ஐந்தாம் வீடு - முதல் - Tamil jothidam 5th house part 1
இதே புத்திரகாரகனாகிய ’குரு’ அதே ஐந்தாம் பாவத்தில் இருந்தால் புத்திர பாக்கியத்திற்கு குறை ஏற்படுத்தலாம்
குறிப்பிட்ட இந்த காரகன், அதே பாவத்தில் இருக்கக்கூடாது என்பது சாத்திரத்தில் உள்ள கூற்று (காரகோ பவ நாஸ்தி). இதற்கும் ஒரு விதிவிலக்கை பெரியோர் கூறுகின்றனர். ஐந்தாம் வீட்டின் பலமும், ஐந்தாம் வீட்டோனும் பலமும், லக்னாதிபதி பலமும், 9ம் வீட்டோன் சிறப்பும், சுபக்கிரஹங்களின் கூடுதலும் ஒன்று சேருமானால், ஐந்தாம் வீட்டில் இருக்கும் குருவினால் ஏற்படும் குறையைப் போக்குவர். கீழ் கண்ட படத்தை
பார்க்க
பாகம் இரண்டு - Tamil jothidam 5th house part 2
இனி குலதெய்வமும் ஐந்தாம் வீட்டோனும்
எல்லாத்தெய்வங்களும் ஓன்று தன என்றாலும் பூர்வ ஸ்தானத்தோடு சம்பந்த பட்ட குலதெய்வம் எல்லா குலத்தோர்க்கும் உண்டு .எதற்கும் இந்த ஐந்தாம் பாவத்திற்கும் மிக நெருங்கிய தொடர்ப்பு உண்டு
அது போல் எந்த ரூபத்தில் எந்தத் தெய்வத்தை ஆராதித்தால், குறிப்ப்பிட்டவருக்கு நன்மை பயக்கும் என்பதை அறிய இந்த 5-ம் வீடு மிகவும் முக்கியம்
5வீட்டுக்கு அதிபதி, இந்த வீட்டினில் இருப்பவர் மற்றும் இந்த வீட்டினைப் பார்ப்பவர் ஆகிய மூவரில் பலம் வாய்ந்தவருக்கு யார்
அதிதேவதையோ, அவரே அந்த ஜாதகருக்கு இஷ்ட தெய்வமாக முடியும்
ஒவ்வொரு கிரகத்திற்கும் அதிதேவதை:
சூரியன் – ருத்ரன்
சந்திரன்: துர்க்கை
செவ்வாய்: முருகன் – ஆஞ்சநேயர்
புதன்: திருமால்
குரு: இந்திரன்
சுக்ரன்: சதிதேவி
சனி: பிரம்மன்
ராகு: சர்ப்பேஸ்வரன்
கேது: விக்னேஸ்வரன்
மேற்சொன்னவை ஒரு சில நூல்களிலிருந்து பெறப்பட்டது.
இன்னும் சில விவரங்களை மற்றொரு நூலிலிருந்து தருகிறோம் .
சூரியன் – அக்னி
சந்திரன்: ஈஸ்வரன்
செவ்வாய்: பூம்யை
புதன்: புருஷோத்தமன்
குரு: பிரம்மன்
சுக்ரன்: இந்திரன்
சனி: யமன்
ராகு: காலன்
கேது: பிரம்மன் – சித்ரகுப்தன்
இதிலுள்ள இரண்டு வகைகளில் எதையும் ஏற்றுக் கொள்ளலாம்.
இஷ்டதெய்வம் என்று ஒன்றை நாம் ஏற்றுக் கொண்டு அந்த தெய்வத்தை
திடமான சங்கல்பத்தோடு உறுதியாக பின்பற்றி முறையாக ஆராதித்தால் அந்த தெய்வத்தின் முழுமையான அருளைப் பெற்று வாழ்வாங்கு வாழமுடியும் என்று பல ஆன்மீக நூல்கள் கூறுகின்றது
ஐந்தாம் பாவத்தைப் பார்த்து புத்திர பாக்கியத்தை அறியலாம் அதுமட்டுமல்லாம் அது பூர்வ புண்ணிய ஸ்தானம் எனவே தந்தையின் தந்தையைப் பற்றி கூட சொல்லலாம்.
ஏனென்றால் 9ம் வீட்டிற்கு 9ம் வீடு என்பதை நினைவில் கொள்ளவும்
மிக முக்கியமான வீடு என்றும் கூட சொல்லலாம். இந்த ஐந்தாம் வீட்டிற்கு ‘விதி வீடு’ என்றும் ‘பூர்வ புண்ணிய ஸ்தானம்’ என்றும் சொல்லலாம். ஆங்கிலத்தில் ‘Place of Destiny’ என்றும் சொல்லலாம். இந்த பாவத்தின் மூலம் நாம் செய்துள்ள பூர்வ புண்ணியம் பற்றியும், ஊழ்வினை பற்றியும் அறிய முடியும். ஷேத்ராடணம் என்னும் திருக்கோவில் யாத்திரை செல்வது பற்றியும் அறியலாம். ஒருவர் உலகப் புகழ் பெறுவதற்கும் இந்த பாவம் பலம் பெற வேண்டும்.
ஞாபகசக்தி, பேரறிவு, மந்திர சித்தி, மந்திரி பதவி, புனிதப் பணிகள், மனிதாபிமானம், நன்னடத்தை, நல்லிதயம், கலைஞானம், பொதுக் கல்வி, பிதுரார்ஜிதம் ஆகியவற்றை பற்றி அறியவேண்டும் என்றால் இந்த வீட்டை ஆராய வேண்டும்
ஐந்தாம் வீடு பாகம் மூன்று-Tamil jothidam 5th house part 3
ஐந்தாம் வீட்டில் கிரகங்கள்: பொதுப்பலன்
இனி ஐந்தாம் வீட்டில் இருக்கிற கிரகங்களால் என்ன செய்ய முடியும் என்கிற பொதுப் பலன்களைச் சுருக்கமாக பார்ப்போம்.
சூரியன் 5ல் இருந்தால்: புத்திரதோஷம் ஏற்படும். திரவிய லாபம், மலைப் பிரதேசம் பயணம். வயிற்று உபாதை ஏற்படலாம்.
சந்திரன் 5ல் இருந்தால்: நலங்களைப் பொழிவார். உயர்நிலைக்கு கொண்டு வருவார். அறிவாற்றலை அளிப்பார்.
செவ்வாய்: இவர் 5ல் ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால் புத்திரதோஷம் இருக்காது. இவர் லக்னாதிபதியாகி 5ல் இருந்தாலும் தோஷம் உண்டாகாது. மற்ற நிலையில் உள்ள இவர், இந்த இடத்திற்கு ஊறு விளைவிப்பார். பகைவரால் தொல்லை, வயிற்று வலி உண்டாகும்.
புதன்: 5ல் பலமாக இருந்தால் அமைச்சர் ஆவார். உயர்நிலைக்கு உத்திரவாதம். மாபெரும் கவிஞராவார். மதிப்பு உயரும். மந்திரசித்தி ஏற்படும்.
குரு: அறிவு, ஆற்றல், பதவி எல்லாம் ஏற்படும். புத்திர தோஷம் ஏற்படலாம். சுப சேர்க்கை ஏற்பட்டால் சுபபலம் ஏற்படும்.
சுக்ரன்: பணம் சேரும், சுகம், சுபிட்சம் கிடைக்கும். அறிவு, திறமை எல்ல இடங்களிலும் வெளிப்படும். ‘பிஸிணஸ்’ செய்யும் தகுதி உண்டாகும். அமைச்சர்கள் மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களுடன் நல்லுறவுகிட்டும்.
சனி: புத்திரதோஷம் உண்டாக்குவார். பகைவரால் துன்பம் நேரிடலாம். குறுக்கு வழியில் புத்தி போகும். சனி உச்சத்திலோ ஆட்சியிலோ சுயசாரத்திலோ இருந்தால் நன்மைகள் ஏற்படும்.
ராகு: மூக்கால் பேசும் தன்மை ஏற்படலாம். படிப்பு, அறிவுக்கு வளர்ச்சி ஏற்படுத்துவார். புத்திரதோஷம். மனகிலேசம் ஏற்படும். ஆனால் அதிர்ஷ்டமும் உண்டாகும்.
கேது: இவர் 5ல் இருந்தால் தொல்லைகள் ஏற்படலாம். படிப்பு, அறிவு இவற்றில் வளர்ச்சிகள் உண்டு. புத்திரபாவத்தை குறப்பார். மன சஞ்சலம் நிறைந்திருக்கும்.
கிரக சேர்க்கை-பார்வை தரும் பலன்:
இனி இந்த வீட்டை பற்றி வேறு சில விஷயங்களை நம் பார்ப்போம்
தன வாக்கு குடும்ப ஸ்தானமான 2ம் பாவத்திற்கு இது 4ம் பாவமாகிறது.
சுகஸ்தானமாகிய 4ம் பாவத்திற்கு 2ம் பாவமாகிறது. ஆயுள்ஸ்தானமாகிய
8ம் பாவத்திற்கு இது 10ம் பாவமாகிறது. களத்திர ஸ்தானமாகிய 7ம் வீட்டிற்கு
11, முன்னமயே சொல்லப்பட்டபடி 9ம் பாவத்திற்கு 9ம், லாபஸ்தானமாகிய 11க்கு நேர் 7ம் வீடும் ஆகிறது. மேற்சொன்னவை யாவுமே விசேஷமான தனித்தன்மை கொண்டவை.
நமது ஜாதகத்தில் தனஸ்தானாதிபதியும் ஐந்தாம் பாவ தி பதியும் ஒன்று சேர்ந்தால் நன்மை பயக்கும்.
4, 5 பாவாதிபதிகள் ஒன்று கூடினால் யோகம் நல்லது.
7,5 பாவாதிபதிகள் கூடுவதும் சிறப்பானது என்கிறது பழமை ஜோதிட நூல்கள் .
5,9ம் அதிபதிகள் சேர்க்கை மகா பாக்கியமாகும். 5, 11 பாவாதிபதிகள் பார்வை மிகவும் நல்லது. சேர்க்கையாலும் நலமுண்டாகும்.
5ம் அதிபதி 8ம் அதிபதியுடன் கூடினால் சங்கடங்கள் துரிதம் . 12ம் வீட்டோனுடன் கூடினால் பாக்கியங்கள் விரையமாகும். ஆறாம் வீட்டோனுடன் கூடினால் பகைவரால் பாக்கியம் போகும். சுபபலமுள்ள 3ம் வீட்டோனுடன் கூடினால் சகோதர பாக்கியத்தை அளிப்பான். ஐந்தாம் வீட்டோன் சுக்ரனாக இருந்து பலம் பெற்றால் பணம் சம்பந்தப்பட்ட துறைகளில் லாபம் உண்டு. செவ்வாயாக இருந்து பலம் பெற்றால் பூமி, வாகனம் சம்பந்தப்பட்டது மூலம் பணம் கிடைக்கும். சகோதரராலும் நன்மை உண்டு. குருவாக இருந்தால் பலம் பெற்றால் அரசினால் பணம், புகழ் எல்லாம் கிடைக்கும். சூரியனால் தந்தை மூலமும் சந்திரனால் தாய் மூலமும் பொருள் லாபம் கிடைக்கும்.
அதாவது அந்த வீட்டுக்குரியவர் யாரோ அந்தக் கிரஹத்தின் காரகத்துவங்கள் மூலம் நலம் சேரும். இதற்கு முக்கியமாக அந்த அந்த கிரஹம் பலம் பெற்றிருக்க வேண்டும்.
ஐந்தாம் வீடு நான்காம் பாகம் - Tamil jothidam 5th house part 4
லக்னமும் ஐந்தாம் வீட்டோனும்
மேஷ லக்னத்திற்கு 5ம் அதிபதி சூரியன் பலம் பெற்றால் பிதுரார்ஜிதம் நிலைக்கும் என்பார்கள் அதுபோல் அவருக்கு பிதுர் வழி சொத்துக்கள் கிடைக்கும்.
ரிஷபத்திற்கு 5ம் பாவாதிபதி பலம் பெற்றால் பெரிய ‘தொழிலதிபர்’ ஆவார்கள் .
மிதுனத்திற்கு பஞ்சமாதிபதி சுபபலத்தில் இருந்தால் கை நிறைய சம்பாதிக்கும் யோகம் ஜாதகனுக்கு தெய்வீக காரியங்களுக்கு செலவு செய்வார்கள்
கடகத்திற்கு யோககாரகனான செவ்வாய் பலம் அடைந்தால் பொறியியல், விஞ்ஞானம் மற்றும் பூமி சம்பந்தப்பட்ட இனங்களில் அவர்களுக்கு அந்தஸ்து கிடைக்கும்
சிம்ம லக்னத்திற்கு பூர்வபுண்ணிய ஸ்தானதிபதி குரு ஆவார். சொந்த வீடு வாசத்தால் நற்பலன்கள் ஏற்படும். திடீர்ப் பொருள் தன வரமும்கிடைக்கும்
கன்னி லக்னத்திற்கு உச்சமானாலும் ஆட்சி பெற்றாலும் இரண்டுமே நல்லவைதான். 6ல் ஆட்சியானாலும் சொந்த வீடு யோகம் உண்டு
துலாமிற்கு பஞ்சாமிதிபதி சனி பலம் பெற்றால் ஏராளமாக பல வழிகளில் பொருளும் , பதவியும், புகழும் அவர்களுக்கு கிடைக்கும் என்பார்கள் .
விருச்சிகத்திற்கு 2,5க்குரிய குரு பலம் பெற்றிருந்தால் நாடாளும் தகுதியும், புகழ் பாக்கியங்களும் அவருக்கு கிடைக்கும் எனலாம்
தனுசு லக்னத்திற்கு 5ஆம் அதிபதி செவ்வாய் பலம் வாய்ந்து இருந்தால் பூமி, நிலம், வீடு, வாகனம் போன்றவைகளில் லாபமும் நற்பலனும் அவர்களுக்கு உண்டாகும்.
மகர லக்னத்திற்கு ஐந்தாம் பாவாதிபதி சுக்ரன். இவர் பலம் பெற்றால் குபேர சம்பத்து கிடைக்கும்.
கும்ப லக்னத்திற்கு பஞ்சமாதிபதி புதன். இவர் பலம் பெற்றால் வித்தைகள் மூலம் புகழ் கிடைக்கும். அஷ்டமாதிபதியும் இவரே ஆவதால் சில சங்கடங்கள் ஏறபட்டு விலகும்.
மீன லக்னத்திற்கு 5ம் வீட்டு அதிபதி சந்திரன். இவர் பலம் ஏற்பட்டால் கலை கவிதை கற்பனையால் புகழ் கிடைக்கும். கலை நிமித்தம் காரணமாக கடல் கடந்து ஜாதகஸ்தான் சம்பாதிப்பர்
லக்னத்திலிருந்து ஐந்தாம் வீடு என்பது சந்தான பாக்கியம், புத்திர பாக்கியம், மக்கட்பேறு என்பார்கள். பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் சொல்வார்கள். சந்ததியை விருத்தி செய்யும் வீடு.
சரி இனி புத்திரன் என்றால் என்ன வென்று பார்ப்போம்
‘புத்’ என்றால் ஒரு நரகம். அந்த நரகத்திற்கு நாம் போகாதவாறு அதைப் போக்குபவன் அவன், புத்திரன். ஆதலால் அவனுக்கு அந்தப் பெயர் அமைந்தது.
மழலை பேசும் மக்கட் செல்வத்தை தருவதும் தராமற்போவதும் ஐந்தாம் வீடே மிக முக்கியமான காரணம் நம் முன்னோரை பற்றியும் பின்னோரை பற்றியும் அறிவிக்கும் பொது ஸ்தானம்
‘குரு’வுக்குப் புத்திரகாரகன் என்று பெயர். மக்களைப் பிரதிபலிக்கும் கிரகம் குரு. இந்த ’குரு’ தம்பதிகளின் ஜாதகத்தில் வலுத்திருந்து, புத்திர பாவமான ஐந்தாம் பாவமும் பலம் பெற்றிருக்குமானால் புத்திரவிருத்தி பலம்
இதே புத்திரகாரகனாகிய ’குரு’ அதே ஐந்தாம் பாவத்தில் இருந்தால் புத்திர பாக்கியத்திற்கு குறை ஏற்படுத்தலாம்
குறிப்பிட்ட இந்த காரகன், அதே பாவத்தில் இருக்கக்கூடாது என்பது சாத்திரத்தில் உள்ள கூற்று (காரகோ பவ நாஸ்தி). இதற்கும் ஒரு விதிவிலக்கை பெரியோர் கூறுகின்றனர். ஐந்தாம் வீட்டின் பலமும், ஐந்தாம் வீட்டோனும் பலமும், லக்னாதிபதி பலமும், 9ம் வீட்டோன் சிறப்பும், சுபக்கிரஹங்களின் கூடுதலும் ஒன்று சேருமானால், ஐந்தாம் வீட்டில் இருக்கும் குருவினால் ஏற்படும் குறையைப் போக்குவர். கீழ் கண்ட படத்தை
பார்க்க
நமக்குத் தெரிந்து எத்தனையோ ஜாதகர்களுக்கு ‘குரு’ ஐந்தில் இருந்தும் கூடப் புத்திர சந்தானம் கிட்டியிருக்கிறது. அதற்குக் காரணம் யாம் மேற்சொன்ன இதர பலன்கள் காரணமாக இருக்கும்
பாகம் இரண்டு - Tamil jothidam 5th house part 2
இனி குலதெய்வமும் ஐந்தாம் வீட்டோனும்
எல்லாத்தெய்வங்களும் ஓன்று தன என்றாலும் பூர்வ ஸ்தானத்தோடு சம்பந்த பட்ட குலதெய்வம் எல்லா குலத்தோர்க்கும் உண்டு .எதற்கும் இந்த ஐந்தாம் பாவத்திற்கும் மிக நெருங்கிய தொடர்ப்பு உண்டு
அது போல் எந்த ரூபத்தில் எந்தத் தெய்வத்தை ஆராதித்தால், குறிப்ப்பிட்டவருக்கு நன்மை பயக்கும் என்பதை அறிய இந்த 5-ம் வீடு மிகவும் முக்கியம்
5வீட்டுக்கு அதிபதி, இந்த வீட்டினில் இருப்பவர் மற்றும் இந்த வீட்டினைப் பார்ப்பவர் ஆகிய மூவரில் பலம் வாய்ந்தவருக்கு யார்
அதிதேவதையோ, அவரே அந்த ஜாதகருக்கு இஷ்ட தெய்வமாக முடியும்
ஒவ்வொரு கிரகத்திற்கும் அதிதேவதை:
சூரியன் – ருத்ரன்
சந்திரன்: துர்க்கை
செவ்வாய்: முருகன் – ஆஞ்சநேயர்
புதன்: திருமால்
குரு: இந்திரன்
சுக்ரன்: சதிதேவி
சனி: பிரம்மன்
ராகு: சர்ப்பேஸ்வரன்
கேது: விக்னேஸ்வரன்
மேற்சொன்னவை ஒரு சில நூல்களிலிருந்து பெறப்பட்டது.
இன்னும் சில விவரங்களை மற்றொரு நூலிலிருந்து தருகிறோம் .
சூரியன் – அக்னி
சந்திரன்: ஈஸ்வரன்
செவ்வாய்: பூம்யை
புதன்: புருஷோத்தமன்
குரு: பிரம்மன்
சுக்ரன்: இந்திரன்
சனி: யமன்
ராகு: காலன்
கேது: பிரம்மன் – சித்ரகுப்தன்
இதிலுள்ள இரண்டு வகைகளில் எதையும் ஏற்றுக் கொள்ளலாம்.
இஷ்டதெய்வம் என்று ஒன்றை நாம் ஏற்றுக் கொண்டு அந்த தெய்வத்தை
திடமான சங்கல்பத்தோடு உறுதியாக பின்பற்றி முறையாக ஆராதித்தால் அந்த தெய்வத்தின் முழுமையான அருளைப் பெற்று வாழ்வாங்கு வாழமுடியும் என்று பல ஆன்மீக நூல்கள் கூறுகின்றது
ஐந்தாம் பாவத்தைப் பார்த்து புத்திர பாக்கியத்தை அறியலாம் அதுமட்டுமல்லாம் அது பூர்வ புண்ணிய ஸ்தானம் எனவே தந்தையின் தந்தையைப் பற்றி கூட சொல்லலாம்.
ஏனென்றால் 9ம் வீட்டிற்கு 9ம் வீடு என்பதை நினைவில் கொள்ளவும்
மிக முக்கியமான வீடு என்றும் கூட சொல்லலாம். இந்த ஐந்தாம் வீட்டிற்கு ‘விதி வீடு’ என்றும் ‘பூர்வ புண்ணிய ஸ்தானம்’ என்றும் சொல்லலாம். ஆங்கிலத்தில் ‘Place of Destiny’ என்றும் சொல்லலாம். இந்த பாவத்தின் மூலம் நாம் செய்துள்ள பூர்வ புண்ணியம் பற்றியும், ஊழ்வினை பற்றியும் அறிய முடியும். ஷேத்ராடணம் என்னும் திருக்கோவில் யாத்திரை செல்வது பற்றியும் அறியலாம். ஒருவர் உலகப் புகழ் பெறுவதற்கும் இந்த பாவம் பலம் பெற வேண்டும்.
ஞாபகசக்தி, பேரறிவு, மந்திர சித்தி, மந்திரி பதவி, புனிதப் பணிகள், மனிதாபிமானம், நன்னடத்தை, நல்லிதயம், கலைஞானம், பொதுக் கல்வி, பிதுரார்ஜிதம் ஆகியவற்றை பற்றி அறியவேண்டும் என்றால் இந்த வீட்டை ஆராய வேண்டும்
ஐந்தாம் வீடு பாகம் மூன்று-Tamil jothidam 5th house part 3
ஐந்தாம் வீட்டில் கிரகங்கள்: பொதுப்பலன்
இனி ஐந்தாம் வீட்டில் இருக்கிற கிரகங்களால் என்ன செய்ய முடியும் என்கிற பொதுப் பலன்களைச் சுருக்கமாக பார்ப்போம்.
சூரியன் 5ல் இருந்தால்: புத்திரதோஷம் ஏற்படும். திரவிய லாபம், மலைப் பிரதேசம் பயணம். வயிற்று உபாதை ஏற்படலாம்.
சந்திரன் 5ல் இருந்தால்: நலங்களைப் பொழிவார். உயர்நிலைக்கு கொண்டு வருவார். அறிவாற்றலை அளிப்பார்.
செவ்வாய்: இவர் 5ல் ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால் புத்திரதோஷம் இருக்காது. இவர் லக்னாதிபதியாகி 5ல் இருந்தாலும் தோஷம் உண்டாகாது. மற்ற நிலையில் உள்ள இவர், இந்த இடத்திற்கு ஊறு விளைவிப்பார். பகைவரால் தொல்லை, வயிற்று வலி உண்டாகும்.
புதன்: 5ல் பலமாக இருந்தால் அமைச்சர் ஆவார். உயர்நிலைக்கு உத்திரவாதம். மாபெரும் கவிஞராவார். மதிப்பு உயரும். மந்திரசித்தி ஏற்படும்.
குரு: அறிவு, ஆற்றல், பதவி எல்லாம் ஏற்படும். புத்திர தோஷம் ஏற்படலாம். சுப சேர்க்கை ஏற்பட்டால் சுபபலம் ஏற்படும்.
சுக்ரன்: பணம் சேரும், சுகம், சுபிட்சம் கிடைக்கும். அறிவு, திறமை எல்ல இடங்களிலும் வெளிப்படும். ‘பிஸிணஸ்’ செய்யும் தகுதி உண்டாகும். அமைச்சர்கள் மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களுடன் நல்லுறவுகிட்டும்.
சனி: புத்திரதோஷம் உண்டாக்குவார். பகைவரால் துன்பம் நேரிடலாம். குறுக்கு வழியில் புத்தி போகும். சனி உச்சத்திலோ ஆட்சியிலோ சுயசாரத்திலோ இருந்தால் நன்மைகள் ஏற்படும்.
ராகு: மூக்கால் பேசும் தன்மை ஏற்படலாம். படிப்பு, அறிவுக்கு வளர்ச்சி ஏற்படுத்துவார். புத்திரதோஷம். மனகிலேசம் ஏற்படும். ஆனால் அதிர்ஷ்டமும் உண்டாகும்.
கேது: இவர் 5ல் இருந்தால் தொல்லைகள் ஏற்படலாம். படிப்பு, அறிவு இவற்றில் வளர்ச்சிகள் உண்டு. புத்திரபாவத்தை குறப்பார். மன சஞ்சலம் நிறைந்திருக்கும்.
கிரக சேர்க்கை-பார்வை தரும் பலன்:
இனி இந்த வீட்டை பற்றி வேறு சில விஷயங்களை நம் பார்ப்போம்
தன வாக்கு குடும்ப ஸ்தானமான 2ம் பாவத்திற்கு இது 4ம் பாவமாகிறது.
சுகஸ்தானமாகிய 4ம் பாவத்திற்கு 2ம் பாவமாகிறது. ஆயுள்ஸ்தானமாகிய
8ம் பாவத்திற்கு இது 10ம் பாவமாகிறது. களத்திர ஸ்தானமாகிய 7ம் வீட்டிற்கு
11, முன்னமயே சொல்லப்பட்டபடி 9ம் பாவத்திற்கு 9ம், லாபஸ்தானமாகிய 11க்கு நேர் 7ம் வீடும் ஆகிறது. மேற்சொன்னவை யாவுமே விசேஷமான தனித்தன்மை கொண்டவை.
நமது ஜாதகத்தில் தனஸ்தானாதிபதியும் ஐந்தாம் பாவ தி பதியும் ஒன்று சேர்ந்தால் நன்மை பயக்கும்.
4, 5 பாவாதிபதிகள் ஒன்று கூடினால் யோகம் நல்லது.
7,5 பாவாதிபதிகள் கூடுவதும் சிறப்பானது என்கிறது பழமை ஜோதிட நூல்கள் .
5,9ம் அதிபதிகள் சேர்க்கை மகா பாக்கியமாகும். 5, 11 பாவாதிபதிகள் பார்வை மிகவும் நல்லது. சேர்க்கையாலும் நலமுண்டாகும்.
5ம் அதிபதி 8ம் அதிபதியுடன் கூடினால் சங்கடங்கள் துரிதம் . 12ம் வீட்டோனுடன் கூடினால் பாக்கியங்கள் விரையமாகும். ஆறாம் வீட்டோனுடன் கூடினால் பகைவரால் பாக்கியம் போகும். சுபபலமுள்ள 3ம் வீட்டோனுடன் கூடினால் சகோதர பாக்கியத்தை அளிப்பான். ஐந்தாம் வீட்டோன் சுக்ரனாக இருந்து பலம் பெற்றால் பணம் சம்பந்தப்பட்ட துறைகளில் லாபம் உண்டு. செவ்வாயாக இருந்து பலம் பெற்றால் பூமி, வாகனம் சம்பந்தப்பட்டது மூலம் பணம் கிடைக்கும். சகோதரராலும் நன்மை உண்டு. குருவாக இருந்தால் பலம் பெற்றால் அரசினால் பணம், புகழ் எல்லாம் கிடைக்கும். சூரியனால் தந்தை மூலமும் சந்திரனால் தாய் மூலமும் பொருள் லாபம் கிடைக்கும்.
அதாவது அந்த வீட்டுக்குரியவர் யாரோ அந்தக் கிரஹத்தின் காரகத்துவங்கள் மூலம் நலம் சேரும். இதற்கு முக்கியமாக அந்த அந்த கிரஹம் பலம் பெற்றிருக்க வேண்டும்.
ஐந்தாம் வீடு நான்காம் பாகம் - Tamil jothidam 5th house part 4
லக்னமும் ஐந்தாம் வீட்டோனும்
மேஷ லக்னத்திற்கு 5ம் அதிபதி சூரியன் பலம் பெற்றால் பிதுரார்ஜிதம் நிலைக்கும் என்பார்கள் அதுபோல் அவருக்கு பிதுர் வழி சொத்துக்கள் கிடைக்கும்.
ரிஷபத்திற்கு 5ம் பாவாதிபதி பலம் பெற்றால் பெரிய ‘தொழிலதிபர்’ ஆவார்கள் .
மிதுனத்திற்கு பஞ்சமாதிபதி சுபபலத்தில் இருந்தால் கை நிறைய சம்பாதிக்கும் யோகம் ஜாதகனுக்கு தெய்வீக காரியங்களுக்கு செலவு செய்வார்கள்
கடகத்திற்கு யோககாரகனான செவ்வாய் பலம் அடைந்தால் பொறியியல், விஞ்ஞானம் மற்றும் பூமி சம்பந்தப்பட்ட இனங்களில் அவர்களுக்கு அந்தஸ்து கிடைக்கும்
சிம்ம லக்னத்திற்கு பூர்வபுண்ணிய ஸ்தானதிபதி குரு ஆவார். சொந்த வீடு வாசத்தால் நற்பலன்கள் ஏற்படும். திடீர்ப் பொருள் தன வரமும்கிடைக்கும்
கன்னி லக்னத்திற்கு உச்சமானாலும் ஆட்சி பெற்றாலும் இரண்டுமே நல்லவைதான். 6ல் ஆட்சியானாலும் சொந்த வீடு யோகம் உண்டு
துலாமிற்கு பஞ்சாமிதிபதி சனி பலம் பெற்றால் ஏராளமாக பல வழிகளில் பொருளும் , பதவியும், புகழும் அவர்களுக்கு கிடைக்கும் என்பார்கள் .
விருச்சிகத்திற்கு 2,5க்குரிய குரு பலம் பெற்றிருந்தால் நாடாளும் தகுதியும், புகழ் பாக்கியங்களும் அவருக்கு கிடைக்கும் எனலாம்
தனுசு லக்னத்திற்கு 5ஆம் அதிபதி செவ்வாய் பலம் வாய்ந்து இருந்தால் பூமி, நிலம், வீடு, வாகனம் போன்றவைகளில் லாபமும் நற்பலனும் அவர்களுக்கு உண்டாகும்.
மகர லக்னத்திற்கு ஐந்தாம் பாவாதிபதி சுக்ரன். இவர் பலம் பெற்றால் குபேர சம்பத்து கிடைக்கும்.
கும்ப லக்னத்திற்கு பஞ்சமாதிபதி புதன். இவர் பலம் பெற்றால் வித்தைகள் மூலம் புகழ் கிடைக்கும். அஷ்டமாதிபதியும் இவரே ஆவதால் சில சங்கடங்கள் ஏறபட்டு விலகும்.
மீன லக்னத்திற்கு 5ம் வீட்டு அதிபதி சந்திரன். இவர் பலம் ஏற்பட்டால் கலை கவிதை கற்பனையால் புகழ் கிடைக்கும். கலை நிமித்தம் காரணமாக கடல் கடந்து ஜாதகஸ்தான் சம்பாதிப்பர்
0 comments:
Post a Comment