செவ்வாய் தனது இயல்பான இயக்கத்துக்கு எதிர் இயக்கத்தில் இருந்தது . கடந்த நவம்பர் 13 ஆம் தேதி ரிஷபத்தில் நுழைத்துவிட்டார்ர். தனது வீட்டினை ரிஷப ராசியிலிருந்து வக்ரம் கொண்டு அடுத்த 45 நாட்களும், வக்ரம் நிவர்த்தி பெற்று 45 நாட்களும் பார்வையிடுகிறார்
செவ்வாயின் இந்த வக்ர நிலை 12 ராசிகளிலும் கண்டிப்பாக சில பலன்களை ஏற்படுத்தும். அதில் குறிப்பாக
மேஷம் ,ரிஷபம் ,மிதுனம்,துலாம் ,மீனம் போன்ற ராசிகள் கவனத்துடன் இருப்பது நல்லது
பெண்களுக்கு அடி வயிறு ,கர்ப்பபை சம்மந்தபட்ட அறுவை சிகிச்சை அதிகமாக நடக்கலாம்
அதே நேரம் குழந்தையில்லாத தம்பதிகள் , மருத்துவ உதவியுடன் குழந்தை பெறுவதற்கு இது சிறந்த காலம்.
மேஷம்
செவ்வாயின் இந்த வக்ர நிலை மேஷ ராசியினரின் ஆரோக்கியம் மோசமடைய அதிக வாய்ப்புள்ளது. உணவு விஷயத்தில் சற்று அதிகம் கவனம் எடுத்துக்கொள்வது நல்லது . உத்தியோகத்தர்களும், தொழில் சார்ந்த விஷயங்களில் வீண் பழி கேட்க நேரிடலாம் .திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பணம் சார்ந்த விஷயத்தில் ரிஸ்க் எடுப்பதை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள்.உங்களின்
ரகசியம் உடைய வாய்ப்புள்ளது
மீனம்
செவ்வாயின் இந்த வக்ர நிலை மீன ராசியினருக்கு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிறிய அளவிலான விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இருசக்கர வாகன பயன்பாட்டில் கவனம் தேவை.
துலாம்
செவ்வாயின் இந்த வக்ர நிலை துலாம் ராசியினருக்கு செய்யும் தொழிலில் மந்தமும், உத்தியோகத்தில் வாக்குதற்கவும் . பொதுவாக செவ்வாய் கிரகத்தின் மோசமான விளைவுகளினால் உங்களின் வேலையில் தடைகள் உண்டாகும் வாய்ப்புகள்
உள்ளது
மிதுனம்
செவ்வாயின் வக்ர நிலை மிதுன ராசியினருக்கு தொழிலில் மந்தமும், வேலை செய்யும் இடத்திலும் ,குடும்பத்திலும் வார்த்தைகளை அளவோடு பயன்படுத்துவது நல்லது