சூரியன் உச்சி வானில் இருக்கும் நேரமே அபிஜித் முகூர்த்தம் என்பார்கள் முகூர்த்தம் சரியாக அமையவில்லை என்றால் தாராளமாக அபிஜித் முகூர்த்தம் எடுத்து கொள்ளலாம் என்ற கூற்று நிலவி வருகிறது ..
அது தவறான கூற்று பால் காய்ச்சுதல் ,திருமண பொருத்தம் மற்றும் சில விஷேஷ நிகழ்ச்சிகளை அதுக்கென்று உள்ள வாஸ்து நாள் ..சுப முகூர்த்த நாளை பார்த்தே சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்
சில தவிர்க்க முடியாத காரணங்களால் இன்று செய்து தான் ஆக வேண்டும் என்ற விஷயங்கள் குறிப்பாக வேலைக்கு விண்ணப்பித்தால் ..சிலருக்கு காசை கை மாற வேண்டிய அவசர சூழ் நிலை இதுபோன்றவற்றை வேறு வழி இல்லாத பட்சத்தில் நீங்கள் அபிஜித் முகூர்த்தம் பயன் படுத்தலாம்
இந்த நேரம் பஞ்சாங்கம்படி ராகு காலம், துர்முஹூர்த்தம், வர்ஜ்யம், அனுகூலமற்ற ஹோரை போன்றவை இருந்தாலும் இவற்றின் தன்மை எதுவும் இந்த சமயத்தில் இருக்காது என்கிறார்கள் .
சில நாட்காட்டி மற்றும் பஞ்சாங்கத்தில் அபிஜித் காலம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்..பிரம்ம முகூர்த்தம்,உதய காலம்,அஸ்தம காலம் போன்ற நேரங்களுக்கு எப்படி தோஷமில்லையோ அதேபோல் இந்த அபிஜித் காலத்திற்கு எந்தவிதமான தோஷமும் இல்லை என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றது ..
நாம் பிரம்ம முகூர்த்தம்,உதய காலம்,அஸ்தம காலம் போன்றவற்றில் கண்ணை மூடி கொண்டு சுபநிகழ்ச்சிகளோ ,முகூர்த்தமோ வைப்பதில்லை ..அதுபோல் அபிஜித் காலத்தையும் கண்ணை மூடிக்கொண்டு முகூர்த்தங்கள் குறிக்க கூடாது
0 comments:
Post a Comment