பொதுவாக ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் இரண்டேகால் நாளும் கெடுதல் ஆகாது. நட்சத்திர அடிப்படையில் சுப நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் காலகட்டம் , சந்திரன் எட்டில் இருந்தாலும் நன்மையே செய்யும் என்று பல ஜோதிட நூல்கள் கூறுகின்றன
அதிலும் பொதுவாக ஜாதகரின் 8-ல் சந்திரன் சுபர் சாரம் பெற்று, சுப கிரகங்களான குரு, சுக்கிரன் ஆகியோருடன் கூடும்போது, திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்
மேலும், சந்திராஷ்டம தினங்களில் மனோகாரகனான சந்திரனை தியானித்து வழிபடுவதால், நம்முடைய மன சஞ்சலங்கள் யாவும் நீங்கி நலம் பெறலாம். திங்கள்கிழமைகளில் சந்திரனை மனதில் இருத்தி கீழ்க்காணும் துதிப்பாடலைப் படித்து வழிபட, சகலமும் நலமாகும்..
அமிர்தத்துக்கு இருப்பிடமான சந்திரபகவானே போற்றி
ஸோமனே போற்றி
வெள்ளை கிரணங்கள் உடையவரே போற்றி
பாற்கடலில் உருவானவரே
ஆம்பல் பூவிடத்தில் பிரியம் கொண்டவரே
உலகங்களுக்கெல்லாம் பிரியமானவரே
ரோகிணியின் நாயகனே போற்றி போற்றி
அனுதினமும் இந்தப் பாடலைப் படித்து சந்திரனை வணங்கி வழிபடுவது சிறப்பானதாக்கும் இதனால், நாம் வாழ்வில் தடைப்பட்டிருக்கும் நன்மை யாவும் தடையின்றி வெகுவிரைவில் நிறைவேறும். எப்போதும் சந்திர பலம் நிறைந்திருந்து நம் சங்கடங்கள் யாவும் விலகும்.
சந்திராஷ்டமம் பரிகாரங்கள்
சந்திராஷ்டமம் அன்று
சந்திராஷ்டமம் பரிகாரம்
சந்திராஷ்டம பரிகாரங்கள்
சந்திராஷ்டமம் 2018
சந்திராஷ்டம நாட்கள் 2018
சந்திராஷ்டம தினங்கள் 2018
சந்திராஷ்டமம் மந்திரம்
0 comments:
Post a Comment