பிரதமையில் பிறந்த ஜாதகன் எதையும் ஆழமாக சிந்திப்பான்
துவிதியையில் பிறந்தவன் பொய் பேச மாட்டான்
த்ரிதியையில் பிறந்தவன் நினைத்த காரியத்தை முடிக்கும் வல்லமை உடையவனாக இருப்பான்
சதுர்த்தியில் பிறந்தவன் மந்திர சித்தியில் விருப்பம் உடையவனாக இருப்பான்
பஞ்சமியில் பிறந்தவன் பெண் ஆசை உடையவனாக இருப்பான்
சஷ்டியில் பிறந்தவன் செல்வந்தர்களால் விரும்ப படுவான்
சப்தமியில் பிறந்தவன் இரக்கம் உடையவனாக இருப்பான்
அஷ்டமியில் பிறந்தவன் குழந்தைகளிடம் பிரியம் உள்ளவனாக இருப்பான்
நவமியில் பிறந்தவன் புகழில் நாட்டம் உடையவனாக இருப்பான்
தசமியில் பிறந்தவன் ஒழுக்கம் உடையவனாக இருப்பான்
ஏகாதசியில் பிறந்தால் பொருள் ஈட்டுவதில் நாட்டம்
துவாதசியில் பிறந்தவன் புதுமையான தொழில்களில் ஈடுபடுவான்
திரயோதசியில் பிறந்தவன் உறவுகளுடன் விரிசல் ஏற்படும்
சதுர்த்தசியில் பிறந்தவன் மன்னிக்கும் குணம் இல்லாதவனாக காணப்படுவான்
பௌர்ணமியில் பிறந்தால் மிக தெளிவான சிந்தனை சக்தி
அமாவாசையில் பிறந்தவன் தன அறிவையும் ஆற்றலையும் எப்பொழுதும் பெருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவனாக இருப்பான்
0 comments:
Post a Comment