பூமியில் வைக்கக்கூடாதவை...
சகலவிதமான விஷயங்களையும் தாங்கிக்கொண்டிருக்கும் பூமி மாதா, குறிப்பிட்ட சில பொருள்களை நேரடியாக தன்மீது வைத்தால் அவற்றைத் தாங்கும் வல்லமை தனக்குக் கிடையாது என பகவான் ஸ்ரீமந் நாராயணரிடம் விவரித்து வேண்டியதாகப் நம்முடைய பல பூரண நூல்கள் கூறுகின்றது .
அந்தப் பொருள்கள்... நல்முத்து, முத்துச் சிப்பி, பகவானின் பிம்பம், சிவலிங்கம், ஸ்ரீஅம்பாளின் மூர்த்தம், சங்கு, தீபம், தேவதா யந்திரங்கள், மாணிக்கம், வைரம், பூணூல், புஷ்பம், புத்தகம், துளசி இலைகள், ஜப மாலை, பூமாலைகள், கற்பூரம், தங்கம், கோரோசனை, சந்தனம், சாளக்கிராமம், சாளக்கிராமத்தை அபிஷேகித்த தீர்த்தம். இவற்றை நேரடியாக தரையில் படும்படி வைக்கக்கூடாது.
அப்படி வைக்கும் பட்சத்தில் பூமாதேவியின் கோவத்திற்கு ஆளாகி தீமைகள் நடந்தேறும் என்பது நம்பிக்கை ..பொதுவாகவே நீங்கள் திருத்தலங்களிலோ ..வீட்டின் பூஜை அறையிலோ இவற்றை தரையில் படும்
படி வைக்கமாட்டார்கள்