பூஜைகள் செய்யும்போது கலசத்தின் வாயிலில் தேங்காய் வைப்பதற்கு முன் சில மாவிலைகள் இட்டு, அதன்மீது தேங்காயை வைத்துத்தான் சாமியை ஆவாஹனம் செய்வது தான் முறை . பூஜை முடிந்த பின்னர் மாவிலையால் கலசத்தில் உள்ள புனித நீரை பக்தர்கள் மீது தெளிப்பர்.இப்படி எல்லா விழாக்களிலும் குறிப்பாக கோவில் திரு விழா ,திருமணம் ,பூப்புனித நீராட்டு விழா போன்ற எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் முதன்மை இடம் பெறுவது இந்த மாவிலை தான் . அப்பேற்பட்ட மாவிலையில் தான் லட்சுமி தேவி வசிக்கிறாள்
என்பார்கள்
* விசேஷ நாட்களில் மட்டுமல்லாது அடிக்கடி தலைவாயிலில் மாவிலை தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகள் விரைவில் தீர்க்கும் என்பார்கள்
* லக்ஷ்மி கடாக்ஷம் பொங்கும்
* எதிர்மறை அதிர்வுகளை இது நீக்கும்
* நச்சுக் காற்றை சுத்தப்படுத்தும்
*தலைவாயிலில் இருக்கும் வாக்தேவதையின் காதில் எதிர்மறை வார்த்தைகள் விழாது தடுக்கும்
* இதில் இன்னொரு சிறப்பு மாவிலை காய்ந்தாலும் அதன் சக்தி குறையாது
* ஒருபோதும் வீட்டில் பிளாஸ்டிக் மாவிலையை தொங்க விடுதல் கூடாது
மாவிலைகளுக்கு இன்னொரு தனிச்சிறப்பு உண்டு. மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்னரும் கூட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சக்தி மாவிலைகளுக்கு உண்டு என்கிறார்கள்.
அலங்காரத்துக்கு மட்டுமல்ல; ஆரோக்கியத்துக்கும் உதவும் இந்த மாவிலை உண்மையில் லட்ஷமிகடாக்ஷம்
தானே
0 comments:
Post a Comment