ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017-2019 மேஷம் முதல் மீனம் வரை
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017-2019 மேஷம் முதல் மீனம் வரை வரை
மேசம்
- உங்கள் ராசிக்கு நான்காவது ராசியில் ராகுவும் பத்தாம் ராசிக்கு கேதுவும் மாற இருக்கிறார்கள் ..நான்கில் தாய்க்கு
மருத்துவ செலவினையும் முட்டுவலி வாதம் ,பித்தம் போன்றவற்றை தரும்...பத்தில் கேது
வருவதால் புதிய
முதலீடுகள் வேண்டாம் .,வாகனம்
சார்ந்த விசயத்தில் கூடுதல் கவனம் தேவை.
அலைச்சல்
இருந்தாலும் ..பண வரவில் குறை
இருக்காது....வரும் டிசம்பர் மாதத்துடன் உங்களுக்கு அஷ்டம சனி முடிகிறது...ஆவணி 10 முதல் குரு பெயர்ச்சியும் உங்களுக்கு யோகமாகவே இருக்கிறது...அதனால் பல கஷ்டங்கள் இந்த
வருடக்கடைசிக்குள் தீரும்..தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வீட்டில் சுபகாரியம் நடைபெறும்.. முருகன் வழிபாடு செய்வது நல்லது
ரிசபம்
-உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்துக்கு ராகு வருகிறார் கேது ஒன்பதாம் இடத்துக்கு மாறுகிறார்..மூன்றாமிடத்து ராகு யோகமானது ஆனாலும் சகோதரர்களுடன் வாக்கு தர்க்கம் வராமல் பார்த்து கொள்வது நல்லது .தொழிலில் நல்ல கிடைக்கும் .கேது ஒன்பதாவது ராசிக்கு வருகிறார்..
இது தந்தைக்கோ ,சகோதரர்களுக்கு மருத்துவ
செலவினத்தை உண்டாக்கும்..மகான்களின் ஆசியோடு நீண்ட
நாள் விரும்பிய தீர்த்த யாத்திரைக்கு செல்வீர்கள்.பண வரவு திருப்தி
தரும்.அஷ்டம சனி பற்றி பெரிதாக கவலை வேண்டாம்....ஆனாலும் குடி
இருக்கின்ற வீடோ ,அலுவலகமோ மாற்றும் சூழல் வரலாம் சுக்கிரன் ராசி என்பதால் உங்களுக்கு சனி
அதிகம் கெடுதல்
செய்ய மாட்டார்..சகோதரர்கள் வழியில் விரய செலவுகள் காணப்படும்... பெளர்ணமி தினத்தில் இஷ்ட தெய்வ வழிபாடு நல்லது
மிதுனம்
-உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்துக்கு ராகு
வருகிறார்..கேது ராசிக்கு எட்டில் வருகிறார் .கணவன் மனைவிக்கிடையே வாக்கு தர்க்கங்களோ கை கலப்போ ஏற்படலாம்
..உங்கள் துணையின் உடல் விஷயத்தில் கொஞ்சம் அக்கரை கட்டுவது நல்லது
தன
ஸ்தானத்தில் ராகு வருவது விஷேஷம் ..சில காலங்களாக குழம்பி கொண்டிருந்த ஒரு விஷயத்திற்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள் ..அதே சமயம் உங்கள் பேச்சால் பல குழப்பங்களும் குடும்பத்தில்
உண்டாக்கும்.பணம் நிறைய வரும்.. அனாவிசிய செலவும் வரும்.காரணம் ராகு மாயை கிரகம் ...
ஆண்களுக்கு
சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகளும் பெண்களுக்கு
கர்ப்பபை சார்ந்த பாதிப்புகளை தரும்.
ராசிக்கு
அஷ்டம சனி ஏழரை சனி எதுவும் இல்லை.குருபெயர்ச்சியும் நன்றாக இருக்கிறது அதனால் பெரிய அளவில் இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களை பாதிக்காது.சனி தோறும் பெருமாளை வழிபடுவதும் கண்ணனை வழிபடுவதும் நல்லது.
கடகம்
-உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் ராகு வருவது இங்கு தோஷத்தை விளைவிக்காது .ராகுவிற்கு கடகம் பகை வீடானாலும் நல்லதையே செய்யும் .. உங்கள்
திறமைகளுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும் .பிறர்
விமர்சனங்களை மனதில் போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள்...பணம் வாங்குதல் மற்றும் கொடுத்தலை தவிர்ப்பது நல்லது ..நட்பாக பழகி விட்டு உங்களை ஏமாற்றும் சர்பங்களிடம் இருந்து உங்களை காப்பாற்றும்
ஜென்ம
ராகு
ராசிக்கு
ஜென்மத்தில் ராகு வருவது ,முன்கோபத்தை உண்டாக்கும்.உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை விடாமல் தவிர்ப்பது நல்லது .கடகம் சந்திரனின் ராசி அதனுடன் ராகு சேரும்போது கிரகண தோசம் ஆகிறது.தோல் சம்பந்த பட்ட வியாதிகளோ ,தலைவலியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் .
வெள்ளிதோறும்
முருகனை வழிபடுங்கள் .
சிம்மம்
-.ராசியில்
நின்ற ராகு உங்கள் திறமைகளை பிறர் குறைத்து மதிப்பிட செய்தது மேலும் சில
அவமான நிகழ்வுகள் ,மன அழுத்தம்க மற்றும்
கவலைகளை கடந்த காலங்களில் ஜென்ம ராகு உண்டாக்கியது.இனி அந்த மனக்கஷ்டங்கள் அனைத்தும் விலகபோகிறது ..ராசிக்கு 12ல் செல்லும் ராகு
திடீர் அதிர்ஷ்டங்களை உண்டாக்குவார் உங்களுக்கு துணிச்சல் மற்றும் தைரியம் உண்டாக்குவார் ..
ஜென்ம
ராகு தந்த பகைவன் நண்பன் ஆவான் ..போன தொகை திரும்ப வரும் . கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும்..தொழில் செய்யுமிடத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும்.6ஆம் ராசிக்கு செல்லும் கேது சில உடல்பாதிப்புகளையும் காயங்களையும் தந்தாலும் விரைவில் குணமாகும் ..சிவ வழிபாடு சிறப்பு தரும்.
கன்னி
:கன்னி ராசியினருக்கு பதினொன்றாம் வீடாகிய லாப ஸ்தானத்துக்கு ராகு சென்றிருக்கிறார்...பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ஆம் ராசிக்கு கேது செல்கிறார் ..புதிய காரியங்கள் செய்வதற்கு உகந்த நேரம் இல்லை .ஆனால் முதலிலேயே நீங்கள் துவங்கி தடை பட்ட காரியங்கள் இனி எந்த சிரமமும் இல்லாமல் முன்னேறி செல்லும் ..5ஆம் இடத்தில வரும் கேது வயிற்றுக்கு பிரச்சனைகளை தரும்
. விரைவில்
நல்ல செய்தி வந்து சேரும்.நிம்மதி அடைவீர்கள்
துலாம் -உங்கள்
ராசிக்கு பத்தாம் இடத்தில் ராகு வருகிறார் நான்காம் இடத்தில் கேது வருகிறார்..தொழிலுக்கும்
வருமானத்திற்கும் எந்த பாதிப்பும் இல்லை.. . நண்பர்கள் கேட்காமலேயே உதவி செய்வார்கள்
. தடை நீங்கி நல் வழி கிடைக்கு..நட்புகள் ஒன்று சேரும்.குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும்
தாய்க்கு பாதகமான காலம் ஆகும்
நீண்ட தூர
பயணத்தை தனியாக செல்வதை தவிர்ப்பது நல்லது ..சிலர் வீடு மற்றும் பணி இடம் மாற்றுவார்கள்
.உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருங்கள் .ஏழறை சனி முடியும் கால கட்டத்தில்
எப்படி பெரிய தொல்லைகள் ஒன்றும் இல்லையோ அது போல
ராகு கேதுக்கள் உங்களை பெரிதாக தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று நம்பலாம்
....லாபத்தில் குறை வைக்க மாட்டார்கள்.
விருச்சிகம்
-தற்போது உங்களை மிரட்டி ஆட்டி படைத்து நிற்கும் சனி அளவிற்கு இங்கு பாம்புகளின் பெயர்ச்சி
உங்களை பயப்படுத்துவதில்லை .ஒன்பதாம் ராசிக்கு செல்லும் தந்தை வழி சொந்தங்களால் இடைஞ்சல்
வரும் அது மட்டுமில்லாமல் தந்தைக்கோ தாய்க்கோ உடல் பலவீனமும் முட்டு வலியும் வயிறு
சம்பந்தமான பிரச்சனைகளை தரும் ...குடும்பத்தில் மனக்கசப்புகள் விலகும் சொத்துக்கள்
சிலர் வாங்குவர் கடன் பாக்கிகள் குறையும்..
மூன்றாம்
இடத்து கேது சகோதர வழியில் சிலருக்கு நிம்மதி குறைவை உண்டாக்கும்..மறைந்த கேது நிறைந்த
பாக்கியங்களை தரும் என்று சொல்கிறது சாஸ்திரம் ..உங்கள் நீண்ட நாள் எதிர்பார்ப்புகள்
நிறைவேறும் காலம் இது.ராகு கேதுகள் உள்ள கோவிலில் சென்று வினாயகரை வழிபட்டால் வீண் பயம்,கவலைகள் தீர்ந்து
தெளிவு பிறக்கும்.
தனுசு .எட்டாமிடத்து
ராகு கஷ்டத்தை கொடுப்பார்..உங்களை துஷ்டன் என்று பெயர் வாங்க வைப்பார் .நீங்கள் செய்யும்
உதவி உங்களுக்கே பிரச்னையாக வந்து முடியும் என்பதால் எங்கும் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது ...குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக வரப்போவதால்
ஆறுதல் அடையலாம் எட்டாம் இடத்து ராகு விஷத்தினால்
கண்டம்..அரசால் பாதகம்.பணி செய்யும் இடத்தில யாருடனும் வீண் விவாதங்களில் ஈடு
பட வேண்டாம் ..கேது தன ஸ்தானத்தில் இருப்பதால் வருமான தடை ,பண முடக்கம் ஏற்படும் .
ராகு கேது திசை நடப்பவர்கள் ராகு ஸ்தலம் சென்று வழிபாடு செய்து கொள்ளுங்கள்
மகரம் -உங்கள்
ராசிக்கு ஏழாமிடத்தில் ராகு வருகிறார் .இல்லற வாழ்க்கையில் குழப்பங்களை தருவதற்கு தயங்க
மாட்டார் .உங்கள் துணையின் குடுத்பத்திடம் இருந்து வீண் வம்பு வழக்குக்குள் வருவதற்கு
வாய்ப்புகள் உண்டு அதனால் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது ..உங்கள் ஜென்ம ராசியில்
சஞ்சரிக்கும் கேது தலை வலி ..முகத்தில் வெண் படலம் போன்றவற்றை தரும் ..
7ஆம் இடத்து
ராகு துணையால் மட்டுமல்ல கூட்டாளிகளால் நண்பர்களால் குழப்பத்தை ஏற்படுத்துவார்...நஷ்டத்தை
ஏற்படுத்துவார் பங்கு தொழிலில் இருப்பவர்கள் கவனமுடன் இருப்பது இன்னேரம் நல்லது
கும்பம்
-உங்களுக்கு ஜென்மத்தில் இருந்து வந்த கேது விரய ஸ்தானத்துக்கு சென்று விட்டதால் இன்னேரம்
நீங்கள் சற்று நிம்மதி பெரு மூச்சு விடலாம் ...6ஆம் இடத்துக்கு ராகு நகர்ந்து விட்டதால்
குடும்பத்தில் நீங்கள் மகிழும் படியான சுப காரியங்கள் நடக்கும் ...6ஆமிடத்து ராகு எதிரிகளை
எதிரிகளை அழிக்கும் நோய்களை விஷத்தை உறிஞ்சுவதை போன்று உறிஞ்சி எடுக்கும் ராகு ..
.மறைந்த ராகு யோகமான ராகுவாகும்...தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும் ..மனைவியுடன்
உண்டான சண்டை சச்சரவுகள் விலகும் வருமானம்
அதிகரிக்கும் பணப்பிரச்சினைகல் தீரும்.. புதிதாக சொத்துக்கள் வாங்குவர்.பழைய கடன்கள்
அடைபடும் .
மீனம்
-உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு வருகிறார் நீண்ட நாட்களாக தடை பெற்றிருந்த வெளி நாட்டு யோகம் உங்களுக்கு கை கூடும்
... குழந்தைகள்
வழியில் ஆரோக்கியம் பாதிக்கப்படும்..5ஆம் இடம் வெற்றி ஸ்தானம்,,அங்கு ராகு வருவதால் வெற்றிகள் தள்ளிப்போகும்இருப்பினும் கேது லாப ஸ்தானத்துக்கு வருவது நல்ல பலன்களை செய்யும்.லாபத்தில் பாம்பு வந்தால் பதவிகள் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம் வருமானம் பெருக்கும்..ஆதாயம் அதிகரிக்கும் கடன்கள் தீரும்..குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்..பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.