ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டு போனால் நாய்களை கண்டால் ஒரு
பயங்கரமான பயம் தொற்றும் ..அது மட்டுமில்லாமல் சிலருக்கு நாய் கடித்து
காயங்களும் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது ..
அதற்கு அறிவியல் ரீதியான காரணங்களும் உண்டு ..யார் ஜாதகத்தில் சுக்கிரன் நீசமடைந்தோ
அல்லது கெட்டு போயோ இருக்கிறதோ .அவர்களின் உடம்பில் காற்றாளை நாற்றம் மிக அதிகமாக
வீசும் ..இந்த நாற்றம் நாய்களுக்கும் அழுகிய மாமிசத்தை நினைவு படுத்தும்..அதனால் இது
போன்ற நபர்களை கண்டால் எந்த தெருநாய்க்கும் ஒரு பிரியம் வந்து விடும் ..
இவர்களுக்கான பரிகாரம் என்னவென்றால் வெள்ளி கிழமை சுக்கிர ஹோரையில் உடம்பில்
நன்றாக வெயில் காயும் படி இருக்க வேண்டும் ..சூரிய கதிர்கள் அவர்களுக்குள் அந்நேரம் புகும்பொழுது
நாளடைவில் ஊடலில் இருந்து வரும் துர்நாற்றம் குறையும் .இப்படி செய்து வந்தால் நாய்களுக்கு இவர்களின்
மீதுள்ள ஈர்ப்பும் ,கவனமும் குறையும் .
இவர்கள் சனி கிழமை பைரவ வழிபாடு செய்வது நல்லது
0 comments:
Post a Comment