கோவிலில் தீபம் ஏற்றுதல்...
கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதே நமது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொடுக்கும் சிறந்த வழியாகும் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்
எந்த வழிபாடு ஆனாலும் தீபம் ஏற்றுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நல்லெண்ணை... நெய்... அல்லது ஐந்து எண்ணைகள் கலந்து தீபம் ஏற்ற நன்மைகள் பெருகும்.இங்கு வேறொருவரின் தீபத்தில் நாம் விளக்கேற்றுவது சரியா என்பதை பார்ப்போம்
கோவிலில் தீபம் ஏற்றும் போது கோவிலில் ஏற்கனவே ஏற்றப்பட்ட எரிந்து கொண்டிருக்கின்ற தீபம் இருப்பின் அதனை உபயோகிக்கும் போது மிக்க நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம் . சந்நிதியில் ஏற்றப்பட்ட தீபம் இறைவனின் தீபமாகவே கருதப்படும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்
தனியாக தீப்பெட்டி மூலம் தீபம் ஏற்றும் பழக்கத்தை வைத்துக்கொள்ளாதீர்கள் . பிரகாரத்தில் தீபம் எரியவில்லையெனில் பூஜாரியிடம் இருந்து தீபம் ஏற்றவும். வேறு வழியே இல்லை எனில்மட்டும் தீப்பெட்டி பயன்படுத்த வேண்டும். எப்போதும் இந்த விசயத்தில் கவனமாக இருக்கவும்.
நெருப்பு தானம் பெறுவதும், அதையே கொடுப்பதும் தெய்வ அனுகிரகத்தை கொடுக்கும்.
0 comments:
Post a Comment