கிரக நீசங்கள்
கிரகங்கள் நீசம் பெற்றால் கீழ்க்காணும் நீசபலன்கள் இருக்கும் என்று அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் எனும் நூல் குறிப்பிடுகின்றது.
சூரியன் நீசம்
சூரியன் நீசம் அடைந்தால் உஷ்ண சம்பந்த வியாதியால் வருந்த நேரும். தந்தையின் ஆரோக்கியம் மற்றும் உறவு முறை சரிப்படாது. அறிவு ஆராய்ச்சி உள்ளவராக இருப்பர். தீயகுணம் நடத்தையுள்ளவராகவும் இருப்பர்.
சந்திரன் நீசம்
சந்திரன் நீசம் அடைந்தால் பெற்றோர் சுகம் இழந்தவராக இருப்பர். பயந்த சுபாவமுள்ளவர். ஆரோக்கியமும் குறைந்திருக்கும் சுய நலவாதியாக இருப்பர், சீதள சம்பந்தமான வியாதிகள் ஏற்படும். நீரில் கண்டமும் இருக்கும். பெண்களால் பல வகையிலும் தொல்லை அனுபவிப்பவராக இருப்பர்.
செவ்வாய் நீசம்
செவ்வாய் நீசம் அடைந்தால் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவது கடினம். குடும்பத்தில் கலகம், பல வித பிரச்சினைகள் நிறைந்திருக்கும். மூளை பாதிப்பும் அது சம்பந்தமான நோய்க்கும் ஆளாக நேரும். வீடு, நிலம் போன்றவை இருந்தாலும் அதனால் தொல்லைகளே இருக்கும். நன்மை இருக்காது. வசதி குறைந்திருக்கும்.
புதன் நீசம்
புதன் நீசம் அடைந்தால் கல்வியில் தடை இருக்கும். வாழ்க்கையில் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்களுக்கு விரோதியாக இருப்பர். காம இச்சை மிகுந்தவராக இருப்பர். புத்திரர்களால் எந்த நன்மையும் பெற முடியாது. பழி பாவத்திற்கு ஆளாக நேரும்.
குரு நீசம்
குரு நீசம் அடைந்தால் தீயவராக பழி பாவத்திற்கு அஞ்சாதவராக இருப்பர். கல்வி கற்றாலும் அதனால் பயன் பெறாதவராவர். ஆசாரம் இல்லாதவர். கரு உற்பத்தியில் சிதைவு காட்டும். புத்திரர்கள் இருப்பின் அவர்களால் தொல்லை மிகுந்திருக்கும்.
சுக்கிரன் நீசம்
சுக்கிரன் நீசம் அடைந்தால் களத்திர சுகங்கள் குறைவு, பெண்கள் வகை ஆதாய அனுகூலங்கள் குறைவு, சுகத்தானம் பலம் இழத்தல், ஆடை, ஆபரண வசதிகள், வண்டி வாகன வசதிகள் குறைவு, பால் பசு, தாயினால் கிடைக்கக் கூடிய சுகங்கள் இன்மை, செல்வவளம் குறைதல், கால்நடைகள் நன்மை தராது இருத்தல் ஆகியன ஏற்படும்.
சனி நீசம்
சனி நீசம் பெற்றிருந்தால் தீயகுணம் முரட்டுத்தனம் மிக்கவராக இருப்பர். பிறர் வெறுக்கும் காரியங்களைச் செய்வர். ஆரோக்கியம் குன்றி இருக்கும். கீழான பெண்களுடன் அல்லது ஊனமுற்ற பெண்களிடம் தொடர்பு கொண்டு இருப்பார். சோம்பல் மிகுந்து இருக்கும். வறுமை இருக்கும். மனைவிக்கு தோஷம் உண்டு அல்லது மனைவியை விட்டுப் பிரிந்தவராக இருப்பர்.
ராகு நீசம்
ராகு நீசம் பெற்றிருந்தால் எதற்கும் குதர்க்கம் பேசுபவராக இருப்பர். தர்க்கவாதம் புரிவர். எதையும் யோசித்து செய்ய மாட்டார்கள். இருந்தாலும் செய்யும் காரியங்களில் தீவிரமும், அக்கறையும் காட்டுவர். பித்தத் தொடர்பான வியாதி காட்டும். ஆயுதங்களால் தொல்லை ஏற்படும். குடும்பத்தில் வெறுப்புற நேரும்.
கேது நீசம்
கேது நீசம் பெற்றிருந்தால் பிறரையும் தம்மைப் போல எண்ணும் சுபாவம் உடையவராக இருப்பர். ஆன்மீகத்துறையில் ஈடுபாடும் அத்துறைக்கு தலைமை ஏற்று நடத்தும் வாய்ப்பும் சில காலம் கிட்டும். தாய்வழி உறவினருக்கு தோஷம் காட்டும். மருந்து மாந்தீரிகத்தினால் தொல்லைகளை அனுபவிக்க நேரும்.
Coming soon future articles Jothida chakram
நீச்சம் என்றால் என்ன ?
நீசம் என்றால் என்ன ?
சனி நீசம்
சந்திரன் நீசம்
குரு நீசபங்கம்
குரு நீசம் பரிகாரம்
நீச பரிவர்த்தனை
நீசபங்க ராஜ யோகம் பலன்கள்