அடுத்தவர்களின் மனைவி மீது ஆசை படும் பெண்ணாசை பிரியர்கள் , அடுத்தவர்களின் பொன்களை ,நிலபுலன்களை வஞ்சித்து வாழ்பவர்களின் வாரிசுகளைகூட வாழவிடாமல் தண்டிக்க சனி பகவானுக்கு பிடிக்கும்.
மாற்றான் மனையாளை பொண்டாள நினைக்கும் சண்டாளர்களை முதலில் ஊக்குவித்து, பின் அவமானப்படுத்திப் பார்ப்பதில் சனி பகவானுக்கு நிகர் சனியே. அந்தரங்க விஷயங்களில் மாட்டிய பல பிரபலங்களின் ஜாதகத்தை எடுத்து ஆராய்ந்தாலே உங்களுக்கு புரியும் இந்த தவறை அவர் பல காலமாக செய்து கொண்டிருப்பார்கள்
ஆனால் சனியின் திசை துவக்கத்திலோ அல்லது தசா சந்தியிலோ .ஏழரை அஷ்டம சனி காலகட்டங்களில் கையும் ,களவுமாக பிடிபடுவார்கள்
காலம் பார்த்து தண்டிப்பார் சனி தாய்க்கு அடங்காத பெண்டீர், தகப்பனுக்கு அடங்காத தனயன், உடன்பிறந்தோரை வஞ்சிக்கும் துரோகி, இவர்களை சனி காலநேரம் பார்த்து தண்டிப்பார் என்பது நிதர்சன உண்மை . பொய், களவு, சூது, வாது செய்பவர்களை ஊக்குவித்து, போகாத ஊருக்கு போகச் சொல்லி, கடைசியில் தனக்கே உரிய பாணியில் தண்டனைத்தர நீதிகாரகனுக்கு நிகர் அவரே
சத்தியம் தவறாமல் நித்தம் வலம் வருபவர்களின் மனதில் நித்திய வாசம் செய்வாள் அன்னை மகாலட்சுமி. அவள் இருந்தால் அவ்விடத்தை திரும்பிக்கூட பார்க்கமாட்டாராம் சனி பகவான். எனவே உடல் சுத்தம் மட்டுமல்லாது மனது சுத்தத்தோடு இருப்பவர்களை சனி தண்டிக்க மாட்டார்.
சனியின் நேசம் நமச்சிவாய எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பகவான் பாதிப்பதில்லை. பிரதோஷ வழிபாடு செய்பவர்களை சனி பிடிப்பதில்லை. காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி பகவான் கருணையுடன் பார்ப்பார். ஆச்சார சீலர்கள், அனுதினம் சிவபூஜை செய்பவர்களை சனி பகவான் நேசிப்பார். ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பகவான் பீடிப்பதில்லை.
ஜோதிடரிடம் பேச இங்கே கிளிக் செய்யவும்