1. குத்து விளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றினால் துன்பங்கள் நீங்கி வசீகரம் உண்டாகும் என்று தமிழ்
ஆன்மீக மற்றும் ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது
2. மேற்கு முகமாக ஏற்றவே கூடாது ஏற்றினால் கிரக தோஷம் பங்காளி சண்டை மற்றும் பகை உண்டாகும்.
3. வடக்கு முகமாக ஏற்றினால் கல்வி மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் விலகும்.திரண்ட செல்வம் உண்டாகும்.
4. தெற்கு முகமாக ஏற்றினால் எப்போதும் நல்லதல்ல மரண வீடுகளில் மட்டும் தான் ஏற்றுவார்கள் அப்படி ஏற்றும் இடங்களில் அபசகுணங்கள் தென்படும்.வீட்டுக்கு எம தூதர்களை விருந்தாளிகலாக்கும் அதனால் மரணங்கள் சம்பவிக்கும்.
இனி விளக்குத் திரியின் பயன்களை பார்ப்போம் பலன்கள்
1. தாமரைத் தண்டில் திரி போட்டால் ஜென்ம பாவங்கள் விலகும் என்று சொல்கிறது ஐதீகம்
2. வாழைத் தண்டு நூல் திரி போட்டால் குலதெய்வ குற்றங்கள் நீங்கும்
3. புது மஞ்சள் சேலை துண்டில் திரி போட்டால் தாம்பத்ய தகராறு நீங்கும்.
4. புது வெள்ளை வஸ்த்திரத்தில் பன்னீரை விட்டு உலர வைத்துத் திரி போட்டால் வீட்டில் ஐஸ்வர்யம்
பெருகுவது மட்டுமல்லாமல் கண்தருஷ்டிகள் நீங்கும் ..மூதேவி விலகுவாள்
Article by jothidachakram.blogspot.in, jothidam-tamil.com
Designed by vidwansweb creations..web designers for tamil astrologers
0 comments:
Post a Comment