மனதிற்கு அதிபதி சந்திரன் என்பதை நாம் அறிவோம் ..ஒருவரின் ஜாதகத்தில் தேய்பிறை சந்திரனாக இருந்து சந்திரன் லக்னத்துக்கு 6,8,12ல் ராகு ,கேதுவுடனோ அல்லது சனி,மாந்தி உடனோ இருந்து...அவர்களின் திசா புத்தி நடந்தால் மனநிலை அதிகம் பாதிக்கும்.
செய்யும் தொழிலை மன ஒருமிப்புடன் செய்ய முடியாது ..கவனக்குறைவில் பிழைகள் செய்வார்கள் .தாய்க்கும் தண்ணீரில் கண்டம் உண்டாகும்...அதிகப்படியான குழப்பம் எப்போதும் சிந்தனையில் இருப்பார்கள் ,அதிக கோபம்,பிடிவாதம்,மற்றவர்கள் பேச்சை கேளாமல் தான் சொல்வதே சரி என வாதிடுதல்,
அதிகமாக நட்ப்பு வட்டாரம் இருக்காது ..எல்லாருக்கும் பொறாமை குணம் கொஞ்சம் இருக்கும் ஆனால்
இவர்களுக்கு அதுவே வியாதி ஆக வாய்ப்புண்டு
இவர்களுக்கு அதுவே வியாதி ஆக வாய்ப்புண்டு
இவர்களின் ஜாதகத்தில் பார்த்தீர்கள் என்றால் குறிப்பாக 4ஆம் இடத்தில் 6ஆம் அதிபதியோ எட்டாம் அதிபதியோ இருக்க வாய்ப்புண்டு .அல்லது 4ஆம் அதிபதி 6,8,12ல் மறைந்து 4ஆம் இடத்துக்கு பாவர்கள் தொடர்பும் இருக்கும்.முதல் வீடான லக்கினமும் கெட்டு போய் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் .பாக்யாதிபதி நன்றாக இருந்தாலோ பூர்வபுன்ணியாதிபதி நன்றாக இருந்தாலோ தெய்வ அருளால் குணமாவர்..குரு நன்றாக இருந்தால் குணப்படுத்த பலரும் உதவுவர்..குல தெய்வ துணை உண்டு
சந்திரனுக்கு பரிகாரமாக கீழ்க்கண்டவற்றில் ஏதாவது ஒன்றை செய்து வருவதும் போதுமானது தான்
திங்கட்கிழமைகளில் விரதம் இருத்தல் (சோம வார விரதம்),
பௌர்ணமி நாட்களில் சாதத்தில் தேனும் சர்க்கரையும் கலந்து செப்பு பாத்திரத்தில் சந்திரனுக்கு படைப்பது,
செம்பருத்தி பூவால் அர்ச்சனை செய்வது,
திருப்பதி சென்று வருவது,
சந்திரனின் அதிதேவதையான பார்வதி தேவியை திங்களன்று வணங்குவது,
ஸ்ரீபராசக்தி, துர்க்கா தேவியை வழிபடுவது,
இரண்டு முகங்கள் கொண்ட ருத்ராட்சையை அணிந்து கொள்வது,
நீர், பசும்பால், அரிசி போன்றவற்றை திங்கட்கிழமைகளில் பெண்களுக்கு தானம் தருவது,
அதுபோல ஓம் ஷரம் ஸ்ரீம் ஷெளரம் சந்திராய நமஹ என சந்திரனின் மூல மந்திரங்களை 40 நாட்களுக்கு தினம் 250 வீதம் 10,000 தடவை ஜெபிப்பது.
0 comments:
Post a Comment