தொட்ட சனி விட்டு போகாது என்ற பழமொழி நாம் கேட்டதுண்டு ..அதிலும் சனி சர்ப்பதுடன் சேர்ந்த வீடு அவ்வளவு தான் ..பதட்ட படாதீங்க அப்படி பார்த்தால் சில காலங்களில் கோட்சார் படி ஒரு வருடத்தில் பிறந்த எல்லா குழந்தைகளுக்கும் இந்த நிலை வரலாம் இல்லையா ? அதனால் கண்டிப்பாக கண்மூடி தனமாக இந்த அமைப்பு உங்கள் ஜாதகத்தில் இருந்தால் பயந்து சாகவேன்டாம் ..இதற்கும் மற்ற கிரகங்களின் நிலமை சுப கிரக திருஷ்டி போன்ற விதி விலக்குகள் உண்டு
இனி இந்த சனி ராகு சேர்க்கையில் ஒவ்வொரு வீட்டிற்கும் உள்ள பொது பலன்களை பார்ப்போம் !!
ஒரு ஜாதகத்தில் லக்கினத்தில் சர்ப்பதுடன் சனி இருந்தால் ஜாதகர் சோடா புட்டி கேஸுங்க ..அடிக்கடி தலைவலின்னு புலம்புற ஆளு..சின்ன வயசிலேயே ஏடாகூடமாக கீழே விழுந்து தலையில் ஒரு தளும்பு வச்சிட்டு காலம் முழுக்க பெருமையை பீத்திப்பாரு ..இந்த காயம் சனி தனியாக நின்றாலும் சரி ..லக்கினத்தில் சனி திருஷ்டி விழுந்தாலும் அமையும் சரிங்களா ..திருமண வழக்கை என்ன சொல்ல பொலம்புற மாதிரி தான் இருக்கும் ..அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க என்ற டயலாக் உங்க துணிகிட்ட தாங்க சொல்லணும் .
இனி இரண்டில் சனி இருந்தால் ..ம்ம் இது இருமல் கேசு இல்லைன்னா குறட்டை கேசு ..திருமண வாழ்க்கை என்கிறது மத்திமம் தாங்க ..நீங்களே ஒரு வேலை செய்யுறது பெரிய விஷயம் ஆனா பாருங்க உங்க வாழ்க்கை
துணை அதிலும் ஏதாவது ஒரு குறை கண்டுபிடிச்சு புலம்புவாங்க ..மூக்கில் பஞ்சு வைக்காம இருக்கணும்னா காதுல பஞ்ச வச்சிருங்க சிம்பில் .அப்புறம் நல்ல விஷயம் யோசிங்க ..நல்ல விஷயம் பேசுங்கன்னு..அப்போ தான் நல்லது நடக்கும்னு நான் சொன்னாலும் நீங்க கேக்கவா போறீங்க ?வீசிங் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம்
பிறந்த குழந்தைக்கு மூன்றில் சனி ராகு இருந்தால் பெற்றோர்களுக்கு சொல்றது ஒண்ணே ஒண்ணு தான் ஒரு மூணு வருஷத்திற்கு அடுத்த குழந்தைக்கான விஷயத்தை தள்ளிவைங்க ..அப்புறம் எல்லாம்
நல்லதே நடக்கும் ..வேலை முடியணும்னு அவசரப்பட்டால் ..அப்புறம் உங்களுக்கு விதி அதன் வேலையை காட்டீரும்ங்க ஓகேவா ? சளி பிரச்சனை ..மூச்சு முட்டு போன்றவை இதுபோன்ற ஜாதகத்திற்கு வரலாம் .
உங்கள் ஜாதகத்தில் சனி -ராகு நான்கில் நிற்கிறதா ? அப்புறம் என்ன உங்க அம்மாவை நீங்கள் உசிரோடு வச்சிருந்தீங்கன்னா அவங்கள்ட்ட கேட்ட போதும் ..என்னை விட உங்க சாதகத்தை வெளிச்சம்மா ஊர் ஊரா
சொல்லுவாங்க .இருதய பிரச்சனை , நுரை ஈரல் பிரச்சனை போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது .
ஐந்தில் உள்ள சனியும் ராகுவும் வாழ்வில் ஒரு ஆப்ரேஷனை உங்களுக்கு வயிற்றில் தந்தே ஆகும் ..போன ஜென்மம் நீங்க கொஞ்சம் அதிகமா ஆட்டம் போட்டு இருப்பீங்கன்னு நான் சொல்லல பழைய ஜோதிட நூல்கள் சொல்லுது ..அதனால் நிகழ் பிறவியில் எல்லா ஜீவன்களுடனும் நன்மை செய்து வாழுங்கள் ..நீங்கள் அதி மாமிச பிரியராக இருக்க வாய்ப்புண்டு ..ஆனால் காலப்போக்கில் அதை விட்டுவிடுவீர்கள்
ஆறில் உள்ள சனியும் ராகுவும் உங்களுக்கு நல்லது தாங்க ..நல்லதுன்னா உடனே புண்ணிய கணக்கை தரமாட்டார் ..அது நம்மாளு (சனி ) வேலையும் இல்லை ..பாவகணக்குகளை நீங்களே ரசிக்கும் வண்ணம் உங்கள் தலையில் கட்டி தருவார் ஜோராக ..இப்போ உங்களுக்கு ஒரு எதிரி இருக்காருன்னு வச்சுக்கோங்க அவரை எப்படி துவசம் பண்றதுனு சும்மா நீங்களே அசந்து போற மாதிரி உங்க மண்டையில் உக்காந்து ஸ்கெட்ச்
போட்டு காட்டுவார் ..அப்புறம் என்ன ?
ஏழில் சனி கூட ராகு சேந்திடிச்சுன்னு வச்சுக்கோங்க கிளு கிளுப்புக்கு பஞ்சமே இருக்காதுங்க ..போற இடத்துல எல்லாம் உங்க வலையில மீனு தானே வந்து மாட்டும் ..அப்புறம் நீங்க மாட்டுவீங்க பல நாள் திருடன் ஒருநாள் மட்டுவான் என்கிற மாதிரி .சோ பொண்ணுங்க விஷயத்தில் ரொம்ப கிளு கிழுக்காதீங்க ..மூலம் சம்பந்தமான பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
எட்டில் சனியும் ராகுவும் வந்திடிச்சுன்னா ..இந்த இரண்டு கிரகங்களில் ஏதேனும் ஒன்றின் திசை நடக்கும் போது ஜாதகருக்கு விபத்து நேரலாம் ..யாரும் உங்களுக்கு சூனியம் ஒன்றும் வைக்க வேண்டாம் நீங்களே
தேடி போய் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ..முடிஞ்ச வரைக்கும் கால பைரவரை கட்டிய நீங்க புடிச்சிக்கணும்னு சொல்லுவாங்க ..என்ன கேட்ட எதாவது ஒரு சாமிய கெட்டியா புடிச்சிக்கோங்க ..இறை வழிபாடு மிகவும் முக்கியம் உங்களுக்கு
ஒன்பதில் சனி ராகு இருந்தால் தன் தந்தை சொன்னதெல்லாம் சரிதான் என்று ஜாதகர் உணரும் தருணத்தில் நீ சொன்னதெல்லாம் தவறு னு சொல்ல ஜாதகருக்கு ஒரு புள்ளை பொறந்தேடும் ..எப்படி நம்ம பெத்தவங்கள்ட்ட நம்ம தெண்டுக்கு முண்டு பேச்சு நம்ம பேசுனோமோ அதை விட அதிகமா பேச நமக்கு கடவுள் அனுப்பி வச்சிருவாரு .இது பாக்கியஸ்தனாவும் கூட ஒன்பதில் சனி தனவரவுக்கு பஞ்சம் வைக்காது ஆனா ராகுவின் சேர்க்கை கை காசை விரயம் செய்யவைக்கும் ..ஜாதகருக்கு வாழ்வில் என்ன கிடைத்தாலும் ஒரு
திருப்தி இருக்காதுன்னு வச்சுக்கோங்களேன்
பத்தில் சனி ராகு காரியவன் காரியத்தில் அமர காரிய பங்கம ..இதில் காரியாவான் என்று அழைக்கப்படுபவர் சனி ..சனி இங்க வெத்து நிலமா இருந்தாலே செய் செய் னு செய்வாரு அப்புறம் என்ன ராகு கூட இருந்து
விதை போட்டு நீரையும் பாச்சும் ..சிம்பிளா சொல்லனும்னா ஜாதகர் ஒரு வேலையிலயும் நிரந்தரமாக தங்கமாட்டார் ..10ஆம் வீடு கடகம், சிம்மமாக இருந்தாலோ மேஷம், விருச்சிகமாக இருந்தாலோதான் இந்த பிரச்சினைகள் இரட்டிப்பாகும்
பதினொன்றில் சனி ராகு இருப்பது சனி அள்ளி தந்தால் .ராகு தன் பங்கை கிள்ளி செல்லும் எவ்வளவு வரவிருந்தாலும் அதற்கேற்றாற் போல் செலவும் இருக்கும் .முடிந்த அளவிற்கு உங்கள் மூத்த சகோதரனிடம் இருந்து சற்று விலகியே இருங்கள் ..இல்லை என்றால் வீண் வம்பு தான்

தொடரும்
12 veedu?
ReplyDelete