சனிக்கு பிடித்த இடங்களும் , மனிதர்களும்
தலைக்கனம் கொண்டவர்கள், அடுத்தவர் மனைவி மீது ஆசைப்படுபவர்களை சரியான நேரம் பார்த்து பொறி வைத்து அசிங்கப்படுத்துவது சனி பகவானின் வழக்கம் . தவறுகள் செய்யும் பொழுது மற்ற கிரகங்களிடம் இருந்து தப்பித்து விடலாம் ஆனால் சனி பகவான் நின்று நிதானமாக செய்யவேண்டியதை அழுத்தம் திருத்தமாக செய் செய் என்று செய்து விட்டு தான் போவார் எனவே நீதிகாரகன் ,கர்மகாரகன் என்று சனிபகவானுக்கு பெயர்கள் உண்டு
ஈரம் ரொம்ப பிடிக்கும் உலர்த்தாத துணியை உடுத்துபவர்களை கண்டால் சனி பகவானுக்கு கொள்ளை பிரியமாம் . அதனால் தான் முன்னோர்கள் சொல்வார்கள் ஈரம் சொட்ட வீட்டிற்கு செல்லகூடாதென்று ,
அசுத்தமான இடங்கள் மட்டுமல்ல குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்களை கண்டாலும், தலைசீவாமல் அலங்கோலமாக இருப்பவர்களை கண்டாலும் அவ்வளவு தான் பிடித்து கொள்வார் .
விளக்கேற்றப்படாமல் இருள் சூழ்ந்த இடங்கள், எப்போதும் அமங்கல சொற்களை பேசுபவர்கள் சனிக்கு மிகவும் பிடித்தமானவர்கள். தன் தீயபார்வையால் எப்படியும் திரும்பி பார்ப்பார்.
சனி ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் இருந்தால் அவர் அதிகம் கெட்ட வார்த்தை பேசுபவராகவும் ஏழாம் அல்லது எட்டாம் வீட்டில் இருந்தால் அடுத்தவர் மனைவி மீது ஆசைப்படுபவராகவும் இருப்பார் .சுப கிரகங்களின் பார்வை பட்டால் விதி விலக்கு உண்டு
0 comments:
Post a Comment