீதரன்: கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.
7. மதனகோபாலன்: அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணன்.
8. பார்த்தசாரதி: அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

கிரகப்பிரவேசம் செய்யும் முறை:| kiraga pravesam | greka


பஞ்சாங்க சுத்தியுள்ள சுபநாளில் மஞ்சளும் பசுமையும் கலந்த வண்ண அழைப்பிதழை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் குங்குமத்துடன் கொடுத்து வருவது நல்லது.
கிரகப்பிரவேசத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளும் லக்ன முகூர்த்தங்களான 6-7 நேரங்களிலும் வைக்கலாம். காலை 9 மணிக்குப்பிறகு கிரகப்பிரவேசம் செய்தல் கூடாது. அதிகாலை 4 மணிக்குத் தொடங்கும் கிரகப்பிரவேச வழிபாட்டிற்கு 5 மணிக்கு வந்து அவசரமாகவும், ஏனோ தானோ என்று செய்தல் வேண்டாம்.
நாம் வாழப்போகிற இல்லம். பொறுமையாகச் செய்யலாம். ஆடம்பரமான கலாச்சார உடைகளை தவிர்த்து எளிய உடையை (வேட்டி, துண்டு, புடவைகளை) பூஜை நேரத்தில் உடுத்திக்கொண்டு அமர வேண்டும். வீடு கட்டியிருக்கும் பகுதியில் உள்ள ஒரு கோபுர வாசலில் சாமிப்படம், அரிசி, உப்பு, பருப்பு, குடத்தில் நீர், காமாட்சி தீபம், ஐவகை மங்களப் பொருட்கள் மஞ்சள், குங்குமம், கண்ணாடி, தாம்பூலம், தேங்காய் இவற்றுடன் தட்டு வைத்து கற்பூர ஆரத்தி காட்டி மங்கள வாத்தியங்களோடு வீட்டு வாசலுக்கு தெய்வத்துதிகளைச் சொல்லிக் கொண்டு வந்து பூஜை முறைகளை பின்பற்றுவது நலன் தரும்.
கோ பூஜை: வீட்டு எஜமானர் அவர் மனைவியோடு பசுவின் அங்கங்களுக்கு பொட்டு வைத்து, அதற்கு பொட்டு வைத்து, துணி, மாலை சாற்றி அரிசி, வெல்லம் கலந்த கலவையை கொடுத்து அகத்தி கீரையும் கொடுக்க வேண்டும்.
பால் காய்ச்சுதல்: புதிய பாத்திரம் வாங்கி, அதற்கு பூ, சந்தனம், குங்குமம் வைத்து பால் ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் போங்கி வந்த பின் கைகூப்பி வணங்கி அதனை, சாமி படத்தின் முன்பாக வைத்து பூஜை பொருட்களுடன் நிவேதனம் செய்து ஆரத்தி காட்ட வேண்டும்.

மனதிற்கு அதிபதி சந்திரன் | Chandran in human horoscope















மனதிற்கு அதிபதி சந்திரன் என்பதை நாம் அறிவோம் ..ஒருவரின் ஜாதகத்தில் தேய்பிறை சந்திரனாக இருந்து சந்திரன் லக்னத்துக்கு 6,8,12ல் ராகு ,கேதுவுடனோ அல்லது சனி,மாந்தி உடனோ இருந்து...அவர்களின் திசா புத்தி நடந்தால் மனநிலை அதிகம் பாதிக்கும்.
செய்யும் தொழிலை மன ஒருமிப்புடன் செய்ய முடியாது ..கவனக்குறைவில் பிழைகள் செய்வார்கள் .தாய்க்கும் தண்ணீரில் கண்டம் உண்டாகும்...அதிகப்படியான குழப்பம் எப்போதும் சிந்தனையில் இருப்பார்கள் ,அதிக கோபம்,பிடிவாதம்,மற்றவர்கள் பேச்சை கேளாமல் தான் சொல்வதே சரி என வாதிடுதல்,
அதிகமாக நட்ப்பு வட்டாரம் இருக்காது ..எல்லாருக்கும் பொறாமை குணம் கொஞ்சம் இருக்கும் ஆனால்
இவர்களுக்கு அதுவே வியாதி ஆக வாய்ப்புண்டு
இவர்களின் ஜாதகத்தில் பார்த்தீர்கள் என்றால் குறிப்பாக 4ஆம் இடத்தில் 6ஆம் அதிபதியோ எட்டாம் அதிபதியோ இருக்க வாய்ப்புண்டு .அல்லது 4ஆம் அதிபதி 6,8,12ல் மறைந்து 4ஆம் இடத்துக்கு பாவர்கள் தொடர்பும் இருக்கும்.முதல் வீடான லக்கினமும் கெட்டு போய் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் .பாக்யாதிபதி நன்றாக இருந்தாலோ பூர்வபுன்ணியாதிபதி நன்றாக இருந்தாலோ தெய்வ அருளால் குணமாவர்..குரு நன்றாக இருந்தால் குணப்படுத்த பலரும் உதவுவர்..குல தெய்வ துணை உண்டு
சந்திரனுக்கு பரிகாரமாக கீழ்க்கண்டவற்றில் ஏதாவது ஒன்றை செய்து வருவதும் போதுமானது தான்
திங்கட்கிழமைகளில் விரதம் இருத்தல் (சோம வார விரதம்),
பௌர்ணமி நாட்களில் சாதத்தில் தேனும் சர்க்கரையும் கலந்து செப்பு பாத்திரத்தில் சந்திரனுக்கு படைப்பது,
செம்பருத்தி பூவால் அர்ச்சனை செய்வது,
திருப்பதி சென்று வருவது,
சந்திரனின் அதிதேவதையான பார்வதி தேவியை திங்களன்று வணங்குவது,
ஸ்ரீபராசக்தி, துர்க்கா தேவியை வழிபடுவது,
இரண்டு முகங்கள் கொண்ட ருத்ராட்சையை அணிந்து கொள்வது,
நீர், பசும்பால், அரிசி போன்றவற்றை திங்கட்கிழமைகளில் பெண்களுக்கு தானம் தருவது,
அதுபோல ஓம் ஷரம் ஸ்ரீம் ஷெளரம் சந்திராய நமஹ என சந்திரனின் மூல மந்திரங்களை 40 நாட்களுக்கு தினம் 250 வீதம் 10,000 தடவை ஜெபிப்பது.

ஒன்பதாவது வீட்டில் பாவக்கிரகங்கள் இருந்தால் | 9th house indian vedic astrology


















ஒன்பதாவது வீட்டில் பாவக்கிரகங்கள் இருந்தால் அது தோஷம் தான் என்று பலர் சொல்லுவார்கள் ..ஆனால்
அதிலும் சிலர் அதை பிரேத தோஷம் என்பார்கள் ..
இறந்து போன உடலின் அருகில் கூட நம்மில் பலரும் போவதில்லை இதில் எங்கிருந்து வருகிறது
பிரேத தோஷம் என்ற சந்தேகங்கள் வரலாம்..ஆனால் பிரேத தோஷத்தை ஏற்படுத்தும் செயல் 
நடைமுறை வாழ்க்கையிலேயே மனிதர்கள் பலரும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்
அது எப்படி என்று நாம் பார்ப்போம் நம் கிராம புறங்களில் யாராவது இறந்துவிட்டால் அவரின் இறுதி சடங்கிற்க்கு தங்களின் வீட்டின் முன்பு கொண்டு செல்வதற்கு பாதை கொடுக்கமாட்டேன் என்று சிலர் வம்பு செய்வார்கள்.
சில இடங்களில் சுடுகாட்டிற்க்கு அடுத்தவர்களின் வீட்டு பாதை முன் தான் போகவேண்டிய நிலை எல்லாம் இன்றும் பல கிராமங்களில் இருக்கின்றது. .என் வயலில் நீ எடுத்துச்செல்லகூடாது என்று வம்பு செய்வார்கள். இதனாலும் பிரேததோஷம் ஏற்படலாம்..
அதுபோல் நம் உறவினர்கள் , சமூகதினர் இறந்தால் அவர்களின் உடலை சுமக்க வேண்டிய கட்டாயத்தில்
இருந்து சுமக்காமல் இருப்பது ..அவர்களின் உடலை மற்றவர்கள் சுத்தம் செய்யும் நேரம் நீங்கள் தொடமறுப்பது
இதெல்லாம் பிரேத தோஷக்கணக்கில் வரும் அதுபோல் இறந்த சவக்குழியில் எலும்பை திருடுதல் ..வளர்த்த
மிருகங்களின் சரீரங்களை மண்ணிற்கு மேல் அழுவ விடுதல் இவையும் இந்த கணக்கில் தான் வரும்
எப்பொழுதும் இறந்த உடலுக்கு செய்யவேண்டிய காரியத்திற்க்கு நாம் ஒரு தடையாக இருக்ககூடாது. அப்படி தடையை ஏற்படுத்தி இருந்தால் அதுவே நமக்கோ நம் தலை முறைக்கோ அடுத்த பிறவியில் தோஷமாக
மாறும்
பிரேத தோஷம் என்பது சனிக்கிரகம் அல்லது ராகு கிரகம் ஒன்பதாவது வீட்டில் அமைந்திருத்தல் ஆகும்

சுக்கிர ப்ரீதி பரிகாரங்கள்





கலையுணர்ச்சி, அழகுணர்ச்சி, காதல், போகம் போன்றவற்றிற்கு அதிபதியாக விளங்குபவர் சுக்கிரன்
மேஷம் மற்றும் விருச்சிகத்தில் சுக்கிரன் அமைந்தால் அவர் பெயர் எதிர் பாலிரனால் கெடும்
சுக்கிர திசையில் பல மடங்காகும் ...
அதுபோல் ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் இணைவு என்னேரமும் காம எண்ணமே 
நினைவாக இருக்கும்
கன்னியில் சுக்கிரன் நீசமானால் தூக்கமின்மை கெட்ட கனவுகள் எதிலும் தேவை அற்ற பயம் ,மறைவான
விஷயங்களில் நாட்டம் அதிகம் ..ஆண்மை குறைவு
சுப கிரக பார்வை திருஷ்ட்டி விழுந்தால் விமோசனம் இருக்கிறது
கலை துறையில் திறமை இருந்தும் சாதிக்க முடியாமல் இருப்பது ஆடை களில் ,அலங்காரத்தில் நாட்டம் இருக்காது
சுக்கிர ப்ரீதி பரிகாரங்கள்
திருமால் சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவதுடன் வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு உடை, ஏழைகளுக்கு அன்னதானம் போன்றவற்றைச் செய்வதால் சுக்கிரன் தோஷம் நீங்கி சுகம் பெறலாம். 

களத்திர ஸ்தானம் | 7th House kalathira sthanam












ஜாதகத்தின் ஏழாம் இடத்தை களத்திர ஸ்தானம் என்று சொல்லுவார்கள் . குறிப்பாக அவ்விடத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பது மிகவும் முக்கியமாக திருமண பொருத்தங்கள் பார்க்கும் பொழுது ஜோதிடர்களால் பார்க்க படுகிறது . இந்த இடத்தை வைத்துதான் ஒருவரின் குணம் , ஆசை, விருப்பம், காதல் எதிலும் அவருக்கு இருக்கின்ற ஈடுபாடு போன்றவற்றை நம்மால் அறிய முடியும்.
இந்த இடம் எந்த கிரகமும் இல்லாமல் இருப்பது விசேஷம். அப்படி இருந்தாலே போதும் மணவாழ்க்கையில்
பாதி தொந்தரவு தீர்ந்து விடும் .ஏழு மற்றும் எட்டு இந்த இரண்டு இடங்களும் சுத்தமாக இருப்பது விஷேசம் நட்சத்திர பொருத்தம் என்ன தான் உத்தமமாக இருந்தாலும் ஏழாம் வீட்டில் பாவ கிரகம் இருந்தால் அதன் தன்மை, வலிமைக்கு ஏற்ற கிரகம் இருந்தாலே அதை பொருத்துவர்கள்
ஏழாம் வீட்டிலோ, ஏழாம் அதிபதியுடனோ பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள், ராகு-கேது போன்ற நிழல் கிரகங்கள் சேர்ந்தாலும், பார்த்தாலும் காதல் தடம் மாறிப்போகும். ஒழுக்க குறைபாடு ஏற்படக்கூடிய சூழ்நிலையும் உருவாகும். கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்படும் ..சந்தேகம் மேல் ஓங்கும்
மேலும் பார்க்க போனால் களத்திர காரகன் என்பவன் அதாவது இந்த ஏழாம் வீட்டு அதிபதி சுக்கிரன் ஆவன் .
சுக்கிரன் ஏழில் நிற்பது பொதுவாகவே நல்லது இல்லை ..காரகன் காரக ஸ்தானத்தோடு சேரக்கூடாது என்பார்கள் .செவ்வாய் தோஷமுள்ளவர்களுக்கு எப்படி அதுபோல் செவ்வாய் தோஷம் உள்ளவர்களை சேர்கிறோமோ அது போல் சுக்கிரன் நீசமென்றால் அதுபோல் சுக்கிரன் நீசமான ஜாதகத்தோடு தான் சேர்க்க
வேண்டும் என்ற கருத்தும் நிலவி வருகிறது

ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டு போனால் || Sukran in tamil vedic astrology

















ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டு போனால் நாய்களை கண்டால் ஒரு
பயங்கரமான பயம் தொற்றும் ..அது மட்டுமில்லாமல் சிலருக்கு நாய் கடித்து
காயங்களும் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது ..

அதற்கு அறிவியல் ரீதியான காரணங்களும் உண்டு ..யார் ஜாதகத்தில் சுக்கிரன் நீசமடைந்தோ
அல்லது கெட்டு போயோ இருக்கிறதோ .அவர்களின் உடம்பில் காற்றாளை நாற்றம் மிக அதிகமாக
வீசும் ..இந்த நாற்றம் நாய்களுக்கும் அழுகிய மாமிசத்தை நினைவு படுத்தும்..அதனால் இது
போன்ற நபர்களை கண்டால் எந்த தெருநாய்க்கும் ஒரு பிரியம் வந்து விடும் ..

இவர்களுக்கான பரிகாரம் என்னவென்றால் வெள்ளி கிழமை சுக்கிர ஹோரையில் உடம்பில்
நன்றாக வெயில் காயும் படி இருக்க வேண்டும் ..சூரிய கதிர்கள் அவர்களுக்குள் அந்நேரம் புகும்பொழுது
நாளடைவில் ஊடலில் இருந்து வரும் துர்நாற்றம் குறையும் .இப்படி செய்து வந்தால் நாய்களுக்கு இவர்களின்
மீதுள்ள ஈர்ப்பும் ,கவனமும் குறையும் .

இவர்கள் சனி கிழமை பைரவ வழிபாடு செய்வது நல்லது

Monday, 19 March 2018

அமாவாசை தினமும் குலதெய்வ வழிப்பாட்டு சிறப்பும் | Amavasai kulatheiva vazhipadu


குலதெய்வ வழிபாட்டை யார் ஒருவர் மிக சிறப்பாகக் கடைபிடித்து வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் எந்த தோஷமும் ஓன்றும்  செய்துவிட முடியாது . குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது

அமாவாசை அன்று உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று விளக்குஎண்ணெய் ஊற்றி இரண்டு மண்விளக்கு ஏற்றி ஒரு எலுமிச்சபழம்த்தை கோவிலில் உள்ள சூலாயுதத்தில் குத்தி வைத்து உங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்தால் நாம் நீண்ட நாட்களாக நினைத்து வந்த காரியங்கள் நிறைவேறும் . நீண்ட நாட்களாக நம்மை உலுக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும் . இந்த வழிபாடு தொடருந்து செய்து வருவது நல்லது

குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம்  வேறு எந்த தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வ வழிபாடு இல்லை என்றால் அதன் குறை கண்டிப்பாக உண்டு   என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்த  மகான்களின் கருத்து 

பூஜை அறையில் குலதெய்வத்தின் முக்கியத்துவம்

செல்லும் இடங்களில் கிடைக்கும் சாமி படங்களையும் விக்ரகங்களையும் அனைத்தும் கொண்டு
உங்கள் பூஜை அறையை நிரப்பாதீர்கள் ..அப்படி வைப்பதினால் எல்லா தெய்வங்களுக்கும் உகந்தது போல்
உங்களால் பூஜை முறையை கடைபிடிக்க முடியாது

நீங்கள் எவ்வளவு கடவுளை வைத்து வழிபட்டாலும் குலதெய்வம் மிக முக்கியமாக உங்கள் பூஜை அறையில்
இருக்க வேண்டும் .குல தெய்வ அருள்   இல்லை என்றால் நீங்கள் வாழும் வாழ்க்கையில் ஒரு திருப்தி இருக்காது என்பது பல ஆன்மீகவாதிகளின் அனுபவ உண்மை

உங்கள் பூஜை அறையில் நீங்கள் அமர்ந்து கொண்டு பூஜை செய்யுங்கள். அமரும் போது ஏதாவது ஒரு விரிப்பில் அல்லது பலகையில் அமருமாறு கண்டிப்பாக பார்த்து கொள்ளுங்கள் . உங்களின் உடம்பு பூமியில் தொடக்கூடாது. உங்களின் குறைகளை உங்களின் குலதெய்வத்திடம் சொல்லி வேண்டுங்கள் அனைத்து குறைகளையும் அந்த குலதெய்வம் உங்களுக்கு தீர்த்துவைக்கும். உங்கள் கூடவே அது வரும். நாட்கள் ஆக ஆக தான் அதன் அருமை புரியும்.

பூஜை அறையில் நீங்கள் காமாட்சி விளக்கை பயன்படுத்துங்கள். விளக்கின் திரி கிழக்கு முகமாக அல்லது வடக்கு முகமாக இருக்கலாம். அவ்வாறு திரி எரியும் போது உங்களின் குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.

பூஜை அறை எப்போதுதும் சுத்தமாகவும் சாம்பிராணி நறுமணத்துடனும் இருக்கவேண்டும் .

வேறு ஒருவரின் தீபத்தில் விளக்கு ஏற்றுவது சரியா... தவறா?
















கோவிலில் தீபம் ஏற்றுதல்...

கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதே நமது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொடுக்கும் சிறந்த வழியாகும் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்

எந்த வழிபாடு ஆனாலும் தீபம் ஏற்றுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நல்லெண்ணை... நெய்... அல்லது ஐந்து எண்ணைகள் கலந்து தீபம் ஏற்ற நன்மைகள் பெருகும்.இங்கு வேறொருவரின் தீபத்தில் நாம் விளக்கேற்றுவது சரியா என்பதை பார்ப்போம்

கோவிலில் தீபம் ஏற்றும் போது கோவிலில் ஏற்கனவே ஏற்றப்பட்ட எரிந்து கொண்டிருக்கின்ற தீபம் இருப்பின் அதனை உபயோகிக்கும் போது மிக்க நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம் . சந்நிதியில் ஏற்றப்பட்ட தீபம் இறைவனின் தீபமாகவே கருதப்படும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்

தனியாக தீப்பெட்டி மூலம் தீபம் ஏற்றும் பழக்கத்தை வைத்துக்கொள்ளாதீர்கள் . பிரகாரத்தில் தீபம் எரியவில்லையெனில் பூஜாரியிடம் இருந்து தீபம் ஏற்றவும். வேறு வழியே இல்லை எனில்மட்டும் தீப்பெட்டி பயன்படுத்த வேண்டும். எப்போதும் இந்த விசயத்தில் கவனமாக இருக்கவும்.

நெருப்பு தானம் பெறுவதும், அதையே கொடுப்பதும் தெய்வ அனுகிரகத்தை கொடுக்கும்.

Monday, 12 March 2018

குத்து விளக்கு ஏற்றும் பலன் .விளக்குத் திரியின் பயன்.
















1. குத்து விளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றினால் துன்பங்கள் நீங்கி வசீகரம் உண்டாகும் என்று தமிழ்
ஆன்மீக மற்றும் ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது

2. மேற்கு முகமாக ஏற்றவே கூடாது ஏற்றினால்  கிரக தோஷம் பங்காளி சண்டை மற்றும் பகை உண்டாகும்.

3. வடக்கு முகமாக ஏற்றினால் கல்வி மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் விலகும்.திரண்ட செல்வம் உண்டாகும்.

4. தெற்கு முகமாக ஏற்றினால் எப்போதும் நல்லதல்ல மரண வீடுகளில் மட்டும் தான் ஏற்றுவார்கள் அப்படி ஏற்றும் இடங்களில் அபசகுணங்கள் தென்படும்.வீட்டுக்கு எம தூதர்களை விருந்தாளிகலாக்கும் அதனால் மரணங்கள் சம்பவிக்கும்.

இனி விளக்குத் திரியின் பயன்களை பார்ப்போம் பலன்கள்

1. தாமரைத் தண்டில் திரி போட்டால் ஜென்ம பாவங்கள் விலகும் என்று சொல்கிறது ஐதீகம்

2. வாழைத் தண்டு நூல் திரி போட்டால் குலதெய்வ குற்றங்கள் நீங்கும்

3. புது மஞ்சள் சேலை துண்டில் திரி போட்டால் தாம்பத்ய தகராறு நீங்கும்.

4. புது வெள்ளை வஸ்த்திரத்தில் பன்னீரை விட்டு உலர வைத்துத் திரி போட்டால் வீட்டில் ஐஸ்வர்யம்
பெருகுவது மட்டுமல்லாமல்  கண்தருஷ்டிகள் நீங்கும் ..மூதேவி விலகுவாள்

Article by jothidachakram.blogspot.in, jothidam-tamil.com
Designed by vidwansweb creations..web designers for tamil astrologers

செல்வ வளம் பெருக சில பயனுள்ள ஆலோசனைகள் | Tamil aanmegam

காலையில் எழுந்தவுடன் நீங்கள் உங்கள் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும்.

குளித்தபின்பு எப்பொழுதும் முதுகைத்தான் முதலில் துடைக்க வேண்டும்.பின்பு முகத்தை துடையுங்கள்

பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் என அழைக்கப்படும் லுங்கிகள் கண்டிப்பாக
அணியக்கூடாது

சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத் தொட்டுக்கொண்டுதான் இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லலாகாது ..அது தட்டுப்பாட்டுக்குரிய சொல்

பூஜை அறையில் இராஜ அலங்காரத்துடன் கூடிய பழனியாண்டவர் சிலை வைத்து வணங்கினால் சிறப்பு

இரவில் எப்போதும் தயிர் சேர்த்து கொள்ளக்கூடாது. அது மகாவிஷ்ணுவே ஆனாலும்  சரி தான் , அவரை விட்டு லட்சுமி கடாட்சம் காணாமல் போய்விடும்.

வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையானின் (பெருமாள்) படத்தை வைக்க வேண்டும். இதை உங்கள் அலுவகங்களில் வைப்பது இன்னும் சிறப்பு

வீட்டின் முன்பு கண் திருஷ்டி படம் என்று கூறும் பூதம் படத்தை எடுத்துவிட்டு விநாயகர், முருகன் படங்களை மாட்டவும்.

லட்சுமி படத்திற்கும், கள்ளாபெட்டிக்கும் மல்லிகைப்பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ.

லட்சுமி, குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும் அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல ஓம் ஐஸ்வரேஸ்வராய நம என்ற சிறப்பு மிக்க மந்திரத்தை தினமும் கூறவேண்டும்
பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலைப்பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.

வீட்டில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைத்துக்கொள்ளுங்கள் .

செல்வ வளம் பெருக சொல்ல வேண்டிய மந்திரம் :

விஷ்னு பத்னீம் க்ஷமாம் தேவீம்
மாதவீம் மாதவப்ரியாம் லசஷ்மீம்
ப்ரிய ஸகீம் தேவீம் நமாம்
யச்யுத வல்லபாம்

Article by jothidam-tamil.com



Friday, 9 March 2018

இரண்டாம் இட பாவ கிரகவும் ..பரிகார நிவர்திகளும் | Tamil jothidam second house

ஒரு ஜாதகத்தில் இரண்டாம் இடம் மிகவும் முக்கியமானது ஆண்களை விட பெண்களுக்கு அது குடும்ப வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது

ஜாதகக் கட்டத்தில் 2-ம் இடத்தில் சூரியன் இருக்கப்பெற்றால் , தஞ்சை மாவட்டம், திருவிடை மருதூர் அருகே இருக்கும் 'சூரியனார்கோயில்' சென்று வழிபட்டு வருவது நல்லது , குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். ஜாதகத்தில் 2 - ம் இடத்தில் செவ்வாய் இருக்கிறதென்றால் , நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமியை வணங்கி வந்தால் செவ்வாயின் அணுகிரேகம் கிடைக்கும்

* 2- ம் பாவத்தில் சனி, ராகு, கேது போன்ற பாவ கி ரகங்கள் நின்றால்  குடும்பத்தில் மன நிம்மதி குறையும். பணக்கஷ்டம் இருக்கும் என தமிழ் ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கிறது . ஜாதகத்தின் நிலையை உணர்ந்து, சகிப்புத்தன்மையுடனும் விட்டுக்கொடுத்தும் வாழ்வது காலச்சிறந்தது  . இத்தகைய ஜாதகர்களுக்கு வரன் பார்க்கும்போது, இதே அமைப்புள்ள ஜாதகரையே இணைக்க வேண்டும்..இது திருமண பொருத்தம் பார்க்கும் போது மிகவும் முக்கியமானதாகும்

பரிகாரம்:  ஜாதகத்தில் 2 - ம் இடத்தில் சனி உள்ளவர்கள் திருநள்ளாறு சென்று பூஜை செய்து சனீஸ்வர பகவானை வழிபட்டால், நல்ல மாற்றங்கள் நிகழும்.என்று வேத ஜோதிடம் சொல்கிறது மேலும் சனிக்கிழமைதோறும் காகங்களுக்குச் சாதம் வைத்துவிட்டு உணவருந்தினால் உடனடி பலன் கிடைக்கும்.சனி ப்ரீத்தி பரிகாரங்களில் இது முக்கியமானதாகும்

ஜாதகத்தில் 2 - ம் இடத்தில் ராகு இருப்பவர்கள் திருநாகேஸ்வரம் சென்று வழிபாடு செய்துவந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்கை வழிபாடு செய்தல் வேண்டும்

ஜாதகத்தில் 2 - ம் இடத்தில் கேது இருப்பவர்கள், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்பெரும்பள்ளத்தில் இருக்கும் நாகநாத சுவாமிக் கோயிலுக்குச் சென்று வழிபடவேண்டும்

Article by jothida chakram  

Thursday, 1 March 2018

உங்கள் நட்சத்திரம் என்ன? இந்த ருத்ராட்சம் அணியுங்கள் | rudraksha mahima and nakshatram in tamil

ருத்ராட்சத்தைப் பொறுத்தவரை எதை அணிந்தாலும் அது தீங்கு தராது. ஆனால் ஒவ்வொருவரின் நட்சத்திரத்திற்கு உகந்த ருத்ராட்சங்கள் அணிவது நல்லது என்று அற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுவும் ருத்ராட்சம் அணிவதற்கு உத்தமமான பூசம் நட்சத்திரம் அன்று நல்ல நாள் பார்த்து பாலில் நனைத்து தெய்வ சன்னதியில் வைத்து அணிய வேண்டும்.

எந்த நட்சத்திரத்திற்கு எந்த ருத்ராட்சம் நல்லது ?

அஸ்வினி – அஸ்வினி நட்சத்திரம் உள்ளவர்கள் கேது நவ முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.

பரணி – பரணி நட்சத்திரம் உள்ளவர்கள் சுக்ரன் ஷண் முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.

கார்த்திகை – கார்த்திகை நட்சத்திரம் உள்ளவர்கள் சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதசமுகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.

ரோஹிணி – ரோஹிணி நட்சத்திரம் உள்ளவர்கள் சந்திரன் த்வி முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.

மிருகசீரிஷம் – மிருகசீரிஷம் நட்சத்திரம் உள்ளவர்கள் செவ்வாய் த்ரி முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.

திருவாதிரை – திருவாதிரை நட்சத்திரம் உள்ளவர்கள் ராகு அஷ்ட முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.

புனர் பூசம் – புனர் பூசம் நட்சத்திரம் உள்ளவர்கள் ப்ருஹஸ்பதி பஞ்ச முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.

பூசம் – பூசம் நட்சத்திரம் உள்ளவர்கள் சனி சப்த முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.

ஆயில்யம் – ஆயில்யம் நட்சத்திரம் உள்ளவர்கள் புதன் சதுர் முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.

மகம் – மகம் நட்சத்திரம் உள்ளவர்கள் கேது நவ முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.

பூரம் – பூரம் நட்சத்திரம் உள்ளவர்கள் சுக்ரன் ஷண் முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.

உத்தரம் – உத்தரம் நட்சத்திரம் உள்ளவர்கள் சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதச முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.

ஹஸ்தம் – ஹஸ்தம் நட்சத்திரம் உள்ளவர்கள் சந்திரன் த்வி முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.

சித்திரை – சித்திரை நட்சத்திரம் உள்ளவர்கள் செவ்வாய் த்ரி முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.

ஸ்வாதி – ஸ்வாதி நட்சத்திரம் உள்ளவர்கள் ராகு அஷ்ட முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.

விசாகம் – விசாகம் நட்சத்திரம் உள்ளவர்கள் ப்ருஹஸ்பதி பஞ்சமுகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.

அனுஷம் – அனுஷம் நட்சத்திரம் உள்ளவர்கள் சனி சப்த முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.

கேட்டை – கேட்டை நட்சத்திரம் உள்ளவர்கள் புதன் சதுர் முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.

மூலம் – மூலம் நட்சத்திரம் உள்ளவர்கள் கேது நவ முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.

பூராடம் – பூராடம் நட்சத்திரம் உள்ளவர்கள் சுக்ரன் ஷண் முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.

உத்திராடம் – உத்திராடம் நட்சத்திரம் உள்ளவர்கள் சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதச முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.

திருவோணம் – திருவோணம் நட்சத்திரம் உள்ளவர்கள் சந்திரன் த்வி முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.

அவிட்டம் – அவிட்டம் நட்சத்திரம் உள்ளவர்கள் செவ்வாய் த்ரி முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.

சதயம் – சதயம் நட்சத்திரம் உள்ளவர்கள் ராகு அஷ்ட முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.

பூரட்டாதி – பூரட்டாதி நட்சத்திரம் உள்ளவர்கள் சனி பஞ்ச முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.

உத்திரட்டாதி – உத்திரட்டாதி நட்சத்திரம் உள்ளவர்கள் சனி சப்த முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.

ரேவதி – ரேவதி நட்சத்திரம் உள்ளவர்கள் புதன் சதுர்முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.


திருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள் - Tiruchendur temple information













திருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை.

1. திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.

2. திருச்செந்தூரில் வீரவாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு.

3. திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.

4. மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்.

5. மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங்கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்பறை என்றும் ஒரு பெயர் உண்டு.

6. திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.

7. திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.

8. திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.

9. திருச்செந்தூர் முருகனே போற்றி என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 83-திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

10. திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது.

11. மூலவருக்கு பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்க அங்கி அணிவித்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைர வேல் அணிவிக்கப்படும்.

12. திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.

13. திருச்செந்தூர் கோவில் மூலவர் முன் உள்ள இடம் மணியடி எனப்படுகிறது. இங்கு நின்று பாலசுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

14. நாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் உள்ளது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.

15. திருச்செந்தூர் கோவில் திருப்பணிக்காக மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர். அவர்களது சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.

16. தமிழகத்தில் முதன் முதலில் நாகரீகம் தோன்றிய நகரங்களுள் திருச்செந்தூரும் ஒன்று.

17. முருகப் பெருமானோடு போரிட்ட படை வீரர்கள் அய்யனார்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

18. திருச்செந்தூர் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைபெற்று இருப்பதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.

19. இத்திருத்தலம் மன்னார் வளைகுடாக் கடலின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திருப்பதால், அலைவாய் என்று அழைக்கப்பட்டது. பின்னர், திரு என்றும் அடைமொழி சேர்க்கப்பட்டு, ‘திருச்சீரலைவாய்’ என்று அழைக்கப்படுகின்றது.

20. இக்கோயிலுக்குச் செல்லும் வழியில், தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இவ்விநாயகரை வணங்கிய பின்னர்தான் முருகப் பெருமானை வணங்கச் செல்ல வேண்டும்.

21. இத்திருக்கோயிலில் பன்னிரு சித்தர்களில் எட்டுச் சித்தர்கள் சமாதியாகி உள்ளதாகக் கூறப்படுகின்றது.

22. முருகப்பெருமானின் வெற்றி வேல் மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில், கடற்கரை ஓரமாக உள்ள மாப்பாடு என்ற இடம் ஆகும். இப்பகுதி தற்போது, மணப்பாடு என்று அழைக்கப்படுகின்றது.

23. அலைவாய், திரச்சீரலைவாய், வெற்றி நகர், வியாழ சேத்திரம், அலைவாய்ச் சேறல், செந்தில், திரிபுவளமாதேவி சதுர்வேதி மங்கலம், சிந்துபுரம், ஜெயந்திபுரம், வீரவாகு பட்டி னம், என்றெல்லாம் திருச்செந்தூர் முன்பு அழைக்கப்பட்டது.

24. முருகனின் அறுபடை வீடுகளில் இது 2-வது படை வீடு எனப்படுகிறது. ஆனால் இதுதான் முதல் படை வீடு என்ற குறிப்புகளும் உள்ள.ன

25. முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே முருகனின் தலங்களில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும்.

26. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகப்பெரிய கோவில் கொண்ட தலம் என்ற சிறப்பும் திருச்செந்தூர் கோவிலுக்கு உண்டு.

27. முருகன் சிவந்த நிறம் உடையவன். அவன் உறைந்துள்ள தலம் என்பதால்தான் இத்தலத்துக்கு செந்தில் என்ற பெயர் ஏற்பட்டது.

28. திருச்செந்தூர் ஊர் மத்தியில் சிவப்கொழுந்தீசுவரர் கோவில் உள்ளது. இதுதான் ஆதிமுருகன் கோவில் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

29. கிறிஸ்தவ மீனவர்கள் திருச்செந்தூர் முருகனை உறவுமுறை சொல்லி அழைக்கிறார்கள். திருச்செந்தூர் கோவில் திருப்பணிகளுக்கு காயல்பட்டினத்தில் வசித்த சீதக்காதி எனும் வள்ளல் நன்கொடை அளித்துள்ளார். எனவே திருச்செந்தூர் முருகன் ஆலயம் சமய ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.

30. அருணகிரி நாதர் தன் பாடல்களில் பல இடங்களில் திருச்செந்தூரை குறிப்பிட்டுள்ளார். அவர் திருச்செந்தூரை மகா புனிதம் தங்கும் செந்தில் என்று போற்றியுள்ளார்.

31. திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.

32. திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் விசுவரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக, மிக முக்கியமான பூஜையாகும்.

33. குமரகுருபரர், பகழிக் கூத்தர், ஆதி சங்கரர், உக்கிரபாண்டியனின் மகள் உள்பட ஏராளமானவர்கள் திருச்செந்தூர் முருகனின் நேரடி அருள் பெற்றனர்.

34. முருகன், மால், ரங்கநாதப் பெருமாள் ஆகிய சைவ, வைணவ மூர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன.

35. செந்திலாண்டவருக்கு ஆறுமுக நயினார் என்றும் பெயர் உள்ளது. திருச்செந்தூர் தாலுகா பகுதியில் வாழும் பலருக்கு நயினார் எனும் பெயர் சூட்டப்பட்டிருப்பதை காணலாம். இசுலாமியரும் நயினார் எனும் பெயர் சூட்டிக் கொண்டுள்ளனர்.

36. வீரபாண்டிய கட்ட பொம்மனும் அவர் மனைவி சக்கம்மாவும் செந்திலாண்டவருக்கு ஏராளமான தங்க நகைகள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.

37. மூலவர் தவக் கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.

38. முருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருள்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, «பரீச்சம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியன இடம் பெறுகின்றன.

39. உச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச் சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்குவார்கள்.

40. இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகியன நிவேதனம் செய்வர்.

41. சண்முகருக்கு ஆண்டுக்கு 36 திருமுழுக்கு மட்டுமே நடைபெறுகிறது.

சித்திரை, ஐப்பசி, தை    - 3
ஆடி, தை அமாவாசை    - 2
ஆவணி, மாசித் திருவிழா    - 10
ஐப்பசி, பங்குனி திருக்கல்யாணம்    - 2
மாத விசாகம்    - 12
ஆனி தை வருடாபிஷேகம்    - 3
தீபாவளி, மகாசிவராத்திரி    - 4
மொத்தம்         36

42. திருச்செந்தூர் முருகன் கோவிலின் ஆண்டு வருமானம் தற்போது சுமார் ரூ.30 கோடியாக அதிகரித்துள்ளது.

43. திருச்செந்தூர் கோவிலில் தர்ம தரிசனம் எனப்படும் பொது தரிசனம், சிறப்பு தரிசனம் எனப்படும் ரூ.10, ரூ.20 கட்டண தரிசனம், வி.ஐ.பி.க்களுக்கான விரைவு தரிசனம் எனப்படும் ரூ.100, ரூ.250, ரூ.500 கட்டண தரிசனம் ஆகிய 3 வகை தரிசனங்கள் நடைமுறையில் உள்ளன.

44. திருச்செந்தூர் கோவிலுக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

45. இத்தலத்தில் கோவில் வெளிப் பிரகாரங்களில் தூண்களில் கந்த சஷ்டி கவசம் எழுதப்பட்டுள்ளது. அதுபோல உள்பிரகாரங்களில் தல வரலாற்றை கூறும் வரை படங்களை அமைத்துள்ளனர்.

46. திருச்செந்தூரில் உச்சிக்கால பூஜை முடிந்ததும் மணி ஒலிக்கப்பட்ட பிறகே வீரபாண்டிய கட்டபொம்மன் சாப்பிடுவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 250 ஆண்டு பழமையான, அந்த 100 கிலோ எடை கொண்ட அந்த பிரமாண்ட மணி தற்போது ராஜகோபுரம் 9-ம் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.

47. சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகன் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார். அதை உணர்த்தும் வகையில் இன்றும் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் உள்ளது. முதல் 6 நாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம் நடைபெறும். 7-ம் நாள் முருகன்-தெய்வானை திருமணம் நடைபெறும். அதன் பிறகு 5 நாட்கள் கல்யாண ஊஞ்சல் சேவை நடைபெறும்.

48. திருச்செந்தூரில் கருவறைக்கு எதிரில் இரண்டு மயில்கள் மற்றும் ஒரு நந்தி இருக்கின்றன. அது ஏன் தெரியுமா? முருகனுக்கு ஏற்கனவே ஒரு மயில் வாகனமாக இருந்து வருகிறது. பின்னர் சூரனைப்பிளந்தும், ஒரு பகுதி மயிலாகவும், மற்றொரு பகுதி சேவல் கொடியாகவும் ஆனதல்லவா? சூரசம்ஹாரம் முடிந்ததும், ஏற்கனவே இருந்த மயிலோடு, இந்த மயிலும் (சூரன்) சேர்ந்து வந்து செந்தூரில் இரண்டு மயில்களாக நின்றுவிட்டன. சூரசம்ஹாரத்திற்கு முன்புவரை இந்திரனே முருகனுக்கு மயில் வாகனமாக இருந்தான். முருகன் சூரனை வென்றபின் இந்திரனுக்கு தேவலோக தலைமை பதவியை கொடுத்து அனுப்பிவிட்டு, மயிலாக மாறிய சூரனையே தன் வாகனமாகக் கொண்டார்.பஞ்சலிங்ககளை வைத்து முருகன் பூஜை செய்யும் கோலத்தில் சிவனுடன் இருக்கிறார். எனவே, சிவனுக்குரிய நந்தி, மயில்களுடன் சேர்ந்து கருவறைக்கு எதிரே இருக்கிறது.

49. ஆவணி திருவிழாவின்போது முருகப்பெருமான், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.

50. திருச்செந்தூரில் தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு, மேளதாளத்துடன் சென்று கடலில் கரைப்பார்கள். இதற்கு கங்கை பூஜை என்று பெயர்.

51. மூலவருக்கு போற்றிமார், சண்முகருக்கு திரிசுதந்திரர், திருமாலுக்குத் வைணவர்கள், தனித்தனியே 3 இடங்களில் நைவேத்தியம் தயாரிக்கின்றனர்.

52. கோவில் திருப்பணி செய்த துறவிகளில் காசி சுவாமி கி.பி. 1882-ல் வசந்த மண்டபம் கட்டினார். மவுன சாமி 1895-ல் மண்டபத்தை கட்டி முடித்தார். வள்ளிநாயக சுவாமி - கிரிப்பிரகாரத்துக்கு தகரக் கொட்டகை அமைத்தார். ஆறுமுக சுவாமி - கோவிலுக்குள் கருங்கல் தூண்கள் அமைத்தார். தேசியமூர்த்தி சுவாமி - ராஜகோபுரத்தை கட்டினார்.

53. திருச்செந்தூர் கோவில் தங்க தேரில் அறுங்கோண வடிவில் அறுபடை வீட்டு முருகன் சிலைகள் உள்ளன.

54. சஷ்டித் தகடுகளில் எழுதப்பட்ட மந்திரம் ஓம் சரவணபவ என்பதாகும்.

55. திருச்செந்தூர் தலத்தில் பழங்காலத்தில் பல மணற் குன்றுகள் முருகனது சிறிய சந்நிதியைச் சூழ்ந்திருக்க வேண்டும். அவற்றுள் பெரிய மணற்குன்று ஒன்றைக் கந்த மாதன பர்வதம் என்ற பெயரால் குறித்திருக்க வேண்டும். நாளடைவில் மணற் குன்றுகள் தேய்ந்து தேய்ந்து பிராகாரங்கள் ஆகியிருக்க வேண்டும். வடக்குப் பக்கத்தில் மணற்குன்றே ஒரு மதிலாக அமைந்திருப்பதை இப்போதும் காணலாம். இம்மணற்குன்றின் தாழ்வரையில்தான் ரங்கநாதப் பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார்.

56. கந்த சஷ்டி என்றால், கந்தவேளுக்குரிய ஆறாவது நாள் என்று பொருள்.

57. மாறாத உடல் அழகும் மாறாத உள்ளத்தழகும் என்றும் இளமை நிலையும் கொண்டருள்பவன் திருமுருகன்.

58. சிவப்பு, கருப்பு, மஞ்சள், நீலம், பச்சை ஐந்து நிறங்கள் கொண்ட வண்ண மயில் ஏறி வருபவன் திருமுருகன்.

59. யோகம், போகம், வேகம் என மூவகை வடிவங்களைக் கொண்டருள்பவன் திருமுருகன்.

60. திருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை. இச்சரிதத்தை எழுதுவோரும் படிப்போரும் கேட்போரும் நீங்காத செல்வங்களைப் பெற்று வாழ்ந்திருப்பர் என்று சூதம முனிவர் உரைத்தருளி உள்ளார். சிவாயநம அருணாச்சலம்

இந்த பதிவு whats up அல்லது facebook மூலமாக நாங்கள் படித்ததை உங்களுக்கு பகிர்கிறோம் 

 
jothidam karka tamil pdf,jothidam karka pdf,jothidam karpom,jothidam padam,tamil jothidam lessons pdf-jothidam karka in tamil youtube,jothidam parpathu eppadi,tamil jothidam blogspot- thirumana porutham - jathagam porutham - jathagam in tamil - Tamil rasi Palan - ஜோதிடம் தமிழ் - திருமண பொருத்தம் தமிழில் - jathagam porutham in tamil - marriage Matching Tamil Software - Tamil Horoscope in 2017 - tamil matha jothidam - jathagam porutham for marriage - rasi palan in tamil 2017 - Astrology in Tamil 2017, Horoscope in tamil 2017, thirumana Porutham, pathu poruthangal, Mukkiya Poruthangal - marriage matching horoscope in tamil Online, marriage matching in tamil astrology online, Tamil Marriage Match Calculator, Nakshatra Matching for marriage, 10 porutham for- marriage tamil jothidam online-tamil jothidam 2017-best jothidam in tamil language-tamil jothidam free software download-jothidam tamil books dinakaran jothidam-tamil jothidam marriage-dinamani jothidamin tamil

Copyright @ 2017 Vidwans web creations.