பிள்ளை வரம் தரும் பெருமாள் .
பல்லவ மன்னர்களின் இறுதி கால மன்னன் அபராஜிதன் எல்லாவளமும் பெற்றிருந்தும் தனக்கு பின் நாடாள
ஒரு வாரிசு இல்லாமல் வருந்தினான் .ஒரு சமயம் அருங்குள பகுதிக்கு வேட்டை ஆட சென்றான் ..வேட்டை முடிந்ததும் அருகிலுள்ள குளத்தில் படுத்து உறங்கினான் அப்போது அவன் கனவில் திருமால் எழுந்தருளி இந்த
குளக்கரையில் எனக்கு ஆலயம் எழுப்பு என்கிறார் ..கனவை நிஜமாக்க அங்கே அவன் ஒரு கோவிலை கட்டினான் ..மகாவிஷ்ணுவுக்கு ஆலயம் கட்டியதன் மூலமாக அவனது குறை தீர்ந்து வாரிசு உண்டானது ..இதனால் மகிழ்ந்த மன்னன் ஆலய திருப்பணிக்கு நிலம் அளித்தான் ,நீடுவாழ்ந்தான் என்கிறது ஸ்தல புராணம் ..

கருவறையில் கல்யாண வரதராஜர் ஸ்ரீ தேவி ; பூதேவி தாயார்களுடன் சேவை சாதிக்கிறார் ..பிரகாரத்தில் ஆண்டாள் கருடன் மற்றும் ஆனந்த பத்மநாபனுடன் இணைந்த நாகர்கள் உள்ளனர் ..அபய ஆஞ்சநேயராக விளங்கும் அனுமன் பச்சை நிறக்கல்லில் சுமார் 4 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி தருகிறார் ..வலக்கை அபய முத்திரை காட்டி இடக்கரம் தாமரை மொட்டினை தாங்கி இருக்க வித்தியாசமான பிரபையுடன் காட்சி தரும் இவரது தோற்றம் பிரமிக்க வைக்கிறது
பக்தர்களுக்கு கல்யாண பாக்கியம் அருளும் பெருமாள் பிள்ளை வரமும் தந்து அருள்வதாக சொல்கிறார்கள்
(திருத்தணி -சென்னை தேசிய நெடுஞ்சாலை கிழக்கே 8 கி .மி ..தொலைவில் உள்ள அருங்குளம் கூட்ரோட்டில் வடக்கே 3 கி .மீ தொலைவில் உள்ளது அருங்குளம் .).